பொது செய்தி

இந்தியா

'கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உதவ முப்படைகள் தயார்'

Updated : ஏப் 21, 2021 | Added : ஏப் 21, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மாநிலங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு முப்படைகளும் தயாராக உள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ராணுவ உயரதிகாரிகளுடன் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று ஆய்வு செய்தார். 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் நடந்த இந்தக் கூட்டத்தில் மாநிலங்களுக்கு தேவையான உதவிகளை
Coronavirus, Rajnath Singh, Armed Forces

புதுடில்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மாநிலங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு முப்படைகளும் தயாராக உள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ராணுவ உயரதிகாரிகளுடன் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று ஆய்வு செய்தார். 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் நடந்த இந்தக் கூட்டத்தில் மாநிலங்களுக்கு தேவையான உதவிகளை செய்யும்படி ராணுவ அதிகாரிகளுக்கு ராஜ்நாத் சிங் உத்தரவிட்டார். இதையடுத்து மாநில அரசுகளுடன் ராணுவ உயரதிகாரிகள் பேசியுள்ளனர்.


latest tamil news



மாநிலங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு முப்படைகளும் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவ மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு வருவதாக ராணுவ உயரதிகாரிகள் தெரிவித்தனர். மாநில அரசுகளுக்கு தேவையான ஆக்சிஜன் படுக்கை வசதிகளை ஏற்படுத்தி தரும்படி டி.ஆர்.டி.ஓ. எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உள்ளிட்ட ராணுவ பொதுத்துறை நிறுவனங்களுக்கு ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
21-ஏப்-202112:14:08 IST Report Abuse
அசோக்ராஜ் துப்பறியும் சாம்பு என்ன சொல்றாரு? டுப்பாக்கியைக் கீளே போட்டுட்டு ஊசி குத்த போங்கடான்னு ஸொல்றாரா?
Rate this:
Cancel
Sitaraman Munisamy - SALEM,இந்தியா
21-ஏப்-202110:52:53 IST Report Abuse
Sitaraman Munisamy முப்படைகளை வைத்து போர் தன தொடுக்க முடியும். மருத்துவ பணி செய்ய முடியுமா . இப்படியும் ஒரு அமைச்சகம்
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
21-ஏப்-202109:27:56 IST Report Abuse
Lion Drsekar முப்படையினர்களை கௌரமாக நடத்தினால் போதும், சித்த மற்றும் ஆயோர்வேத மருந்துக்கு மாறுங்கள் வேரோடு அழிந்துவிடாலாம், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X