நள்ளிரவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுற்றித் திரிந்த கரடியால் பரபரப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நள்ளிரவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுற்றித் திரிந்த கரடியால் பரபரப்பு

Added : ஏப் 21, 2021
Share
ஊட்டி: நீலகிரி மாவட்டம், கலெக்டர் அலுவலகம் எதிரே ஸ்டீபன் சர்ச், மேற்புரத்தில் கம்பி சோலை வனப்பகுதி உள்ளது. நேற்று நள்ளிரவு, வனத்திலிருந்து வெளியேறிய ஒற்றை கரடி, ஊட்டி - தேனாடு கம்பை பிரதான சாலை வழியாக ஹாயாக வந்து, கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்தது. கரடி வந்து சென்றது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது. கரடி வந்து சென்ற பகுதிகளை சுற்றி குடியிருப்புகள்
நள்ளிரவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுற்றித் திரிந்த கரடியால் பரபரப்பு

ஊட்டி: நீலகிரி மாவட்டம், கலெக்டர் அலுவலகம் எதிரே ஸ்டீபன் சர்ச், மேற்புரத்தில் கம்பி சோலை வனப்பகுதி உள்ளது. நேற்று நள்ளிரவு, வனத்திலிருந்து வெளியேறிய ஒற்றை கரடி, ஊட்டி - தேனாடு கம்பை பிரதான சாலை வழியாக ஹாயாக வந்து, கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்தது. கரடி வந்து சென்றது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது. கரடி வந்து சென்ற பகுதிகளை சுற்றி குடியிருப்புகள் உள்ளன. இங்கு, கரடி வந்து சென்றது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. வனத்துறையினர் நேற்று காலை அப்பகுதியில், ஆய்வு செய்து கண்காணித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X