கோர்ட் செய்தி

தமிழ்நாடு

‛மண்டேலா' படம் மறு தணிக்கை முடி திருத்துவோர் சங்கம் வழக்கு

Added : ஏப் 21, 2021
Share
Advertisement
சென்னை:நடிகர் யோகிபாபு நடித்த, 'மண்டேலா' படத்தை, மீண்டும் தணிக்கை செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாடு முடி திருத்துவோர் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு:நடிகர் யோகிபாபு நடித்த, 'மண்டேலா' படம், தனியார், 'டிவி'யில் ஒளிபரப்பானது. முடி திருத்தும் தொழிலாளர்களை, கழிப்பறையை சுத்தம் செய்ய வைப்பது; செருப்பால்

சென்னை:நடிகர் யோகிபாபு நடித்த, 'மண்டேலா' படத்தை, மீண்டும் தணிக்கை செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாடு முடி திருத்துவோர் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு:நடிகர் யோகிபாபு நடித்த, 'மண்டேலா' படம், தனியார், 'டிவி'யில் ஒளிபரப்பானது. முடி திருத்தும் தொழிலாளர்களை, கழிப்பறையை சுத்தம் செய்ய வைப்பது; செருப்பால் அடிப்பது; காரின் பின்னே ஓடி வர வைப்பது போன்ற காட்சிகள், படத்தில் இடம் பெறுகின்றன.இதுபோன்று அவமரியாதை செய்யும் காட்சிகளை, தணிக்கை செய்ய தவறி விட்டனர். எங்கள் சமூகத்தினரின் மனதை புண்படுத்தும் வகையில், காட்சிகள் உள்ளதால், மீண்டும் தணிக்கை செய்ய உத்தரவிட வேண்டும்.சர்ச்சைக்குரிய காட்சிகள், வசனங்களை நீக்க, தயாரிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X