புயலால் இந்தியாவுக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பு

Updated : ஏப் 21, 2021 | Added : ஏப் 21, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
நியூயார்க்: இந்தியா - வங்கதேசம் இடையே உருவான 'அம்பன்' புயல் ஏற்படுத்திய சேதத்தில் இந்தியாவுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஐ.நா., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சர்வதேச வானிலை நிறுவனம் 2020ன் பருவநிலை குறித்த ஆய்வறிக்கை தயாரித்துஉள்ளது.இதை ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரஸ் வெளியிட்டார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியா -
UN_Report, Cyclone Amphan, India, Economic Losses, இந்தியா, புயல், பொருளாதாரம், இழப்பு, பாதிப்பு, ஐநா

நியூயார்க்: இந்தியா - வங்கதேசம் இடையே உருவான 'அம்பன்' புயல் ஏற்படுத்திய சேதத்தில் இந்தியாவுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஐ.நா., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச வானிலை நிறுவனம் 2020ன் பருவநிலை குறித்த ஆய்வறிக்கை தயாரித்துஉள்ளது.இதை ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரஸ் வெளியிட்டார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியா - வங்கதேசம் எல்லையில் வங்காள விரிகுடாவின் கிழக்கே மே 20ல் அம்பன் புயல் உருவானது. இது தான் இந்திய பெருங்கடலின் வடக்கு பகுதியில் மிக அதிக அளவில் சேதத்தை ஏற்படுத்திய புயல். இந்த புயல் காரணமாக இந்தியாவுக்கு 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.


latest tamil news


மேற்குவங்கம் ஒடிசா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த் 24 லட்சம் பேர் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். வங்கதேசத்தில் 25 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டனர். இத்தகைய நடவடிக்கைகள் காரணமாக அம்பன் புயலால் ஏற்பட்ட இறப்பு 129 என்ற அளவில் குறைவாக இருந்தது. உலகளவில் 2020ல் உருவான 30 புயல்களில் வடக்கு அட்லாண்டிக் பகுதி அதிக புயல்களை சந்தித்து முதலிடத்தை பிடித்துள்ளது.இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-ஏப்-202119:47:32 IST Report Abuse
ஆப்பு மே.வங்கத்துக்கு 2000 கோடியோ என்னவோ குடுத்துட்டு, மம்தா மே.வங்கத்தை சீரழிச்சுட்டார்னு வடை சுடல் வேற.
Rate this:
Cancel
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
21-ஏப்-202114:19:02 IST Report Abuse
Apposthalan samlin ஒரு லட்சம் கோடியா ? நமக்கு மத்திய அரசு 200 300 கோடி தான் கொடுத்தது வட மாநிலங்களுக்கு 1500 கோடி தான் கூட்டி கழித்தால் 5000 கோடி தானே வரும் என்ன கணக்கு?
Rate this:
Cancel
srinivasan - stockholm,சுவீடன்
21-ஏப்-202109:50:06 IST Report Abuse
srinivasan Ithil ellaam maanila suyatchi illayaa?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X