பட்டினியை ஒழிக்கும் முயற்சிகள் வீண்: ஐ.நா.,வில் ஹர்ஷ் வர்தன் கவலை

Updated : ஏப் 21, 2021 | Added : ஏப் 21, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
நியூயார்க் : “கொரோனா நெருக்கடியால் 2030க்குள் பட்டினியை ஒழிக்க நாம் எடுத்துவரும் முயற்சிகள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது” என ஐ.நா. மாநாட்டில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறினார்.ஐக்கிய நாடுகள் சபையில் மக்கள் தொகை உணவுப் பாதுகாப்பு ஊட்டச் சத்து மற்றும் வளர்ச்சிக்கான ஆணையத்தின் 54வது மாநாடு நேற்று முன்தினம் நடந்தது.இதில் நம் மத்திய சுகாதாரத் துறை
Harsh Vardhan,UN,United Nations,Union health minister, ஐநா, ஐக்கிய நாடுகள் அவை

நியூயார்க் : “கொரோனா நெருக்கடியால் 2030க்குள் பட்டினியை ஒழிக்க நாம் எடுத்துவரும் முயற்சிகள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது” என ஐ.நா. மாநாட்டில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறினார்.

ஐக்கிய நாடுகள் சபையில் மக்கள் தொகை உணவுப் பாதுகாப்பு ஊட்டச் சத்து மற்றும் வளர்ச்சிக்கான ஆணையத்தின் 54வது மாநாடு நேற்று முன்தினம் நடந்தது.இதில் நம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பங்கேற்றுப் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து சார்ந்த விஷயங்களுக்கு இந்திய அரசு தொடர்ந்து முன்னுரிமை வழங்கி வருகிறது.இதில் எந்த விதத்திலும் சமரசம் செய்ய மாட்டோம். கடந்த சில ஆண்டுகளில் அறிமுகம் செய்யப்பட்ட தேசிய அளவிலான திட்டங்கள் அதற்கு சிறந்த சான்று. இதேபோல் விவசாயிகள், தினக்கூலிகள், பெண்கள், சுய உதவி குழுக்கள், ஏழை குடிமக்கள் உள்ளிட்டோருக்கு இந்த இக்கட்டான சூழலில் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறோம்.


latest tamil newsஇந்த கொரோனா நெருக்கடி காலத்தில் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் போதிய உணவும் ஊட்டச்சத்தும் கிடைக்காமல் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வரும் 2030ம் ஆண்டுக்குள் உலகில் பசி பட்டினியை ஒழிக்க நாம் எடுத்து வரும் முயற்சிகள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kijan - Chennai,இந்தியா
21-ஏப்-202110:11:10 IST Report Abuse
kijan பழுதெண்ணும் மந்திரியிற் பக்கத்துள் தெவ்வோர் எழுபது கோடி உறும் - தவறான வழிகளை எண்ணி கூறுகின்ற அமைச்சனை விட எழுபது கோடி பகைவர் பக்கத்தில் இருந்தாலும் நன்மையாகும்
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
21-ஏப்-202108:36:18 IST Report Abuse
சீனி அவர் சொல்லவந்தது, கொரோனா வந்து பட்டினியை குறைக்கமுடியவில்லை என்பதே. கொரோனா முடிந்தவுடன், மீண்டும் நிலை சரியாகிவிடும். இது மற்ற நாடுகளுக்கு கொரோனா பரவும் முன் எடுக்கும் முன்னெச்சரிக்கையாகும், ஐநா செயல்படவேண்டும் என்பதே தவிர, இந்தியாவில் பட்டினி அதிகமாகிவிட்டது என்பதல்ல.
Rate this:
Cancel
21-ஏப்-202106:58:01 IST Report Abuse
தமிழ் குடிமகன் கருத்து சொல்லும் அறிவு ஜீவிகளுக்கு.. இதை வைத்து தான் காங்கிரஸ் ஐம்பது வருட அரசியல் செய்தது !!!
Rate this:
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன்இந்த கொரோனா நெருக்கடி காலத்தில் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் போதிய உணவும் ஊட்டச்சத்தும் கிடைக்காமல் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். - என்று சொல்கிறார் மந்திரி அதனால்தான் பஞ்சபடியை உயர்த்தாமல் நிறுத்தி விட்டார்களோ?அதன் INDIRECT EFFECT - மத்தியதர வர்க்கத்தினர் செலவு செய்வதை குறைத்து விடுவார்கள் வீட்டு வேலைக்காரியை நிறுத்தி விடுவார்கள் பிச்சை போடக்கூட யோசிப்பார்கள் கருத்து சொல்லும் அறிவு ஜீவிகளுக்கு .. இதை வைத்து தான் காங்கிரஸ் ஐம்பது வருட அரசியல் செய்தது அதே வழியை நாமும் பின்பற்றுகிறோமோ "குடிமகன்"?...
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
21-ஏப்-202114:33:37 IST Report Abuse
Mirthika Sathiamoorthiஎன்ன பேசுறீங்க நீங்க பேசுறதை பாத்தா காங்கிரஸ் நிவாரணம் குடுக்களை அதனால் இவர்களும் நிவாரணம் கொடுக்கலை மாதிரி இருக்கு...பொருளாதரம் முடங்கி இருக்கு நிறுவங்கள் ஊரடங்கால் முடங்கி இருக்கு..இப்போ நிதி கொடுத்து ஊக்குவிப்பது பிரேக்கை மிதித்துக்கொண்டே ஆக்சிலேட்டர் கொடுக்கறமாதிரி ஆகாது....நோய் தோற்று குறையட்டும், அப்புறம் நிதிஉதவி ராக்கெட்வேகத்தில் வாழ்வாதரத்தை உயர்தம்ன்னு சொல்லிட்டு, HUMAN HUNGER INDEX இல் இந்தியாவின் தரம் எவ்வளவுன்னு தெரியுமா? அவங்க கணிக்கும் முறையே தப்புன்னு சொன்ன கட்சியை சேர்ந்தவராச்சே...நீங்க பட்டினியை ஒழிக்க நாம் எடுத்து வரும் முயற்சிகள் வீணாகும் சொந்த கூட மன்னிச்சிரலாம்..ஆனா விவசாயிகள், தினக்கூலிகள், பெண்கள், சுய உதவி குழுக்கள், ஏழை குடிமக்கள் உள்ளிட்டோருக்கு இந்த இக்கட்டான சூழலில் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறோம்ன்னு சந்திரபாபு நாயுடு திருப்தி லட்டுக்கு பதிலா ஜிலேபி கொடுத்தாருன்னு விட்டீங்க பாரு ஒரு ரீலு அதுமட்டும் மன்னிக்கவே முடியாது......
Rate this:
Hari - chennai,சவுதி அரேபியா
21-ஏப்-202115:24:52 IST Report Abuse
Hariசீன வைரசு பாதிப்பு அதிகமாகத்தான் இருக்கும்போல தெரிகிறது உங்கள் கருத்துக்குல் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X