திருப்பதியில் தமிழக கவர்னர்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

திருப்பதியில் தமிழக கவர்னர்

Updated : ஏப் 21, 2021 | Added : ஏப் 21, 2021
Share
திருப்பதி: திருச்சானுார் பத்மாவதி தாயாரை, தமிழக கவர்னர் பவன்வாரிலால் புரோஹித், நேற்று வழிபட்டார்.திருமலை ஏழுமலையானை வழிபட, தமிழக கவர்னர் பவன்வாரிலால் புரோஹித், நேற்று திருப்பதி வந்தார்.இங்கிருந்து திருச்சானுார் சென்ற அவர், மாலை பத்மாவதி தாயாரை தரிசித்தார். இதன்பின், அவர்திருமலைக்குச் சென்றார்.திருமலையில், அவரை வரவேற்ற தேவஸ்தான அதிகாரிகள், தங்குமிடம், தரிசன

திருப்பதி: திருச்சானுார் பத்மாவதி தாயாரை, தமிழக கவர்னர் பவன்வாரிலால் புரோஹித், நேற்று வழிபட்டார்.திருமலை ஏழுமலையானை வழிபட, தமிழக கவர்னர் பவன்வாரிலால் புரோஹித், நேற்று திருப்பதி வந்தார்.இங்கிருந்து திருச்சானுார் சென்ற அவர், மாலை பத்மாவதி தாயாரை தரிசித்தார். இதன்பின், அவர்திருமலைக்குச் சென்றார்.திருமலையில், அவரை வரவேற்ற தேவஸ்தான அதிகாரிகள், தங்குமிடம், தரிசன ஏற்பாடுகள் செய்தனர். இரவு திருமலையில் தங்கும் அவர், இன்று ஏழுமலையானை தரிசிக்க உள்ளார்.


'தடுப்பூசி பாதுகாப்பானது'



தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் நேற்று மாலை சென்னையில் இருந்து திருவள்ளூர், திருத்தணி வழியாக காரில் திருப்பதி - திருமலை கோயிலுக்கு சென்றார். வழியில் திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றார். அங்குள்ள ஒவ்வொரு அறைக்கும் சென்று ஆய்வு நடத்தினார்.

பின் பன்வாரிலால் புரோஹித் கூறியதாவது: கொரோனா பரவலை தடுக்க அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும். தடுப்பூசி பாதுகாப்பானது; பக்க விளைவுகள் இல்லை. நான் 70 வயதிலும் இரு முறை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளேன். ஆகையால் நீங்களும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொண்டு கிராமங்களில் தடுப்பூசி பாதுகாப்பானது என்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தில் தேவையான அளவுக்கு தடுப்பூசிகள் இருப்பு உள்ளது; தட்டுப்பாடு என்பது வதந்தி.இவ்வாறு அவர் கூறினார்.ஆய்வின் போது கலெக்டர் பொன்னையா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

கவர்னர் பன்வாரிலால் புரோஹித் கலெக்டர் பொன்னையாவிடம் 'மே 1 முதல் 18 வயது மேற்பட்டோருக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது. இதுகுறித்து மாவட்டம் முழுதும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்' என அறிவுறுத்தினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X