சொத்து முடக்கம் உத்தரவு கடுமையானது: உச்ச நீதிமன்றம்

Added : ஏப் 21, 2021
Share
Advertisement
புதுடில்லி:'சொத்துகளை முடக்க உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம், இயற்கையில் மிகவும் கடுமையானது' என, உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.ஹிமாச்சல பிரதேச மாநில உயர் நீதிமன்றத்தில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், சொத்து மற்றும் வங்கிக் கணக்கு முடக்கம் செய்ய உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரத்திற்கு எதிராக, மனு தாக்கல் செய்யப்பட்டது. எனினும், அந்த மனுவை தள்ளுபடி செய்து,

புதுடில்லி:'சொத்துகளை முடக்க உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம், இயற்கையில் மிகவும் கடுமையானது' என, உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

ஹிமாச்சல பிரதேச மாநில உயர் நீதிமன்றத்தில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், சொத்து மற்றும் வங்கிக் கணக்கு முடக்கம் செய்ய உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரத்திற்கு எதிராக, மனு தாக்கல் செய்யப்பட்டது. எனினும், அந்த மனுவை தள்ளுபடி செய்து, உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.பின், உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது

.இந்நிலையில், அந்த மனு, நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட் மற்றும் எம்.ஆர். ஷா அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:வரி விதிக்கப்படக்கூடிய நபரின் வங்கிக் கணக்கு மற்றும் சொத்துகளை முடக்க, உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம், இயற்கையில் மிகவும் கடுமையானது. இதுபோன்ற உத்தரவுகளை பிறப்பிப்பதற்கு முன்னதாக, வலுவான ஆதாரங்கள் அடிப்படையில், இதில், ஆணையர் முடிவு எடுக்க வேண்டும். அரசு வருவாய் நலனை பாதுகாக்கும் நோக்கத்திற்காக, இது செய்யப்படவேண்டியது அவசியம்.அப்படி சொத்து முடக்கம் தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன், அதை சம்மந்தப்பட்ட நபரிடம் தெரிவிக்கவேண்டியது முக்கியம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X