அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆட்சியாளர்களே, அலட்சியம் காட்டாதீர்: கமல் அறிக்கை

Updated : ஏப் 21, 2021 | Added : ஏப் 21, 2021 | கருத்துகள் (27)
Share
Advertisement
சென்னை: கொரோனா தொற்று அதிதீவிரமாக பரவி வரும் சூழலில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதை சுட்டிக்காட்டி மத்திய, மாநில அரசுகளை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை, ஆக்சிஜன் இல்லை, ரெம்டேசிவர் மருந்து இல்லை, தடுப்பூசிகள் இல்லை. ஆபத்து என
MNM, Kamalhaasan, CovidVaccine, Kamal, மக்கள் நீதி மய்யம், கமல்ஹாசன், கொரோனா, தடுப்பூசி

சென்னை: கொரோனா தொற்று அதிதீவிரமாக பரவி வரும் சூழலில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதை சுட்டிக்காட்டி மத்திய, மாநில அரசுகளை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை, ஆக்சிஜன் இல்லை, ரெம்டேசிவர் மருந்து இல்லை, தடுப்பூசிகள் இல்லை. ஆபத்து என அழைத்தால் பிரதமர் அலுவலகத்தில் பிரதமரும் இல்லை என்பதே கசப்பான நிதர்சனம். இந்த 2வது அலையில் குழந்தைகளும் பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்பது கொடுமையிலும் கொடுமை. முதல் தவணை முடிந்து 2வது தவணை தடுப்பூசி போடச் சென்றால் மருந்து கையிருப்பு இல்லை என்றார்கள். தடுப்பூசிகள் எடுத்துக்கொண்ட பின் உடல்நிலையில் ஏற்படும் ஆபத்தற்ற பக்கவிளைவுகள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால், தடுப்பூசி குறித்த அச்சமும் பரவலாக நீடிக்கிறது.


latest tamil news


உலகமே மருந்துக்குத் திண்டாட ஏப்ரல் 11-ம் தேதி வரை தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய 54,28,950 தடுப்பூசிகளில் 12.10 சதவீதம் வீணாகியுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கிடைத்திருக்கும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. பற்பல விதிமுறைகளை விதிப்பவர்கள் டாஸ்மாக் கடைகளென்று வந்துவிட்டால் கரிசனத்துடன் அணுகுவதும் ஏற்புடையதல்ல. தேர்தல் முடிவை எதிர்பார்த்து முடங்கிக் கிடக்கிறதோ தமிழக அரசு எனும் ஐயம் மக்கள் மத்தியில் நிலவுகிறது.


latest tamil news


முன்நின்று நாட்டைக் காக்க வேண்டிய பிரதமரோ தேர்தல் பிரசாரம் செய்து ஓய்ந்த இடைவேளையில் 'ஊசி போடும் திருவிழா', 'ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ்' என விதவிதமான பேன்ஸி பெயர்களைச் சூட்டிக்கொண்டிருக்கிறார். மாநில அரசுகள் மருந்து கொள்முதல் செய்வதில் முழுச் சுதந்தரம் இன்னமும் அளிக்கப்படவில்லை. தீர்வுகளைத் தரமுடியாதவர்கள் அதிகாரத்தை மட்டும் கையில் வைத்திருப்பது கேலிக்குரியது. ஆளாளுக்கு அரசியல் செய்யும் நேரம் இதுவல்ல என்பதைப் புரிந்துகொண்டு முன் நகர வேண்டும். ஆட்சியாளர்களே, அலட்சியம் காட்டாதீர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-ஏப்-202122:34:50 IST Report Abuse
thiagarajanV கமல்ஹாசன் அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் பெண்களை மனைவிகளாக மாற்றுவதற்கே நேரம் போதாது. நம் நாட்டிற்காக தியாகம் செய்து கொண்டிருக்கும் நம் பிரதமரை வம்புக்கு இழுக்கிறார். இந்த மாதிரி கேடு கெட்ட மனிதர்கள் வாழும் இரண்டுங்கெட்டான் ஜனநாயக நாடு தான் நம் இந்தியா. ஏனென்றால் ஒரு சாதாரண local councillor ஐ திட்டினால் அடியாட்களுடன் சேர்ந்து வந்து அடிப்பான்.
Rate this:
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
21-ஏப்-202122:29:11 IST Report Abuse
கல்யாணராமன் சு. \\தடுப்பூசிகள் எடுத்துக்கொண்ட பின் உடல்நிலையில் ஏற்படும் ஆபத்தற்ற பக்கவிளைவுகள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால்\\ /\...... இதுக்கு யார் காரணம் ? உங்களைமாதிரி வேஷம் கட்டுபவர்களும் (உதயண்ணாவும் இதில் அடக்கம்), நாலு வார்த்தை ஒழுங்காக பேசத்தெரியாத உங்க நண்பர் சுடலையும், அவரோட அடிவருடிகளாக திருமா, வைகோ, வீரமணி மற்றும் கம்மிகளும்தானே ?? பொய் செய்திகளை பரப்பர நேரத்திலே உங்க ரசிகர் மன்றம் மற்றும் தேர்தலில் போட்டியிட்ட அறிவுக்கொழுந்துகளை விட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கலாமே ?? அதை ஏன் செய்யவில்லை ??
Rate this:
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
21-ஏப்-202122:24:17 IST Report Abuse
கல்யாணராமன் சு. \\என் சகோதரருக்கே படுக்கை கிடைக்கவில்லை என்கிறார் மத்திய அமைச்சர்........\\ .... இவர் எந்த காலத்திலே இருக்கிறார் ? அமைச்சருடைய தொகுதியை சேர்ந்த ஒருவர் அமைச்சரை tag செய்ததை, அமைச்சர் ஒரு மருத்துவமனைக்கு அனுப்பினார் .... அதை தவறாக படித்து புரிந்துகொண்ட அறிவிலி ஊடகங்கள் எல்லாம் அமைச்சருடைய சகோதரருக்கே இடம் கிடைக்கவில்லை என்று ஓலமிட, அதை அமைச்சர் விளக்கிவிட்டார் ... இந்த கடத்தி முடிந்து ரெண்டு நாளாகிவிட்டது .... இவர் இப்போதுதான் தனது அறிவுஜீவி கருத்தை உதிர்க்கிறார் .........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X