கர்ப்பிணி போலீஸ் அதிகாரி செயலுக்கு குவியும் பாராட்டு

Added : ஏப் 21, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
தன்டேவாடா:சத்தீஸ்கரில், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், சாலையில் நின்று பணியில் ஈடுபட்ட கர்ப்பிணி டி.எஸ்.பி.,யின் செயல், அனைவரையும் திரும்பி பார்க்க வைத்து உள்ளது.சத்தீஸ்கரில், முதல்வர் பூபேஷ் பாஹெல் தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மாநில அரசு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்நிலையில், இங்குள்ள தன்டேவாடா மாவட்டத்தில்,
 கர்ப்பிணி போலீஸ் அதிகாரி செயலுக்கு குவியும் பாராட்டு

தன்டேவாடா:சத்தீஸ்கரில், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், சாலையில் நின்று பணியில் ஈடுபட்ட கர்ப்பிணி டி.எஸ்.பி.,யின் செயல், அனைவரையும் திரும்பி பார்க்க வைத்து உள்ளது.

சத்தீஸ்கரில், முதல்வர் பூபேஷ் பாஹெல் தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மாநில அரசு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்நிலையில், இங்குள்ள தன்டேவாடா மாவட்டத்தில், போலீஸ் டி.எஸ்.பி., ஷில்பா சாஹுவின் புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


அறிவுரை

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், கர்ப்பிணியான ஷில்பா, முக கவசம் அணிந்தவாறு, லத்தியுடன் சாலையில் நின்று பணியில் ஈடுபட்டு உள்ளார்.மேலும், அங்கு வாகனங்களில் வருவோரிடம், கொரோனா வழிமுறைகளை முறையாக பின்பற்றுமாறு அறிவுறுத்தி உள்ளார். அவருடன் சில போலீஸ் அதிகாரிகளும், உடன் நிற்கும் வகையிலான புகைப்படங்கள் வெளியாயின.


பாராட்டு

இதில் ஒரு படத்தை, கூடுதல் போக்குவரத்து கமிஷனர் தீபன்ஷு காப்ரா, தன், 'டுவிட்டர்' பக்கத்தில் வெளியிட்டு, அதன்கீழ் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:இந்த படத்தில் உள்ளவர், தன்டேவாடா மாவட்ட டி.எஸ்.பி., ஷில்பா சாஹு. கர்ப்பிணியான இவர், கடும் வெயிலுக்கு மத்தியில், தன் குழுவுடன் சேர்ந்து, சாலையில் செல்லும் மக்களுக்கு அறிவுரை வழங்கி வருவதில், 'பிஸி'யாக உள்ளார்.

கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற, தங்களால் முடிந்த அனைத்தையும் போலீசார் செய்து வருகின்றனர்.எனவே, பொறுப்பான குடிமக்களான நீங்கள் அனைவரும், ஊரடங்கின்போது, வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். ஷில்பாவின் இந்த செயலுக்கு, பல தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
22-ஏப்-202119:46:36 IST Report Abuse
தமிழவேல் அந்த போலீஸும்தான்.........
Rate this:
Cancel
ramesh kumar v - Mumbai,இந்தியா
22-ஏப்-202119:20:30 IST Report Abuse
ramesh kumar v ஒரு DSP என்பவர் இப்படி லட்தியுடன் தெருவில் நின்று வேலை செய்வது என்பது அவசியமற்றது. அவர் தனக்கு கீழ் உள்ள காவல்துறை அலுவலரகளை சரியான முறையில் வேலை வாங்கினால் போதும். வேண்டுமென்றால் சில நேரங்களில் அவர்களுடன் field work பண்ணலாம் அவர்களை உற்சாக படுத்துவதற்காக. இந்த அதிகாரி செய்யும் செயல் வெறும் கவன ஈர்ப்புக்காகவும் விளம்பரத்திற்காகவும் மட்டுமே. ஒரு DSP கு கீழ் இரண்ட்டிற்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள் இருக்கும். அவர் இந்த காவல் நிலைய அதிகாரிகளை வேலை வாங்கினால் போதும்.
Rate this:
sam - Bangalore,இந்தியா
23-ஏப்-202122:18:50 IST Report Abuse
samEven I thought the same. More of ads.. If it is a police cons then make sence....
Rate this:
Cancel
Muthu Kumarasamy - Mettupalayam, Coimbatore Dist.,இந்தியா
22-ஏப்-202116:43:33 IST Report Abuse
Muthu Kumarasamy காவல் துறை பெண் அதிகாரியின் கடமை உணர்வு பாராட்டுதலுக்குரியது. ஆனால், அவர் மீது வாகனம் மோதுவதற்கு வாய்ப்பு உள்ளது. கர்ப்பிணியாக இருப்பதால், சாலை நடுவில் நிற்காமல், ஓரமாக நின்று பணியாற்றியிருக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X