பொது செய்தி

இந்தியா

தடுப்பூசி போட்ட பின்னரும் ஏன் முகக்கவசம் அணிய வேண்டும்?

Added : ஏப் 21, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
மும்பை: தற்போது கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. ஒரு நாளில் சராசரியாக இரண்டரை லட்சத்திலிருந்து மூன்று லட்சம்பேர் வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒன்றரை லட்சம்பேர் குணமாகி வருகின்றனர்.இந்நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணி பல்வேறு மாநிலங்களில் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்தப்பட்டால் முகக் கவசம்
vaccinate, mask, தடுப்பூசி, முகக்கவசம்,

மும்பை: தற்போது கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. ஒரு நாளில் சராசரியாக இரண்டரை லட்சத்திலிருந்து மூன்று லட்சம்பேர் வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒன்றரை லட்சம்பேர் குணமாகி வருகின்றனர்.

இந்நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணி பல்வேறு மாநிலங்களில் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்தப்பட்டால் முகக் கவசம் அணியாமல் சுதந்திரமாக வெளியே உலாவலாம் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் தடுப்பூசி போட்ட பின்னரும் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். தடுப்பூசி, செலுத்திவிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிவிடும் அல்லவா? அதன் பின்னர் எதற்காக முக கவசம் என்று பலர் நினைக்கின்றனர். இது தவறு என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதற்கான காரணத்தை தற்போது பாரத் பயோடெக் நிறுவனத்தின் டாக்டர் கிருஷ்ணா தெளிவாக விளக்கியுள்ளார்.


latest tamil news


தடுப்பு மருந்து நுரையீரலின் அடிப்பாகத்திற்கு பாதுகாப்பு அளிக்குமே தவிர, மேல் பாகத்திற்கு பாதுகாப்பு அளிக்காது. இதன்காரணமாக நாம் சுவாசிக்கும் காற்று வழியாக நுரையீரலின் மேல்பாகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆகவே முகக் கவசம் அணிவது அவசியம் என்று அவர் விளக்கியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
22-ஏப்-202110:53:13 IST Report Abuse
Ramalingam Shanmugam 20% risk is there thats why we have to wear mask
Rate this:
Cancel
ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா
22-ஏப்-202109:11:54 IST Report Abuse
ShivRam ShivShyam படத்தில் கொரோனா சிவப்பாக உருண்டு திரண்டு சும்மா கும்முனு இருக்கு மூணு லட்சம் தான் ..
Rate this:
Cancel
oce -  ( Posted via: Dinamalar Android App )
22-ஏப்-202107:31:53 IST Report Abuse
oce குரோனா வராமல் தடுக்க தடுப்பூசி. சரி. வந்ததை தடுக்க எந்த ஊசி. இந்த தடுப்பூசிகளை குரோனாவின் ஆரம்ப கட்டத்திலேயே கண்டு பிடித்து அது தலை தூக்காமல் அப்போதே செய்திருக்க வேண்டும். தும்பை விட்டு இப்போ வாலை பிடிக்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X