பொது செய்தி

தமிழ்நாடு

போராட்டங்களுக்கு தடை விதிக்கப்படுமா?

Updated : ஏப் 21, 2021 | Added : ஏப் 21, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
சென்னை: கொரோனா பரவல் அதிகரிப்பை தடுக்க, புதிய அரசு பொறுப்பேற்கும் வரை, போராட்டங்களுக்கு, தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.அரசு பணிகளுக்கு எதிராகவும், அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தருவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், சில தரப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதில் பங்கேற்கும்படி, பொது மக்களுக்கும் கட்டாய அழைப்பு
Tamilnadu, Govt, Protest, தமிழகம், போராட்டங்கள், தடை

சென்னை: கொரோனா பரவல் அதிகரிப்பை தடுக்க, புதிய அரசு பொறுப்பேற்கும் வரை, போராட்டங்களுக்கு, தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

அரசு பணிகளுக்கு எதிராகவும், அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தருவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், சில தரப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதில் பங்கேற்கும்படி, பொது மக்களுக்கும் கட்டாய அழைப்பு விடுக்கின்றனர். அவசியம் இன்றி கூட்டம் சேருவதால், கொரோனா பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், தற்போது, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே, அரசு முன்னுரிமை அளிக்க முடியும்.


latest tamil news


சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை, மே, 2ல் நடக்கிறது. தொடர்ந்து, புதிய அரசு பொறுப்பேற்கும். அதன் பின், போராட்டக்காரர்களின் பிரச்னைகளுக்கும் நிரந்தர தீர்வு காண, நடவடிக்கை எடுக்க முடியும். எனவே, கொரோனா பரவல் அதிகரிப்பை தடுக்கும் விதமாக, புதிய அரசு பொறுப்பேற்கும் வரை, தொழிற்சங்கத்தினர் உள்ளிட்டோர் நடத்தும் போராட்டங்களுக்கு, தடை விதிக்க வேண்டும். மீறி போராட்டங்களில் ஈடுபடுவோர் மீது, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
21-ஏப்-202120:30:16 IST Report Abuse
Darmavan இதை தூண்டிவிடுபவன் தேசவிரோதி எதிரிகளின் கைக்கூலி..இப்போது 2 ம் அலையே சீனாவின் சதி போல் தெரிகிறது..அவனின் கைக்கூலிகள் மேலும் மோசமாக்குகின்றன.போராட்டத்தின் மூலம்.இவனையெல்லாம் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
21-ஏப்-202114:28:52 IST Report Abuse
Lion Drsekar இதே போன்று மறியல் , தீ வைத்தால் , பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் மறியல் என்ற பெயரில் அரசியல் கட்சிகளால் நடத்தப்படும் ஒரு சமூக விரோத செயல், இதை இன்று இதர அமைப்புகளும் தங்கள் தேவைக்கு பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்துவிட்டன, எப்போதும் கூறுவதுபோல் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தேர்தலின் நேரத்தில் தங்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள இதே போன்று செயல்பாடுகள் ... மொத்தத்தில் நேர்மையாக வாழ்பவர்கள், நல்லவர்கள் நிலைப்பாடுதான் கேள்விக்குறியாகிறது, இன்னமும் ஒரு சில மூத்த குடிமகன்கள் எங்கள் ஐயா அன்றைக்கே தண்டவாளத்தில் தலைவைத்து படுத்தார் என்று பெருமையுடன் கூறி அதை கின்னஸ் சாதனையாக கூறிக்கொண்டு வருகிறாரேக்ல அன்றைக்கே இரயிலை நிறுத்தாமல் சென்றுருந்தால் திருந்தியிருப்பர்கள் நாடும் நிம்மதியாக இருந்திருக்கும், மக்களின் குறைகளை தீர்க்கவேண்டிய துறைகள் இருக்க அங்கு தவறானவர்களால் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் தாமதமான நீதி இதன்காரணமாக அவரவர்கள் சட்டத்தை தன கையில் எடுத்துக்கொண்டு இப்படியே சென்றால் நாளைக்கு பொதுமக்களும் இவர்களுக்கு எதிராக காலம் இறங்குவது நிச்சயம், நமது நேரம்தான் வீண் என்று அறிந்தும் இந்த பதிவு, வந்தே மாதரம்
Rate this:
Darmavan - Chennai,இந்தியா
21-ஏப்-202120:34:09 IST Report Abuse
Darmavanஅவங்களை சுட்டு தள்ளினாலும் தவறில்லை....
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
21-ஏப்-202112:26:23 IST Report Abuse
S.Baliah Seer லாக்டவுன் கொரோனாவுக்காக அல்ல. மக்களின் பேச்சுரிமையையும், போராட்டங்களையும் தடுக்கவே.
Rate this:
தி.மு.க.,வின் இதய உதயசூரியன் உதயமாகிறது. - DMK வெற்றிக்கு பாடுபட்டோருக்கு நன்றி ,இந்தியா
21-ஏப்-202112:39:47 IST Report Abuse
 தி.மு.க.,வின் இதய உதயசூரியன் உதயமாகிறது.அப்படியே முடிஞ்சா பொட்டி மாத...
Rate this:
Anand - chennai,இந்தியா
21-ஏப்-202112:47:38 IST Report Abuse
Anandஎன்ன வெங்காய பேச்சுரிமை, போராட்டம்? அவனவன் கட்சி, அமைப்பு, சங்கம் என போராட்டம் என்கிற போர்வையில் இஷ்டத்திற்கு அராஜகம் செய்து எல்லைமீறி ஆட்டம் போட்டு பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பெரிதும் இடையூறு செய்து நாசப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். இவனுங்களை சுட்டு கொல்லவேண்டும்....
Rate this:
தி.மு.க.,வின் இதய உதயசூரியன் உதயமாகிறது. - DMK வெற்றிக்கு பாடுபட்டோருக்கு நன்றி ,இந்தியா
21-ஏப்-202113:10:53 IST Report Abuse
 தி.மு.க.,வின் இதய உதயசூரியன் உதயமாகிறது.உண்மை 8 வருடம் முன்ன சில கேடிகள் நீங்கள் சொன்ன அனைத்தையும் செய்தார்கள், அப்போவு உள்ளே தள்ளி போலந்து இருந்தா...
Rate this:
Davamani Arumuga Gounder - Gandhipuram Sendamangalam Namakkal,இந்தியா
21-ஏப்-202120:06:51 IST Report Abuse
Davamani Arumuga Gounder.. இப்ப .. 2019 பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் சில கேடிகள் பொட்டி மாத்தியும், இந்த கட்டுமர குடும்பத்தின் அடிமைகளும் 39 சீட் ஜெயிச்சிருக்கானுங்க ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X