நாடு ஆக்சிஜன் பற்றாக்குறையை சந்திப்பது எதனால்?

Updated : ஏப் 21, 2021 | Added : ஏப் 21, 2021 | கருத்துகள் (24) | |
Advertisement
புதுடில்லி: முதல் கொரோனா அலையை காட்டிலும், 2-ம் அலையில் ஒரு நாளைக்கு 2,220 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கூடுதலாக தேவைப்படுகிறது. தேவைக்கேற்ப தயாரிப்பு இருப்பினும், அவற்றை ஒரே சமயத்தில் பலருக்கும் விநியோகிக்க இயலாததே பற்றாக்குறைக்கு காரணம் என்கின்றனர்.நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் இறப்பதாக செய்திகள் வெளியாகின்றன. டில்லி, உ.பி., ம.பி., மஹாராஷ்டிரா,
oxygen, hospital, corona, coronavirus, covid19, ஆக்சிஜன்,  நாடு, கொரோனா, வைரஸ், கோவிட்19

புதுடில்லி: முதல் கொரோனா அலையை காட்டிலும், 2-ம் அலையில் ஒரு நாளைக்கு 2,220 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கூடுதலாக தேவைப்படுகிறது. தேவைக்கேற்ப தயாரிப்பு இருப்பினும், அவற்றை ஒரே சமயத்தில் பலருக்கும் விநியோகிக்க இயலாததே பற்றாக்குறைக்கு காரணம் என்கின்றனர்.

நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் இறப்பதாக செய்திகள் வெளியாகின்றன. டில்லி, உ.பி., ம.பி., மஹாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. அவர்களுக்கு விநியோகிக்க போதுமான ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லாததால் பலர் உயிரிழந்தனர். உயிர் காக்கும் ஆக்சிஜனை கூட முறையாக தயாரித்து விநியோகிக்க முடியவில்லை என எதிர்க்கட்சிகளும், மக்களும் மத்திய, மாநில அரசுகளை சமூக ஊடகங்களில் குற்றம்சாட்டி வருகின்றனர். நாட்டில் தேவை இருக்கும் போது ஏற்றுமதி செய்யப்பட்டதாக புகார் கூறுகின்றனர்.


ஏற்றுமதி அதிகரிப்பு!


வணிகத் துறையின் ஆக்சிஜன் ஏற்றுமதி தரவுகளின் படி, ஏப்ரல் 2020 முதல் ஜன., 2021 வரை உலக நாடுகளுக்கு இந்தியா 9,301 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஏற்றுமதி செய்துள்ளது. அதற்கு முந்தைய நிதியாண்டில் 4,502 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டது. ஏற்றுமதி செய்யப்பட்ட திரவ ஆக்சிஜன் மருத்துவ மற்றும் தொழிற்துறை தேவைக்கு உபயோகப்படும். இருப்பினும் இந்தியா ஏற்றுமதி செய்த காலத்தில் ஆக்சிஜன் தேவை உள்நாட்டில் அதிகமாக இல்லை. ஏப்ரல் இரண்டாம் வாரத்திற்கு பின்பு தான் இந்தியாவின் ஆக்சிஜன் தேவை ராக்கெட் வேகத்தில் அதிகரித்தது என கிரிசில் நிறுவனம் கூறுகிறது.விநியோகத்தில் தான் சிக்கல்!


கொரோனா இரண்டாவது அலையில் மூச்சுத் திணறல் ஒரு கவலையளிக்கும் விஷயமாக உருவெடுத்திருக்கிறது என முன்னதாக ஐ.சி.எம்.ஆர்., தலைவர் பல்ராம் பார்கவா குறிப்பிட்டிருந்தார். அவர் கூறியபடியே இன்று மருத்துவ ஆக்ஸிஜனின் தேவை இரு மடங்காக அதிகரித்துள்ளது. முதல் அலையின் போது ஒரு நாளின் தேவை 700 மெட்ரிக் டன்னிலிருந்து 2,800 மெட்ரின் டன்னானது. அது தற்போது 5,000 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. ஆனால் உண்மையில் இந்தியா தினசரி 7,000 மெட்ரிக் டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்கிறது. இருப்பினும் விநியோக சங்கிலி பிரச்னையால் பற்றாக்குறை எழுகிறது.


latest tamil newsஇந்தியாவின் 50% மருத்துவ ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்யும் ஐநாக்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் சித்தார்த் ஜெயின் இது குறித்து பேசியுள்ளார். “ தற்போது, ஒரு நாளைக்கு 7,200 மெட்ரிக் டன் ஆக்சிஜன் திரவ வடிவில் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. தற்போதைய தேவை 5,000 மெட்ரிக் டன் மட்டுமே. மஹா., குஜராத், ம.பி.,யில் தேவை அதிகம் உள்ளது. ஆனால் விநியோகமானது அங்கிருந்து வெகு தொலைவில் உள்ளது. ம.பி.,யில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் இல்லை. போக்குவரத்துக்கான வழியை கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம். என்றார்.டேங்கர்கள் பற்றாக்குறை!


திரவ ஆக்சிஜனைக் கொண்டு செல்வதற்குத் தேவையான கிரையோஜெனிக் டேங்கர்களுக்கு பற்றாக்குறை உள்ளது. ஒரே நேரத்தில் பல்வேறு மருத்துவமனைகள் எதிர்பார்க்கின்றன. அதிக கிரையோஜெனிக் டேங்கர்களை உற்பத்தி செய்ய வேண்டும். அதற்கு 4 மாதங்கள் வரை ஆகும் என்கின்றனர். இந்த குறிப்பிட்ட டேங்கர்களின் பற்றாக்குறையால் உற்பத்தியாளர்களிடமிருந்து ஆக்சிஜனை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல தாமதமாகிறது. அரசு 50 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜனை இறக்குமதி செய்யும் வேலைகளை தொடங்கியுள்ளது. அதன் பின் நிலைமை சீராகும் என அத்துறை ஆட்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
INDIAN Kumar - chennai,இந்தியா
22-ஏப்-202117:22:43 IST Report Abuse
INDIAN Kumar தீதும் மற்றும் பிறர் தர வாரா
Rate this:
Cancel
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
22-ஏப்-202111:09:05 IST Report Abuse
தஞ்சை மன்னர் "" ம.பி.,யில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் இல்லை "" ஆஹா பேஷ் பேஷ் பேஷ் நன்னா இருக்கு
Rate this:
Sai - Paris,பிரான்ஸ்
22-ஏப்-202121:18:07 IST Report Abuse
Saiஅங்கே த்ராவிஷ கட்சிகளின் ஆட்சியில்லை கடந்த இருபது ஆண்டுகளாகவே திறமை மிக்க புத்திசாலி BJP ஆட்சிதான் அதான் இப்படி தெனாலி ராமன்போல வெறுங்கையை முழம்போடுகிறானுங்கோ...
Rate this:
Ganapathy Subramanian - Muscat,ஓமன்
27-ஏப்-202114:38:45 IST Report Abuse
 Ganapathy Subramanianஎனக்கு தெரிந்த வரையில் ஒரு வருடத்துக்கு முன்னாள் கூட கமல்நாத் என்னும் காங்கிரஸ் காரர்தான் முதல்வராய் இருந்தார். சென்ற பாராளுமன்ற தேர்தலுக்கு கூட அரசு நிதியை காங்கிரஸ் தேர்தல் செலவுக்கு திருப்பி விட்டார் என்று ஆதாரங்களுடன் குற்றம் சாற்றப்பட்டார். குறை சொல்லவேண்டும் என்பதற்காக பொய் சொல்லக்கூடாது. உங்கள் பெயரில் உள்ள திருஞானசம்பந்தர் அவதரித்த ஊரில் சில வருடங்கள் இருந்தேன் என்பதற்க்காக அவர் பெயரை உங்கள் பெயரில் இணைத்து இருப்பதால் கொஞ்சம் மரியாதை வைத்து இருந்தேன், கெடுத்து கொள்ளாதீர்கள்....
Rate this:
Cancel
22-ஏப்-202111:01:41 IST Report Abuse
Ganesan Madurai தில்லி மருத்துவமனைகளுக்கு வரும் ஆக்ஸிஜனை சுங்கு எல்லையில் விவசாயிகள் தடுப்பதால் தில்லி மருத்துவமனைகள் திண்டாடுகின்றன.
Rate this:
sharmilaagopu - mysore,இந்தியா
22-ஏப்-202114:00:38 IST Report Abuse
sharmilaagopuவிவசாயிகள் அந்தளவிற்கு இரக்கமில்லாதவர்கள் இல்லை. உங்களையெல்லாம் போன்று சுயநலமாய் அவர்கள் நினைத்திருந்தால் உணவு உற்பத்தியையே நிறுத்தி இருக்க முடியும் ஆனால் அப்படி செய்யாமல் போராடுபவர்கள் பிரிந்து விவசாயம் செய்ய கிளம்பி தொடங்கியும் விட்டார்கள் என்பதுதான் செய்தி....
Rate this:
ஏடு கொண்டலு - Cupertino,யூ.எஸ்.ஏ
27-ஏப்-202102:20:16 IST Report Abuse
ஏடு கொண்டலுஇவர்கள் விவசாயிகள் போர்வையில் உள்ள கம்யூனிஸ்ட்கள். கம்யூனிஸ்ட்கள் இதையும் செய்வார்கள் இதற்கு மேலும் செய்வார்கள். தமிழகத்தில் உடன்பிறப்புகள் கண்டெய்னர் லாரிகளை மறுப்பதும் இதே நோக்கத்தில் இருக்கலாம். திடல் ஊடகங்கள் மக்களின் பீதியைக் கிளப்பி, இளைஞர்களையும், ஆக்சிஜன் தேவைப்படாதவர்களையும் மருத்துவமனைகளுக்கு அனுப்பி, உண்மையிலேயே தேவை உள்ளவர்களுக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் செய்யும் "denial of service attach" செய்கிறார்களா என்று உளவுத்துறை ஆராயவேண்டும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X