தடுப்பூசிக்கான மூலப்பொருள் தடையை நீக்குமா அமெரிக்கா

Updated : ஏப் 21, 2021 | Added : ஏப் 21, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
வாஷிங்டன் : 'கொரோனா தடுப்பூசி தயாரிக்க தேவையான மூலப் பொருளுக்கான இந்தியாவின் தேவையை அறிவோம். அது குறித்து ஆராயப்படுகிறது' என அமெரிக்கா கூறியுள்ளது.கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசிகளை அமெரிக்காவைச் சேர்ந்த பைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன.உலகிலேயே அமெரிக்காவில் தான் அதிக பாதிப்பு உள்ளதால் முதலில் உள்நாட்டு தேவையை கவனிக்கும் வகையில்
Corona Vaccine, Covid Vaccine, America, USA

வாஷிங்டன் : 'கொரோனா தடுப்பூசி தயாரிக்க தேவையான மூலப் பொருளுக்கான இந்தியாவின் தேவையை அறிவோம். அது குறித்து ஆராயப்படுகிறது' என அமெரிக்கா கூறியுள்ளது.

கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசிகளை அமெரிக்காவைச் சேர்ந்த பைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன.உலகிலேயே அமெரிக்காவில் தான் அதிக பாதிப்பு உள்ளதால் முதலில் உள்நாட்டு தேவையை கவனிக்கும் வகையில் போர்க்கால ராணுவ உற்பத்தி சட்டம் அமலுக்கு வந்தது.


பாதிப்பு


அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப் இந்த உத்தரவை பிறப்பித்தார். தற்போதைய அதிபர் ஜோ பைடனும் அதைநீட்டித்துள்ளார். இந்த சட்டத்தின்படி அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் வர்த்தக இழப்பு ஏற்பட்டாலும் உள்நாட்டுக்காக மட்டுமே தயாரிக்க வேண்டும். இதனால் கொரோனா தடுப்பூசிக்கான மூலப்பொருள் கிடைக்காததால் இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.


latest tamil newsஅமெரிக்காவுக்கான இந்தியத் துாதர் தரன்ஜித் சிங் சாந்து இது குறித்து ஜோ பைடன் நிர்வாகத்துடன் பேசி வருகிறார். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளின்கென் உடனான தொலைபேசி உரையாடலின்போது நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ளார்.


சரியான முடிவு


ஆனால் எந்த மூலப்பொருள் தேவை என்பது குறித்த தகவல்கள் மட்டும் வெளியாகவில்லை. இது குறித்து அமெரிக்க உயரதிகாரிகள் கூறியுள்ளதாவது: இந்தியாவின் தேவையை உணர்ந்துள்ளோம். நாங்கள் ஏற்றுமதிக்கு தடை விதிக்கவில்லை. அதே நேரத்தில் ராணுவ உற்பத்திசட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் தேவையை நிறைவேற்றுவது குறித்து ஆராயப்படுகிறது. விரைவில் சரியான முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள்கூறியுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-ஏப்-202121:19:48 IST Report Abuse
ஆப்பு அமெரிக்கா உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு. அங்கே அத்தியாவசியப் பொருட்கள் ஏற்றுமதி தடை பற்றி ராணுவச் சட்டம் போடப்பட்டுள்ளது. அங்கே இன்னும் பல கோடி மக்களுக்கு தடுப்பூசி தேவைப்படுகிறது. அவிங்களுக்கு மருந்து உற்பத்தி செய்யாமல் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்தால் அங்கே கிழிச்சு தொங்க விட்டு விடுவார்கள். நாம என்னவோ அவிங்க தரமாட்டேங்குறாங்கன்னு பொங்கறோம். அவிங்க குடுத்திட்டா, பாராட்டு கூட கிடையாது. எல்லா மெடலையும் வாங்கிக் குத்திப்போம். அவன் வாயில் விரலை வெச்சுக்கிட்டு உக்காந்திருப்பான். ஏன், ரஷ்யா, ப்ரான்ஸ், சீனா கிட்டே கேட்டுப் பாக்கறதுதானே...
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
21-ஏப்-202114:45:15 IST Report Abuse
Ramesh Sargam Americans like these two words very much - BAN AND SANCTIONS If they struggle to achieve anything they use these two 'weapons' - yes, BAN AND SANCTIONS.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
21-ஏப்-202111:00:12 IST Report Abuse
S. Narayanan Thanks to jeo bidan sir
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X