பொது செய்தி

இந்தியா

இந்திய பக்தர்கள் கைலாசா வர தடை: கொரோனா பீதியில் நித்தியானந்தா

Updated : ஏப் 21, 2021 | Added : ஏப் 21, 2021 | கருத்துகள் (62)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால், இந்திய பக்தர்கள் தனது கைலாசா தீவிற்கு வர அனுமதி இல்லை என சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.பாலியல் புகார், ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கி சர்ச்சைக்கு உள்ளானவர் சாமியார் நித்தியானந்தா. இவர், இந்துக்களுக்காக கைலாசா என்னும் தனித் தீவை உருவாக்கியுள்ளதாக சில மாதங்களுக்கு
Kailasa, Nithyananda, Covid, India, Devotees, கைலாசா, நித்தியானந்தா, இந்தியா, பக்தர்கள், கொரோனா

புதுடில்லி: இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால், இந்திய பக்தர்கள் தனது கைலாசா தீவிற்கு வர அனுமதி இல்லை என சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.

பாலியல் புகார், ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கி சர்ச்சைக்கு உள்ளானவர் சாமியார் நித்தியானந்தா. இவர், இந்துக்களுக்காக கைலாசா என்னும் தனித் தீவை உருவாக்கியுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அது மட்டுமல்லாமல், அதெற்கென தனி ரிசர்வ் வங்கி, கரன்சி நோட்டுகளையும் வெளியிட்டு அதிர்ச்சியளித்தார். அதுமட்டுமல்லாமல், கைலாசா வர விரும்புபவர்களுக்கு இலவச விமான சேவை வழங்கி கூட்டி செல்வதாகவும் தெரிவித்தார். ஆனால், இன்று வரை அந்த கைலாசா தீவு எங்கு இருக்கிறது என்பதற்கான விடை மட்டும் கிடைத்தபாடில்லை.


latest tamil news


கைலாசா எங்கு உள்ளது என்பது நித்தியானந்தாவுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். இது ஒருபுறம் இருக்க, இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமாக இருப்பதால், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இந்தியா செல்ல பயணிகளுக்கு தடை விதித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அதேபாணியில் நித்தியானந்தாவும், இந்திய பக்தர்களுக்கு கைலாசா நாட்டிற்கு வர தடை விதித்துள்ளார். கடந்த 19ம் தேதியிட்டு, நித்தியானந்தாவின் கைலாசா நிர்வாகம் சார்பில் வெளியிட்ட அறிவிப்பாணையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


அதில், 'கொரோனா தொற்று பரவல் பல நாடுகளில் தீவிரமடைந்துள்ளதால் கைலாசா நாட்டிற்கு இந்தியா, ஐரோப்பிய யூனியன், மலேசியா, பிரேசில் என நோய்ப் பரவல் அதிகமாக உள்ள நாடுகளிலிருந்து வரும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. கைலாசாவில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டிருக்கும் அனைவரும் இந்த உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்தும்படி கேட்டுக் கொள்கிறோம்,' என குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce -  ( Posted via: Dinamalar Android App )
22-ஏப்-202116:55:22 IST Report Abuse
oce நித்தி தன்னை அதி புத்திசாலி என்று நினைக்கிறார். அவர் தற்போது தங்கியுள்ள கைலாஸா என்ற பெயரிட்ட இடத்திலிருந்து அவரது வீடியோ போட்டோக்களை அடிக்கடி ஊடகங்களில் ஒளி பரப்பி வருகிறார். இது ஒரு தனி மனிதனால் செய்ய இயலாது. கூகுள் போன்ற பல இணையதளங்கள் வழியாகத்தான் இதை அவர் செய்ய முடியும். அந்த வெப்சைட்டுகளின் தலைமை இடங்களில் அவரது இருப்பிட விவரங்கள் மொபைல் எண் விவரங்கள் இருக்கும். அந்த இணைய தளங்களை நடத்தும் நிறுவனங்கள் வழியாக அவரது இருப்பிடத்தை கண்டு பிடிக்கலாம். அவர் தங்கி இருக்கும் இடத்தின் விவரங்களை மறைக்க கைலாசா என்று பெயரிட்டு ஏமாற்றி வருகிறார்.இப்போது இந்தியாவுக்குள்ள பல்வேறு பிரச்சினைகளில் குற்றவாளியான அவரை பிடிப்பதில் அக்கறை காட்ட வில்லை. விஜய் மல்லையா போன்ற அநேகம் பேர்கள் நித்தியா போலவே வெளிநாடுகளில் அஞ்ஞாத வாசம் செய்து வருகிறார்கள்.
Rate this:
gayathri - coimbatore,இந்தியா
24-ஏப்-202110:20:59 IST Report Abuse
gayathriஅப்படி எல்லாம் பிடித்து குற்றவாளி கூண்டில் நிறுத்தினால் அரசியல் செய்ய முடியாது...
Rate this:
Cancel
oce -  ( Posted via: Dinamalar Android App )
22-ஏப்-202113:38:54 IST Report Abuse
oce இனிமேல் கைலாசா தமாஷ் என்று ஒருபகுதியை தினமலரில் ஆரம்பித்தால் படிப்பவர் பசியை மறப்பார்.
Rate this:
Cancel
Rajinikanth - Chennai,இந்தியா
22-ஏப்-202112:57:34 IST Report Abuse
Rajinikanth தலைமறைவாத்தான் இருக்கு ..இதுல கைலாஸா வர தடை அது இதுன்னு உளறிக்கிட்டு தெரியுது
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
22-ஏப்-202113:58:51 IST Report Abuse
Visu Iyerதலை மறைவாக தான் இருக்கு என்று தெரிந்தே மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X