பொது செய்தி

இந்தியா

பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமனுக்கு 'சீரம்' தலைவர் நன்றி

Updated : ஏப் 21, 2021 | Added : ஏப் 21, 2021 | கருத்துகள் (36)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்பை அதிகரிக்க, மத்திய அரசு நிதியுதவி வழங்கியதற்கு, 'சீரம் இன்ஸ்ட்டிட்யூட்' நிறுவன தலைமை செயல் அதிகாரி, அதர் பூனாவாலா நன்றி தெரிவித்துள்ளார்.மத்திய நிதியமைச்சகம், 'கோவிஷீல்டு' கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிக்கும், சீரம் நிறுவனத்திற்கு, 3,000 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. 'கோவாக்சின்' தடுப்பூசி
Serum Institute, PM Modi, FM Sitharaman,Adar Poonawalla, thanks

புதுடில்லி: கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்பை அதிகரிக்க, மத்திய அரசு நிதியுதவி வழங்கியதற்கு, 'சீரம் இன்ஸ்ட்டிட்யூட்' நிறுவன தலைமை செயல் அதிகாரி, அதர் பூனாவாலா நன்றி தெரிவித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சகம், 'கோவிஷீல்டு' கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிக்கும், சீரம் நிறுவனத்திற்கு, 3,000 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. 'கோவாக்சின்' தடுப்பூசி மருந்து தயாரிக்கும், பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு, 1,500 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. இதனால், சீரம் நிறுவனத்தின் தடுப்பூசி தயாரிப்பு இரு மடங்கு உயர்ந்து, 20 கோடி, 'டோஸ்' ஆக அதிகரிக்கும்.


latest tamil news



இந்நிலையில், சீரம் நிறுவனத்தின் அதர் பூனாவாலா வெளியிட்டுள்ள செய்தி:இந்தியாவில் தடுப்பூசி மருந்து தயாரிக்கும் துறையினர் சார்பில், பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு நன்றி. உங்களின் உறுதியான கொள்கை மாற்றங்கள் மற்றும் நிதியுதவிகாரணமாக, இந்தியாவில் தடுப்பூசி தயாரிப்பு மற்றும் சப்ளை அதிகரிக்க வழி ஏற்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dina - chennai,இந்தியா
22-ஏப்-202110:22:56 IST Report Abuse
dina எல்லாம் சரிதான் மருந்தின் விலை ஏற்றக்கூடாது ..
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
21-ஏப்-202120:00:37 IST Report Abuse
Krishnamurthy Venkatesan மத்திய அரசிடமும் நிதி வாங்கியாயிற்று, விலையையும் ஏற்றியாயிற்று. இன்னும் என்ன? ம் ம் ம் ம் வெங்காயம் தக்காளி போல் செயற்கையாக ஒரு தட்டுப்பாட்டை உருவாக்கினால், வெளி மார்க்கெட்டில் அமோக வியாபாரம்.
Rate this:
Cancel
21-ஏப்-202119:49:08 IST Report Abuse
ஆப்பு தடுப்பூசி விலையேற அனுமதி அளித்ததற்கு நன்றி தெரிவிக்கலையே சார்... கோவிச்சுக்கப் போறாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X