பொருளாதார மறுமலர்ச்சி தொடர நடவடிக்கை: நிர்மலா சீதாராமன்

Updated : ஏப் 21, 2021 | Added : ஏப் 21, 2021 | கருத்துகள் (28)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா தொற்று இரண்டாவது அலையை மீறி, பொருளாதார மறுமலர்ச்சி தொடர்வதை உறுதி செய்வதற்காக, மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் வணிகர்களுக்கான சேம்பர் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றிய சீதாராமன், தொற்று நோய்களின் இரண்டாவது அலையை மீறி,
Nirmala Sitharaman, Economy, CovidSecondWave, நிர்மலா சீதாராமன், பொருளாதாரம், மறுமலர்ச்சி

புதுடில்லி: கொரோனா தொற்று இரண்டாவது அலையை மீறி, பொருளாதார மறுமலர்ச்சி தொடர்வதை உறுதி செய்வதற்காக, மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் வணிகர்களுக்கான சேம்பர் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றிய சீதாராமன், தொற்று நோய்களின் இரண்டாவது அலையை மீறி, பொருளாதார மறுமலர்ச்சி தொடர்வதை உறுதி செய்வதற்காக, மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்தார். இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது:


latest tamil news


அரசாங்கத்திற்கும் தொழில்துறையினருக்கும் இடையே, முழுமையான நம்பிக்கை இருக்க வேண்டும். அது மேலும் பரஸ்பரம் வளர்ச்சியை தக்கவைப்பதாக இருக்க வேண்டும். அத்துடன் வளர்ச்சிப் போக்கில் இடையூறுகள் இருக்கக் கூடாது. அப்படி இருப்பின், அது அவநம்பிக்கைக்கும், நம்பிக்கையின்மைக்கும் வழிவகுக்கும். இவ்வாறு கூறினார். மேலும், மேற்கு வங்கத்தை பற்றி பேசிய அமைச்சர், 'மாநிலத்தில் உள்ள தொழில்கள் செழிக்க, 'ஆக்ஸிஜன்' தேவைப்படுகிறது. மேலும் உலகமயமாக்கப்பட்ட அணுகுமுறையும் தேவைப்படுகிறது' என தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் பேசும்போது, ''மாநிலத்தில் உள்ள தொழில்கள் வளர இன்னும் நிறைய ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. இந்தியாவின் வரலாறு வங்காளத்திலிருந்து எழுதப்பட்டது. ஆனால், டார்ஜிலிங் தேநீர் போன்ற தயாரிப்புகள் கூட இப்போது நலிந்து வருகின்றன. கோல்கட்டாவின் தொழில்கள், கடந்த காலங்களில் பிரகாசித்தது. மீண்டும் அவற்றை பிரகாசிக்க செய்ய வேண்டும். வங்காளமும் அதன் பாரம்பரியமும் பாதுகாக்கப்பட வேண்டும்'' என்றும் அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
m.viswanathan - chennai,இந்தியா
21-ஏப்-202122:00:26 IST Report Abuse
m.viswanathan தேனீ கூட்டை கலைச்சாச்சு , இனி கூடு கட்ட வெகு நாளாகும்
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
21-ஏப்-202121:56:20 IST Report Abuse
Rajas இது தான் பொருளாதார மறுமலர்ச்சியா. ஒரு படத்தில் ஒரு டயலாக் வரும். "நமக்கு வரலைன்னா விட்டு விடவேண்டும்"
Rate this:
Cancel
Radhakrishnan - Marthandam, Nagercoil,இந்தியா
21-ஏப்-202121:31:18 IST Report Abuse
Radhakrishnan நானும் பிஜேபி கட்சிக்கு முன்னாடி சப்போர்ட் பண்ணினேன். உண்மையிலேயே நாம் கண்ட தோல்வி நிதி அமைச்சர். என்ன உருப்படியா பண்ணி இருக்கார்? சாமான்ய மக்களுக்கு வரி மேல் வரி. வாங்குற சம்பளமே வரி பிடித்துத்தான் கொடுக்குறாங்க, மீதி உள்ள சம்பளத்தில் என்ன சாமான் வாங்கினாலும் அதற்கும் வரி, இப்படியே வரி விதித்து சாவடிகிடுங்க. உங்கள் சக அமைச்சர்கள் நிதின் கட்கரி, ராஜ்நாத் அவர்களை எல்லாம் பார்த்து கற்று கொள்ளுங்கள். உண்மையிலேயே இந்தியாவின் சாபக்கேடு இந்த நிதி அமைச்சர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X