ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு: போலீஸ்காரர் குற்றவாளி என தீர்ப்பு

Updated : ஏப் 21, 2021 | Added : ஏப் 21, 2021 | கருத்துகள் (30)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்தாண்டு ஜார்ஜ் பிளாய்ட் என்னும் கறுப்பினத்தவர் உயிரிழந்தது தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட டெரிக் சாவின் என்ற போலீஸ்காரர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபோலிஸ் நகரில் கடந்தாண்டு மே 25-ம் தேதி ஜார்ஜ் பிளாய்ட் என்ற
DerekChauvin, Covicted, GeorgeFloyd, Murder, டெரிக் சாவின், குற்றவாளி, ஜார்ஜ் பிளாய்ட், கொலை

வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்தாண்டு ஜார்ஜ் பிளாய்ட் என்னும் கறுப்பினத்தவர் உயிரிழந்தது தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட டெரிக் சாவின் என்ற போலீஸ்காரர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபோலிஸ் நகரில் கடந்தாண்டு மே 25-ம் தேதி ஜார்ஜ் பிளாய்ட் என்ற கறுப்பினத்தவரை போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப்பிடித்தனர். அப்போது, டெரிக் சவுவின் (44) என்ற போலீஸ்காரர், பிளாய்டை தரையில் தள்ளி அவரது கழுத்தில் காலை வைத்து பலமாக அழுத்தினார். இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பிளாய்ட் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அமெரிக்கா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜார்ஜ் பிளாய்ட் மரணத்திற்கு நீதி கேட்டு, பல இடங்களில் போராட்டம் வெடித்தது.


latest tamil news


இதற்கிடையே ஜார்ஜ் பிளாய்டின் குடும்பத்தினர் இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி டெரிக் சாவின் உள்பட 4 போலீசார் மற்றும் மினியாபோலிஸ் நகர நிர்வாகத்துக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதில் டெரிக் சாவின் உள்பட 4 போலீசாரும் பணிநீக்கம் செய்யப்பட்டு, கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர். டெரிக் சாவின் மீது கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. டெரிக் சாவின் மீதான விசாரணை மினசோட்டாவின் ஹென்னெபின் நகரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது.


latest tamil news


இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையின் முடிவில் டெரிக் சாவின் குற்றவாளி என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். மேலும், அவரின் குற்றத்துக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை ஜார்ஜ் பிளாய்டின் உறவினர்கள் வரவேற்றுள்ளனர். ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் நிரூபணம் செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு 40 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
22-ஏப்-202104:47:18 IST Report Abuse
Matt P போலீஸ்கார்கள் ஒருவர் குற்றவாளி என்று தீர்மானிக்கும்போது முதலில் உடல் முழுக்க தடவி அவர்கள் ஆயுதம் இருக்கிறதா என்று தான் சோதிப்பார்கள். அதனால் ஆயுதம் அவரிடம் இருக்கும் என்று சந்தேகப்பட்டு இப்படி நடந்திருக்க தேவையில்லை.
Rate this:
Cancel
SUBBU - MADURAI,இந்தியா
21-ஏப்-202122:41:50 IST Report Abuse
SUBBU அமெரிக்க போலீசாரால் கொல்லப் பட்ட ஜார்ஜ் பிளைட் வழக்கில் காவல் அதிகாரி கொலையாளி என தீர்ப்பு.அமெரிக்கர்கள் கொண்டாட்டம்.ஆனால் இந்தியாவின் தமிழகம் சாத்தான்குளத்தில் காவல்நிலையத்தில் கொல்லப் பட்ட தந்தை மகன் வழக்கின் முடிவு இன்னும் வரவில்லை வரவும் வராது,ஏனென்றால்?அதுதான் இந்திய சட்ட அமைப்பு.
Rate this:
Cancel
rajesh -  ( Posted via: Dinamalar Android App )
21-ஏப்-202121:17:03 IST Report Abuse
rajesh சாத்தான் குளம் வழக்கு நீத்துப்போய் விடும் இன்னும் சில மாதங்களில்
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
22-ஏப்-202102:50:50 IST Report Abuse
தல புராணம்இன்னுமா ஞாபகம் வெச்சிக்கிட்டு இருக்கீங்க? தூத்துக்குடியில் மே மாசம் ரெண்டு வருசத்துக்கு முந்தி 15 அப்பாவிகளை ஸ்னைப்பர் துப்பாக்கி வைத்து மண்டை பிளந்து சாகடித்தார்களே, அந்த வழக்கு, வேண்டாம், சம்பவமாவது ஞாபகம் இருக்கா ??...
Rate this:
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
22-ஏப்-202104:41:55 IST Report Abuse
Matt Pசாத்தான் குளம் இறப்புகள் போலீஸ்கார்களின் கவன குறைவால் ஏற்பட்டது அல்ல. சாத்தான் குளம் கொலைகள் கொடியது. அராஜக போலிஸ்காரால் ஏற்பட்டது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X