சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சவுதி சிறையில் வாடும் மகனை மீட்க போராடும் தஞ்சை தாய்

Added : ஏப் 21, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
தஞ்சாவூர்:'சவுதி அரேபிய சிறையில் வாடும் மகனை மீட்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அவரது தாய் போராடி வருகிறார்.தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே செங்கப்படுத்தான் காட்டைச் சேர்ந்தவர் காந்திமதி, 60; கூலித் தொழிலாளி. இவரது கணவர், மூத்த மகன், உடல் நலக்குறைவால் இறந்துவிட்டனர்.இதனால் ஏற்பட்ட வறுமையால், இளைய மகன் தினேஷ், 25, கல்லுாரி படிப்பை
 சவுதி சிறையில் வாடும் மகனை மீட்க போராடும் தஞ்சை தாய்

தஞ்சாவூர்:'சவுதி அரேபிய சிறையில் வாடும் மகனை மீட்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அவரது தாய் போராடி வருகிறார்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே செங்கப்படுத்தான் காட்டைச் சேர்ந்தவர் காந்திமதி, 60; கூலித் தொழிலாளி. இவரது கணவர், மூத்த மகன், உடல் நலக்குறைவால் இறந்துவிட்டனர்.இதனால் ஏற்பட்ட வறுமையால், இளைய மகன் தினேஷ், 25, கல்லுாரி படிப்பை பாதியில் நிறுத்தி, 'டிரைவிங் ஸ்கூல்' ஒன்றில் பயிற்சியாளராக பணியாற்றினார். 2019 ஆகஸ்ட் மாதம், சவுதி அரேபியாவில் உள்ள தனியார் நிறுவன பணிக்கு, தினேஷ் சென்றார்.'டிரைவிங் லைசென்ஸ்' இல்லாத நிலையில், தினேஷை அந்த நிறுவனம், ஜல்லி கற்கள் ஏற்றி செல்லும் லாரியை இயக்க வைத்துள்ளது.

2019 அக்டோபரில், எதிரே வந்த காரின் டயர் வெடித்து, தினேஷ் ஓட்டி சென்ற லாரி மீது மோதியது. இதில், அரேபியர் ஒருவர் இறந்தார். சவுதி அரேபிய போலீசார், தினேஷை கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.தன் மகனை மீட்க கோரி, 2020 ஜனவரியில், தினேஷின் தாய் காந்திமதி, தஞ்சை கலெக்டரிடம் மனு அளித்தார். மேலும், எம்.பி., பழனிமாணிக்கம், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ ஆகியோரிடமும் மனு அளித்துள்ளார்.இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நேற்று மீண்டும், தஞ்சாவூர் கலெக்டர் கோவிந்தராவிடம், காந்திமதி மனு அளித்தார்.பின், அவர் கூறியதாவது:என் மகன் பணியாற்றிய நிறுவனம் செய்த தவறால், ஓராண்டு சிறையில் உள்ளார். இறந்தவரின் மனைவி, இந்திய ரூபாய் மதிப்பில், 90 லட்சம் ரூபாய் நஷ்ட கேட்டு, வழக்கு தொடர்ந்தார்.தொடர் விசாரணையில், என் மகனை, லைசென்ஸ் இல்லாமல் லாரியை இயக்க வைத்ததற்காக, அந்த நிறுவனம், இந்திய ரூபாய் மதிப்பில், 29 லட்சமும், என் மகன், 29 லட்சமும் அபராத தொகை செலுத்தினால், விடுதலை செய்வதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. அந்த நிறுவனம், எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், என் மகன் இன்னும் சிறையில் உள்ளார். மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து, என் மகனை மீட்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
naadodi - Plano,யூ.எஸ்.ஏ
21-ஏப்-202123:17:21 IST Report Abuse
naadodi தயை கூர்ந்து இந்த அம்மையாருக்கு உதவ வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தெரிவிக்கவும். அவர் தன்னால் இயன்றதை நிச்சயம் செய்வார்.
Rate this:
Cancel
naadodi - Plano,யூ.எஸ்.ஏ
21-ஏப்-202123:16:00 IST Report Abuse
naadodi வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கருக்கு ஒரு செய்தி அனுப்பவும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X