தயார்

Added : ஏப் 21, 2021 | கருத்துகள் (1) | |
Advertisement
தேனி மாவட்டத்தில் நேற்று வரை 18,196 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 17, 371 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இந்நிலையில் தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, கோவிட் கேர் மையங்கள், தேனி பழைய மருத்துவமனையில் 617 பேர் சிகிச்சையில் உள்ளனர். தேனி மருத்துவக் கல்லுாரி கொரோனா மாதிரி ஆய்வகத்தில் நாள் ஒன்றுக்கு 1500 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில் ஆய்வு எண்ணிக்கை

தேனி மாவட்டத்தில் நேற்று வரை 18,196 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 17, 371 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இந்நிலையில் தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, கோவிட் கேர் மையங்கள், தேனி பழைய மருத்துவமனையில் 617 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தேனி மருத்துவக் கல்லுாரி கொரோனா மாதிரி ஆய்வகத்தில் நாள் ஒன்றுக்கு 1500 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில் ஆய்வு எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதித்து சிகிச்சைக்கு வருபவர்களுக்கான மருத்துவமனை வலதுபுறம் உள்ள ஒருங்கிணைந்த கூடுதல் கட்டட வளாகத்தில் ஒருங்கிணைந்த கொரோனா சிகிச்சை வழிகாட்டுதல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதுதவிர 340 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட தனி வார்டு, 50 படுக்கைகள் கொண்ட அனைத்து வசதிகளுடன் கூடிய அதிதீவிர சிகிச்சை மையம், 40 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் உள்ள செயற்கை சுவாச சிகிச்சை வார்டு, செறிவூட்டப்பட்ட ஆக்சிஜன் செலுத்தும் வசதியுள்ள படுக்கை வார்டுகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

அமைப்புமுதல்வர் பாலாஜிநாதன் கூறுகையில், எப்போதும் இல்லாத அளவில் கொரோனா தொற்று பரவும் சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த நாட்களை மிக கவனமாக கடக்க மக்கள் ஆயத்தமாக வேண்டும். பாதிப்பு ஏற்பட்டு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளித்து உயிர்காக்கும் நடவடிக்கைக்காக கூடுதல் கட்டடத்தில் வழிகாட்டு மையத்துடன் கூடிய உயர்தர கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 450 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. இதுதவிர 10,000 லி., கொள்ளளவு உள்ள ஆக்சிஜன் சிலிண்டர் மேம்படுத்தப்பட்ட வினியோகத்திற்காக பயன்பாட்டில் உள்ளது. கலெக்டரிடம் கூடுதலாக மற்றொரு 10 ஆயிரம் லி., கொள்ளளவில் ஆக்சிஜன் சிலிண்டர் அமைக்க கோரிக்கை விடுத்துள்ளோம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sivasurya - zingchoco,சீனா
21-ஏப்-202112:48:44 IST Report Abuse
sivasurya தேனி மாவட்டத்தில் கொரனா அதிகரித்துள்ளது குறிப்பாக நூற்றுக்கு 85% சதவிகிதம் தேனி மாவட்டத்தில் கொரன தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது .ஆனால் தேனியில் உள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை ஆதலால் 100க்கு 85% சதவிகிதம் தேனி மாவட்டத்தில் கொரன தொற்றால் பாதிக்கப்பட்டு விட்டனர் என தகவல்.தேனியில் பொதுவாக மக்களில் ஐயிந்தில் இருவருக்கு கொரன தொற்று இருப்பதாக தகவல் குறிப்பாக நூற்றுக்கு 85% சதவிகிதம் தேனி மாவட்டத்தில் கொரன தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது எனவே அதிகாரிகள் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்றும் தேனி மாவட்டத்தில் இன்னும் கொரன தோற்று பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்று தொலைநோக்குப்பார்வையாகவும் உளவியல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X