அவசரமாக ஆக்சிஜன் கொடுங்கள்: கும்பிட்டு கேட்கும் கெஜ்ரிவால்| Dinamalar

அவசரமாக ஆக்சிஜன் கொடுங்கள்: கும்பிட்டு கேட்கும் கெஜ்ரிவால்

Updated : ஏப் 21, 2021 | Added : ஏப் 21, 2021 | கருத்துகள் (48)
Share
புதுடில்லி: டில்லியில் கடுமையான ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதாகவும், அவசரமாக ஆக்சிஜனை வழங்குமாறும் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைகூப்பி கேட்டுக்கொள்வதாக உருக்கமாக தெரிவித்துள்ளார்.இந்தியாவில் கொரோனா 2வது அலை காரணமாக தினமும் 2.5 லட்சத்திற்கு மேலானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், பல மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன்
ArvindKejriwal, Oxygen Shortage, Delhi, FoldedHands, Request, அரவிந்த் கெஜ்ரிவால், ஆக்சிஜன், பற்றாக்குறை, டில்லி

புதுடில்லி: டில்லியில் கடுமையான ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதாகவும், அவசரமாக ஆக்சிஜனை வழங்குமாறும் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைகூப்பி கேட்டுக்கொள்வதாக உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா 2வது அலை காரணமாக தினமும் 2.5 லட்சத்திற்கு மேலானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், பல மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தலைநகர் டில்லியில் கொரோனா பரவலின் வேகம் அதிகரித்து வருவதையடுத்து அங்கு கடுமையான ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் ரெம்டிசிவிர் மருந்துக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும், மத்திய அரசு உதவ வேண்டும் எனவும் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.


latest tamil news


இந்நிலையில், சில மணிநேரத்திற்கு மட்டுமே போதுமான ஆக்சிஜன் மட்டுமே உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது டுவிட்டர் பதிவில், 'டில்லியில் கடுமையான ஆக்சிஜன் நெருக்கடி தொடர்கிறது. டில்லியில் இக்கட்டான சூழ்நிலை நிலவுவதால் மத்திய அரசு உதவ வேண்டும். சில மணிநேரத்திற்கு மட்டுமே போதுமான அளவில் ஆக்சிஜன் உள்ளது. டில்லிக்கு அவசரமாக ஆக்சிஜனை வழங்குமாறு கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன்' என பதிவிட்டுள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X