படைகள் வாபஸ் எப்போது? சீனாவுக்கு இந்தியா கேள்வி

Added : ஏப் 21, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
பீஜிங் : 'லடாக், பொது எல்லைக் கோட்டில் அமைதியை விரும்பும், இந்திய - சீன தலைவர்களின் கருத்தை மதித்து, சீன ராணுவம் படைகளை முழுமையாக வாபஸ் பெற வேண்டும்' என,இந்தியா வலியுறுத்தி உள்ளது.பதற்றம்கடந்த ஆண்டு, கிழக்கு லடாக்கில் எல்லைக் கோடு அருகே, சீன ராணுவம் அத்துமீற முயன்றது. இதை நம் ராணுவம் தடுத்ததை அடுத்து, பதற்றம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, இரு நாட்டு ராணுவ
India, China, LAC, இந்தியா, சீனா, எல்லை பிரச்னை

பீஜிங் : 'லடாக், பொது எல்லைக் கோட்டில் அமைதியை விரும்பும், இந்திய - சீன தலைவர்களின் கருத்தை மதித்து, சீன ராணுவம் படைகளை முழுமையாக வாபஸ் பெற வேண்டும்' என,இந்தியா வலியுறுத்தி உள்ளது.


பதற்றம்


கடந்த ஆண்டு, கிழக்கு லடாக்கில் எல்லைக் கோடு அருகே, சீன ராணுவம் அத்துமீற முயன்றது. இதை நம் ராணுவம் தடுத்ததை அடுத்து, பதற்றம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இடையே நடந்த 11 கட்ட பேச்சுக்குப் பின், இரு மாதங்களுக்கு முன், லடாக்கின் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில், பாங்காங் ஆற்றோரம் நிறுத்தப்பட்டிருந்த, சீன படைகள் வாபஸ் வாங்கின. எனினும், இதர இடங்களில் இருந்து இன்னும் சீன ராணுவம் வெளியேறாமல் உள்ளது.

இந்நிலையில், பீஜிங்கில், இந்திய உலக விவகாரங்கள் கழகம் மற்றும் சீன வெளிவிவகாரங்கள் மையத்தின் கூட்டம் நடந்தது. இதில், சீனாவுக்கான இந்திய துாதர் விக்ரம் மிஸ்ரி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பேசியதாவது: இந்திய - சீன தலைவர்கள் ஏற்கனவே நடத்திய பேச்சில், பொது எல்லை கோட்டில் அமைதியை பராமரிக்க வேண்டும் என, ஒருமித்த கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், சிலர் இந்த கருத்தை, முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல, மறைக்க முயற்சிக்கின்றனர். எல்லையில் நடப்பதை ஏதோ மிகச் சிறிய பிரச்னை போன்ற தோற்றத்தைஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.


latest tamil news




பிரச்னை


இது, இரு நாடுகளின் நல்லுறவுக்கும், அமைதிக்கும் இரு தலைவர்கள் பரஸ்பரம் அளித்த உறுதிமொழிக்கு நேர் எதிர்மாறான நிலைப்பாடு. பிரச்னையை திசை திருப்பும் இத்தகைய முயற்சியை ஒருபோதும் ஏற்க முடியாது. சீன படைகள், பொது எல்லைக் கோட்டில் இருந்து முழுமையாக வெளியேறினால் தான், இரு நாடுகளின் நல்லுறவு வலுப்பெறும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனி - Bangalore,இந்தியா
21-ஏப்-202108:41:40 IST Report Abuse
சீனி 5 கிமீ முன்னேறினால், 3 கிமீ பின்வாங்குவான், இப்படித்தான் தொடர்ந்து ஆக்கிறமிப்பான் குள்ளக்குள்ளநரி, தொடர்ந்து போராடி வெற்றிபெறுவதே நம் குறிக்கோளாக இருக்கவேண்டும், முடிந்தால் நாமும் சீனப்பகுதிகளை பலமுனைகளில் ஆக்கிரமிக்கவேண்டும். இதற்க்கு ஒரே நிரந்தர தீர்வு திபெத் விடுதலைதான், அதை நோக்கிதான் நம் நீண்டகால நகர்வு இருக்கவேண்டும்.
Rate this:
Cancel
oce -  ( Posted via: Dinamalar Android App )
21-ஏப்-202107:40:28 IST Report Abuse
oce அவனை எதுக்கு கெஞ்ச வேண்டும்.உலகத்தையே அழிக்கிறான். ட்ரம்ப் இருந்தால் சீனாக்காரனை ஒரு வழி பண்ணி இருப்பார். ஜொபிடன் ஒரு வழ வழா கொழ கொழா பேர்வழி. குந்தகமான ஆள்.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
21-ஏப்-202106:29:18 IST Report Abuse
M  Ramachandran குள்ளநரி சீனா தன்னை தயார்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறது என்பது தெரிகிறது. நாம் சப்பை முக்கு க்கு தலைமையை நம்பாகூடாது. நம்பிக்கை துரோக மனநிலையை உடையவர்கள். அவர்களை நிர்பந்த படுத்தி ஏதாவது ஒரு நிலை எடுக்க நிர்பந்திக்கவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X