பொது செய்தி

இந்தியா

கோவிஷீல்டு விலையை உயர்த்தியது சீரம் நிறுவனம்

Updated : ஏப் 21, 2021 | Added : ஏப் 21, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
புதுடில்லி: சீரம் நிறுவனம் தயாரித்து வரும் 'கோவிஷீல்டு' கொரோனா தடுப்பூசிக்கான விலையை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் ரூ.400 என்றும், தனியார் மருத்துவமனைகளில் ரூ.600 எனவும் விலை நிர்ணயம் செய்துள்ளது.இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வரும் சூழலில், தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள்
Covishield, Prices, CovidVaccine, SII, கோவிஷீல்டு, கொரோனா, தடுப்பூசி, விலை,

புதுடில்லி: சீரம் நிறுவனம் தயாரித்து வரும் 'கோவிஷீல்டு' கொரோனா தடுப்பூசிக்கான விலையை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் ரூ.400 என்றும், தனியார் மருத்துவமனைகளில் ரூ.600 எனவும் விலை நிர்ணயம் செய்துள்ளது.

இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வரும் சூழலில், தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, வரும் மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. மேலும், தடுப்பூசி உற்பத்தியாளர்கள் 50 சதவீத தடுப்பூசிகளை மத்திய அரசுக்கும், மீதமுள்ள தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கும், திறந்த சந்தைகளிலும் விற்க அனுமதி அளித்தது.


latest tamil news



இவ்வாறு விநியோகிக்கப்படும் தடுப்பூசிகளின் விலையை உற்பத்தியாளர்களே நிர்ணயிக்கவும் மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி, சீரம் நிறுவனம் தயாரித்து வரும் 'கோவிஷீல்டு' தடுப்பூசிக்கான விலையை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.


latest tamil news


அதாவது, மாநில அரசுகளுக்கு, ஒரு டோஸ் தடுப்பூசியின் விலை ரூ.400 என்றும், தனியார் மருத்துவமனையில் ரூ.600 எனவும் விலை நிர்ணயம் செய்து அறிவித்துள்ளது. இவை அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவின் கொரோனா தடுப்பூசி விலையை விட மலிவானது எனவும் குறிப்பிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anbu - Kolkata,இந்தியா
22-ஏப்-202108:14:37 IST Report Abuse
Anbu நிறுவனத்தின் உரிமை உற்பகுதி, பராமரிப்பு செலவு கூடியிருக்கலாம்
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
22-ஏப்-202106:40:59 IST Report Abuse
Mani . V இந்த லட்சணத்தில் அரசு இந்த நிறுவனங்களுக்கு மக்களின் வரிப்பணத்தில் பல்லாயிரம் கோடியை மானியம் என்ற பெயரில் அள்ளிக் கொடுத்துள்ளது. (பின்னர் அந்த மான்யம் தள்ளுபடி செய்யப்பட்டு விடும்). கள்ளக் கணக்காக பார்த்தால் கூட ஒரு ஊசிக்கு பல நூறு கோடி ஆகிறது. இந்திய ஜனத்தொகை 130 கோடி. மானியம் என்று அள்ளிக் கொடுத்துள்ளது கிட்டத்தட்ட 10,000 கோடி. அப்படின்னா ஒரு டோஸ் விலை? இதுக்கு பேசாமல் வெளிநாட்டில் வாங்கி இருக்கலாம். ஒரு டோஸ் சில நூறு ரூபாய் தான் வரும். (சோமாலியா -2 தயாராகிக் கொண்டு இருக்கிறது)
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
21-ஏப்-202119:43:58 IST Report Abuse
Krishnamurthy Venkatesan எதிர் பார்த்ததுதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X