ஆக்சிஜன், மருந்து, தடுப்பூசி பற்றாக்குறை - அரசின் தோல்வி : பிரியங்கா விமர்சனம்

Updated : ஏப் 21, 2021 | Added : ஏப் 21, 2021 | கருத்துகள் (49)
Share
Advertisement
புதுடில்லி: மோசமான திட்டமிடல் காரணமாக தடுப்பூசி பற்றாக்குறை, திட்டமிடல் இல்லாததால் ரெம்டெசிவிர் மருந்து பற்றாக்குறை, சரியான வியூகம் இல்லாததால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஆகியன மத்திய அரசின் தோல்வி என காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா விமர்சித்துள்ளார்.இது தொடர்பாக அவர் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ஆக்சிஜன் அதிக அளவில் உற்பத்தி செய்யும்
Priyanka, Oxygen Shortage, GovtFails, பிரியங்கா, தடுப்பூசி, ஆக்சிஜன், மருந்து, பற்றாக்குறை

புதுடில்லி: மோசமான திட்டமிடல் காரணமாக தடுப்பூசி பற்றாக்குறை, திட்டமிடல் இல்லாததால் ரெம்டெசிவிர் மருந்து பற்றாக்குறை, சரியான வியூகம் இல்லாததால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஆகியன மத்திய அரசின் தோல்வி என காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ஆக்சிஜன் அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கும்போது எப்படி பற்றாக்குறை வருகிறது? முதல் மற்றும் 2ம் அலை கொரோனாவுக்கு இடையே 8 முதல் 9 மாதங்கள் இருந்தன. மத்திய அரசின் சொந்த ஆய்வும் 2வது அலை உடனடியாக பரவும் என்று சுட்டிக்காட்டியது. ஆனாலும் மத்திய அரசு அதனை புறக்கணித்தது. தற்போது இந்தியாவில் 2 ஆயிரம் லாரிகள் மூலமாக மட்டுமே ஆக்சிஜனைக் கொண்டு செல்ல முடியும். தேவைப்படும் இடங்களுக்கு ஆக்சிஜன் சென்று அடையவில்லை.


latest tamil news


கடந்த 6 மாதங்களில் 1.1 மில்லியன் ரெம்டெசிவிர் ஊசி மருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது. இதனால் இன்று நாம் பற்றாக்குறையை எதிர்கொள்கிறோம். ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை அரசு 6 கோடி தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்துள்ளது. அந்த நேரத்தில் 3 முதல் 4 கோடி இந்தியர்களுக்கே தடுப்பூசி போடப்பட்டது. இந்தியர்களுக்கு ஏன் முன்னுரிமை அளிக்கவில்லை? மோசமான திட்டமிடல் காரணமாக தடுப்பூசி பற்றாக்குறை, திட்டமிடல் இல்லாததால் ரெம்டெசிவிர் மருந்து பற்றாக்குறை, சரியான வியூகம் இல்லாததால் ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது. இது அரசாங்கத்தின் தோல்வி ஆகும்.


latest tamil news


இன்றும் பா.ஜ., தலைவர்கள் பிரசாரத்தில் பிஸியாக இருக்கிறார்கள். அவர்கள் பிரசார மேடையில் சிரிக்கிறார்கள், மக்கள் ஆக்சிஜன், படுக்கைகள், மருந்துகள் தேவை என உதவி வேண்டி அழுகின்றனர். பிரதமர் மோடி, மக்களின் உயிரை எப்படி காப்பாற்ற போகிறார் என சொல்ல வேண்டும். இந்த அரசாங்கத்தால் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்புடன் பேச முடிகிறது, எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பேச முடியாதா?. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanan - chennai,இந்தியா
22-ஏப்-202112:05:40 IST Report Abuse
Narayanan we were best country to had controlled that corona. That time our country was facing small portion and we were supplied medicine to other countries and earned good name. But unexpectedly the growth was in high . It is very hard to give all support . that too our manufacturing units are very keen to earn big money.
Rate this:
Cancel
Country First - Madurai,இந்தியா
22-ஏப்-202110:52:40 IST Report Abuse
Country First It's time to stand with government without doubt
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
22-ஏப்-202110:42:19 IST Report Abuse
vbs manian சரியான அர்த்தமில்லை பேச்சு. காரோண இப்படி விஸ்வரூபம் எடுக்கும் என்று உலக சுகாதார அமைப்பே சொல்லவில்லை. எல்லா நாடுகளிலும் இரண்டாம் தாக்கம்.அந்நாட்டு தலைவர்களுக்கும் ஒன்றும் தெரியவில்லையா. இவரைபோல் அவர்களும் தீர்க்கதரிசிகள் இல்லை போலும்.காழ்ப்புணர்ச்சி உளறல். உங்கள் கட்சி ஏதேனும் செய்ததா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X