ஏன் இவ்வளவு சந்தேகம்... அப்படி எதுவும் நடக்கலேன்னு தேர்தல் கமிஷன் சொல்லுதே...

Updated : ஏப் 21, 2021 | Added : ஏப் 21, 2021 | கருத்துகள் (34)
Share
Advertisement
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லுாரி அறைக்கு அருகில், ரகசியமாக கணினி செயல்பாடுகள் உள்ளன. ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை, அருகில் உள்ள அறைகளில் கணினி மற்றும் இணையதளம் பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்கக் கூடாது.- கரூர் மாவட்ட, தி.மு.க., செயலர் செந்தில் பாலாஜி'ஏன் இவ்வளவு சந்தேகம்... அப்படி எதுவும் நடக்கலேன்னு தேர்தல் கமிஷன் சொல்லுதே... அதை மீறி சந்தேகம்
ஏன் இவ்வளவு சந்தேகம்... அப்படி எதுவும் நடக்கலேன்னு தேர்தல் கமிஷன் சொல்லுதே...

ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லுாரி அறைக்கு அருகில், ரகசியமாக கணினி செயல்பாடுகள் உள்ளன. ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை, அருகில் உள்ள அறைகளில் கணினி மற்றும் இணையதளம் பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்கக் கூடாது.
- கரூர் மாவட்ட, தி.மு.க., செயலர் செந்தில் பாலாஜி


'ஏன் இவ்வளவு சந்தேகம்... அப்படி எதுவும் நடக்கலேன்னு தேர்தல் கமிஷன் சொல்லுதே... அதை மீறி சந்தேகம் இருக்குன்னா, முன்கூட்டியே, 'ரிகர்சல்' ஏதும் பார்த்து, அனுபவம் ஆகி இருக்கோ...' என, சொல்லத் தோன்றும் வகையில், கரூர் மாவட்ட, தி.மு.க., செயலர் செந்தில் பாலாஜி பேட்டி.இஸ்ரேல் நாட்டில், பாதிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், பொது இடங்களில் முககவசம் அணிவது கட்டாயம் என்ற உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது.
- பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி


'அதுபோல, இந்தியாவிலும் எப்போது நிலை மாறுமோ என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது...' என, சொல்லத் தோன்றும் வகையில், பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை.உலகில், 50 லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட நாடுகளின் எண்ணிக்கை 150. மேலும், 20 லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட நாடுகளின் எண்ணிக்கை 140. ஆனால், இந்தியாவில் பல மாவட்டங்களின் மக்கள் தொகையே, 50 லட்சத்திற்கும் அதிகம்.
- பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்


latest tamil news
'அதனால் என்ன; மக்கள்தொகையை தோற்கடிக்கும் வகையில் தான் அரசியல் கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் உள்ளனவே...' என, கவலை தெரிவிக்கத் தோன்றும் வகையில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை.செய்யூர் சட்டசபை தொகுதியில் பதிவான ஓட்டு இயந்திரங்கள், நெல்வாய் என்ற இடத்தில், கல்லுாரி ஒன்றில் வைக்கப்பட்டுள்ளன. அந்த பகுதியில் சர்ச்சைக்குரிய நடமாட்டம் உள்ளது. 'வைபை' இணையதள வசதி, அங்கு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷன் தான் விளக்கம் அளிக்க வேண்டும்.
- விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்


'பூட்டிய அறைக்குள் இருக்கும் இயந்திரங்களை, வெளியே இருந்து யாராவது நோண்டக் கூடும் என்ற எச்சரிக்கையில், இவ்வாறு கூறுகிறீர்களோ என்ற, சந்தேகம் வருகிறது...' என, சொல்லத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை.கொரோனாவிலிருந்து தப்பிக்க, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, பலர், கையில் கிடைத்த, எவ்வித ஆராய்ச்சிகளாலும் நிரூபிக்கப்படாத சில மருந்துகளை சாப்பிடுகின்றனர். இதனால், கல்லீரல் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
- டில்லி மருத்துவ வல்லுனர் எஸ்.கே.சரின்


'நோய் எதிர்ப்பு சக்திக்காக, உடலை வருத்திக் கொள்வர் போலிருக்கிறதே...' என, கவலை ஏற்படுத்தத் தோன்றும் வகையில், டில்லி மருத்துவ வல்லுனர் எஸ்.கே.சரின் பேட்டி.கொரோனா இரண்டாவது அலையால் வேலைவாய்ப்பை இழந்துள்ள விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு, தலா, 7,500 ரூபாய் வழங்க வேண்டும்.
- தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி


'கேட்டது தான் கேட்கிறீர்கள்; பத்தாயிரம் ரூபாயாக கேட்டால், குறைந்தா போய் விடுவீர்கள்...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை.


Advertisement


வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
22-ஏப்-202102:41:04 IST Report Abuse
தல புராணம் ஏன் இந்த சந்தேகமா ?? கேள்வியே தப்பு தேர்தல் கமிஷனிடம் ஏன் இந்த இருட்டறை ரகசியம்ன்னு தான் கேக்கணும்.. இரண்டு பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்து தேர்தல் கமிஷன் வாங்குனது 20 லட்சம் வாக்கு இயந்திரங்களாம். ஆனால் இரண்டு பொதுத்துறை நிறுவனங்களும் தனித் தனியே தேர்தல் கமிஷனுக்கு விற்றது மொத்தம் 40 லட்சம் வாக்கு இயந்திரங்களாம்.. இரண்டு நிறுவனங்களிடமும், தேர்தல் கமிஷனிடமும் தனித் தனியாக RTI மூலம் பெற்ற தகவல் இது.. ஆக, பாக்கி இருவது லட்சம் வாக்கு இயந்திரங்கள் எங்கே? "
Rate this:
Cancel
Murthy - Bangalore,இந்தியா
21-ஏப்-202119:03:33 IST Report Abuse
Murthy வேளச்சேரியில் பிடிபட்ட இயந்திரத்திற்கு முதலில் தேர்தல் கமிஷன் என்ன சொன்னது?........எப்படி இந்த ஆணையத்தை நம்புவது? ஆளும் கட்சிக்கு ஒத்து ஊதுவதில் சிறப்பாக இருக்கிறது.
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
21-ஏப்-202114:57:34 IST Report Abuse
Vijay D Ratnam இந்தியாவிலேயே படித்தும் பொது அறிவில்லாத, படிப்பறிவில்லாத அரசியல்வியாதிகள் தமிழ்நாட்டில்தான் அதிகம். 1989 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டு பலதரப்பட்ட செய்முறை விளக்கங்கள் காண்பிக்கப் பட்டு பலதரப்பட்ட நிபுணர்களின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு முதன்முறையாக 1998 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட EVM. இயந்திரத்தில் எந்த தில்லாலங்கடித்தனமும் செய்ய முடியாது என்பது தெரிந்து பெனாத்துறாய்ங்களா அல்ல தெரியாம உளறுகிறார்களா. EVM சற்று பெரிய சைஸ் கால்குலேட்டர், அவ்ளோதான். காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை ஒன் பை ஒன்னாக போட்ட ஓட்டுக்களை மொத்தமாக இந்தந்த சின்னத்தில் இவ்வளவு இருக்குது என்று கணக்கிட்டு சொல்லும் ஒரு கால்குலேட்டர். அதுக்கு மேல அதுல ஒன்னும் கிடையாது. தோற்ற கட்சிகள் தோல்வி உறுதி என்ற கட்சிகள் தங்கள் தொண்டர்களை தேற்றுவதற்கு இது பயன்படும் என்று எழுத்தாளர் சுஜாதா அன்றே சொன்னார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X