கோர்ட் செய்தி

தமிழ்நாடு

வரதட்சணை வழக்கில் தண்டனையை நிறுத்தி வைக்க கோரிய மனு நிராகரிப்பு

Added : ஏப் 21, 2021
Share
Advertisement
சென்னை: மகன், மருமகளுடன் ஒரே வீட்டில் இருக்கவில்லை என்ற காரணம் கூறி, வரதட்சணை கொடுமை வழக்கில், தண்டனையை நிறுத்தி வைக்க கோரிய பெற்றோரது மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.கடலுார் மாவட்டத்தில், திருமணமாகி, 15 மாதங்களில், வரதட்சணை கொடுமையால், பெண் தற்கொலை செய்தார். இந்த வழக்கில், கணவன் மற்றும் அவரது பெற் றோருக்கு சிறை தண்டனை விதித்து, மகளிர் நீதிமன்றம்

சென்னை: மகன், மருமகளுடன் ஒரே வீட்டில் இருக்கவில்லை என்ற காரணம் கூறி, வரதட்சணை கொடுமை வழக்கில், தண்டனையை நிறுத்தி வைக்க கோரிய பெற்றோரது மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.கடலுார் மாவட்டத்தில், திருமணமாகி, 15 மாதங்களில், வரதட்சணை கொடுமையால், பெண் தற்கொலை செய்தார். இந்த வழக்கில், கணவன் மற்றும் அவரது பெற் றோருக்கு சிறை தண்டனை விதித்து, மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இரண்டு ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், பெற் றோர் மேல்முறையீடு செய்தனர். விசாரணை முடியும் வரை, தண்டனையை நிறுத்தி வைத்து, ஜாமின் வழங்க கோரினர்.மகன், மருமகள் தனியாக வசித்ததாகவும், அவர்களுடன் தாங்கள் வசிக்கவில்லை என்பதால், வரதட்சணைகேட்டு கொடுமைப்படுத்த வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன் பிறப்பித்த உத்தரவு:வரதட்சணை கொடுமையால், பெண் தற்கொலை செய்வது அதிகரிக்கிறது. மகனுடன் சேர்ந்து வாழவில்லை எனக்கூறி பெற்றோர் தப்பிக்கின்றனர். ஆனால், பணம், நகை, இருசக்கர வாகனம் வாங்கி வரும்படி, மகனை துாண்டி விடுகின்றனர்.ஒன்றாக சேர்ந்து வாழவில்லை என்ற காரணம் காட்டி, தண்டனையை நிறுத்தி வைக்க கோருகின்றனர். அதையும், பல வழக்குகளில் நீதிமன்றம் பரிசீலித்துள்ளது. இதை சாதகமாக எடுப்பதால், பொறுப்பில் இருந்தும், குற்றத்தில் இருந்தும், பெற்றோர் எளிதாக தப்பலாம் என்ற தவறான செய்தி சமூகத்துக்கு போய் சேர்கிறது.குழந்தை பெற்று, அவருக்கு கல்வி, இருப்பிடம், வேலை கிடைக்க உத்வேகம் அளிப்பது மட்டுமல்லாமல், பொறுப்பான குடிமகனாக வளர்ப்பதும், பெற்றோரின் தலையாய பொறுப்பு.இந்த வழக்கை பொறுத்தவரை, குற்றத்தின் கடுமை கருதி, தண்டனையை நிறுத்தி வைக்க விரும்பவில்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X