சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லிபியாவுக்கு சென்று திரும்பியவரிடம் விசாரணை

Added : ஏப் 21, 2021
Share
Advertisement
சென்னை, ஏப். 21-கத்தார் நாட்டின் தலைநகர், தோஹாவில் இருந்து, 'கத்தார் ஏர்லைன்ஸ்' சிறப்பு விமானம், நேற்று முன்தினம் இரவு, 2:20 மணிக்கு சென்னை வந்தது. அந்த விமானத்தில் வந்த, சென்னையைச் சேர்ந்த முகமது சமீம், 46, பாஸ்போட்டை, குடியுரிமை துறையினர் சோதனையிட்டனர்.அதில், முகமது சமீம், லிபியாவில் இருந்து துருக்கி நாட்டின், இஸ்தான்புல் வழியாக, கத்தாரின் தலைநகர் தோஹாவிற்கு சென்று,

சென்னை, ஏப். 21-

கத்தார் நாட்டின் தலைநகர், தோஹாவில் இருந்து, 'கத்தார் ஏர்லைன்ஸ்' சிறப்பு விமானம், நேற்று முன்தினம் இரவு, 2:20 மணிக்கு சென்னை வந்தது. அந்த விமானத்தில் வந்த, சென்னையைச் சேர்ந்த முகமது சமீம், 46, பாஸ்போட்டை, குடியுரிமை துறையினர் சோதனையிட்டனர்.
அதில், முகமது சமீம், லிபியாவில் இருந்து துருக்கி நாட்டின், இஸ்தான்புல் வழியாக, கத்தாரின் தலைநகர் தோஹாவிற்கு சென்று, அங்கிருந்து, சென்னை வந்தது தெரிந்தது.லிபியா நாட்டில், ஐ.எஸ்., பயங்கரவாதிகள் ஆதிக்கம் உள்ளது. அங்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதால், 2016 முதல், இந்தியர்கள் லிபியா செல்ல, மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த தடையை மீறி முகமது சமீம், லிபியா சென்று வந்ததால், அவரிடம் விசாரித்தனர்.

'நான், பிரபலமான ஒரு மருந்து நிறுவனத்தில், பார்மசிஸ்டாக பணியாற்றி வருகிறேன். அந்நிறுவனம் தான், என்னை பணி நிமித்தமாக, 2019ல், லிபியாவிற்கு அனுப்பியது. நான் முறையான ஆவணங்களுடன், ஆமதாபாத்தில் இருந்து, இணைப்பு விமானங்கள் வாயிலாக லிபியா சென்று, இரண்டு ஆண்டுகள் அங்கு பணியில் இருந்தேன். எனக்கு, லிபியா தடை செய்யப்பட்ட நாடு என்பது தெரியாது' என, முகமது சமீம் கூறினார்.அவரது வாக்குமூலத்தில் சந்தேகம் இருந்ததால், மேல் விசாரணைக்காக, மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம், குடியுரிமைத்துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X