பொது செய்தி

இந்தியா

திருமலையில் பிறந்தார் அனுமன்: தேவஸ்தானம்

Updated : ஏப் 23, 2021 | Added : ஏப் 21, 2021 | கருத்துகள் (27)
Share
Advertisement
திருப்பதி :'திருமலை திருப்பதி திருக்கோவில் அமைந்துள்ள, சேஷாசல மலைத்தொடரில் உள்ள அஞ்சனாத்ரி என்ற மலை தான், அனுமனின் பிறப்பிடம்' என, திருப்பதி தேவஸ்தானம் அதிகாரப்பூர்வமான ஆதாரங்களுடன் நேற்று அறிவித்தது. ராம பக்தரான அனுமன் பிறந்த இடம் குறித்து, புராணங்களிலும், இதிகாசங்களிலும் பல்வேறு குறிப்புகள் உள்ளன. வெங்கடாசல மகாத்மியம் உள்ளிட்ட சில புராணங்களில் அனுமன்
திருமலை, அனுமன்,பிறந்தார்,  தேவஸ்தானம்

திருப்பதி :'திருமலை திருப்பதி திருக்கோவில் அமைந்துள்ள, சேஷாசல மலைத்தொடரில் உள்ள அஞ்சனாத்ரி என்ற மலை தான், அனுமனின் பிறப்பிடம்' என, திருப்பதி தேவஸ்தானம் அதிகாரப்பூர்வமான ஆதாரங்களுடன் நேற்று அறிவித்தது.

ராம பக்தரான அனுமன் பிறந்த இடம் குறித்து, புராணங்களிலும், இதிகாசங்களிலும் பல்வேறு குறிப்புகள் உள்ளன. வெங்கடாசல மகாத்மியம் உள்ளிட்ட சில புராணங்களில் அனுமன் பிறந்த இடம், திருமலையில் அமைந்துள்ள அஞ்சனாத்ரி மலை என கூறப்பட்டுள்ளது.


திருமலையில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் அனுமன் பிறந்தார்! திருப்பதி தேவஸ்தானம் அறிவித்தது

ஆய்வுஇதுகுறித்து ஆய்வு செய்ய, தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் முரளி தர சர்மா தலைமையில், பல்வேறு துறை சார்ந்த வல்லுனர்கள் அடங்கிய குழுவை, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சமீபத்தில் நியமித்தது. இக்குழுவினர், நான்கு மாதங்களாக ஆய்வு நடத்தி, தங்கள் அறிக்கையை நேற்று வெளியிட்டனர். அதில், 'திருமலை திருப்பதி திருக்கோவில் அமைந்துள்ள சோஷாசல மலைத் தொடரில் ஒன்றான, அஞ்சனாத்ரி மலையில் தான், அனுமன் பிறந்தார்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான விளக்க உரை மற்றும் ஆதாரங்கள் அடங்கிய, 20 பக்க கையேடும் நேற்று வெளியிடப்பட்டது.ராமநவமி தினமான நேற்று, திருமலை திருக்கோவிலில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் சுவாமி தரிசனம் செய்ய வந்தார். அவரது முன்னிலையில், இந்த அறிவிப்பை தேஸ்தான அதிகாரிகள் வெளியிட்டனர்.

இந்தப் பணிக்காக ஆய்வு செய்யப்பட்ட, 12 புராணங்களிலும் அனுமன் திருமலையில் பிறந்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும், 12 மற்றும் 13ம் நுாற்றாண்டுகளில் எழுதப்பட்ட பல புராணங்களில் அஞ்சனாத்ரி பற்றிய குறிப்புகள் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அறிவிப்புகர்நாடகாவின் ஹம்பி என்ற இடம் தான், ஹனுமனின் பிறப்பிடம் என, இதுநாள் வரை கருதப்படுகிறது.மேலும், ஜார்க்கண்டில் உள்ள அஞ்சன் மலைப்பகுதி; குஜராத்தில் உள்ள நவ்சாரி; ஹரியானாவின் கைத்தல்; மஹாராஷ்டிராவின் திரியம்பகேஸ்வர் அருகில் உள்ள அஞ்சனேரி உள்ளிட்ட இடங்களும், அனுமனின் பிறப்பிடமாக கருதப்படுகிறது.

வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றுப்படி, 'திருமலையின் அஞ்சனாத்ரியில் பிறந்த அனுமன், அங்கிருந்து, 363 கி.மீ., தொலைவில் உள்ள ஹம்பிக்கு சென்றிருக்கலாம்' என கூறப்படுகிறது. திருமலை தேவஸ்தானத்தின் இந்த அறிவிப்பு, புராண, இதிகாச ஆய்வாளர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
23-ஏப்-202104:04:54 IST Report Abuse
தல புராணம் ஆஞ்சநேயரே டுமீல்.. அதுக்கு ஆதாரம் கண்டுபிடிச்சிட்டாங்களாம்.. இதை தான் மதங்கள் செய்கின்றன.. மொதல்லே ஒரு பெரிய பொய்யை சொல்லிட்டு, அப்புறம் அதுக்கு மேலே கதை கட்டிவிடுவது.. சங்கிகள் கவனத்துக்கு.. எல்லா மதங்களையும் தான் சொல்கிறேன். எனக்கு தெரிஞ்சு ஆஞ்சநேயரை கண்டுபிடிச்சது டார்வின் தான்..
Rate this:
N.K - Hamburg,ஜெர்மனி
23-ஏப்-202113:40:08 IST Report Abuse
N.K திருவள்ளுவர் கிரிஸ்துவர் என்று பொய் சொல்லி அதன் மேல் கதை கட்டி விடுவது.. சர்ச்சுகளில் கொடிக்கம்பம் வைப்பது, கோபுரம் கட்டுவது, தீபாராதனை மற்றும் தேர்த்திருவிழா என்று இயேசுவை மதம் மாற்றுவது கேவலமா தெரியவில்லையா?...
Rate this:
Cancel
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
22-ஏப்-202123:08:45 IST Report Abuse
Vittalanand குரங்கு உலகம் முழுவதும் பல இனங்களில் உள்ளன ராமாயண குரங்கு எந்த வகையை சேர்ந்தது.?அனுமானாவைதது புடகங்கா யாவது. நானும் ஆஸ்தீகன் தான். இந்த திருப்பதி கொழுத்த தடிமாடுகளை ஒத்து இருக்கும் பூசாரிகளை பார்த்து வெறுப்பு வந்துவிட்டது. வசூலிலேயே கண்நாகயிருப்பார்கள். இதில் குரங்கு கருடன் என்று பீலா விட்டு தனியாக சம்பதிப்பார்கள்.
Rate this:
Cancel
Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ
22-ஏப்-202121:41:41 IST Report Abuse
Easwar Kamal இந்த அந்தரகாரனுங்க தொல்லை தாங்கமுடியலை. திருப்பதி வச்சு கொள்ளை அடிச்சாச்சு இப்போ ஆஞ்சநேயர் வைத்து கொள்ளை அடிக்க பிளான் பண்ணியாச்சு. வால்மீகி ராமாயணம் மற்றும் கம்ப ராமாயணம் இதுதான் மொழிகளில் முதன்மையாக மொழி மற்றம் செய்யப்பட்டது அதற்கு பின்னாளில் தன தெலுகு, கன்னடம் மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது. திருப்பதி கோவில் பல்லவர்கள், சோழர்கால உருவாக்கப்பட்டது. இதற்கு பல சான்றுகள் உள்ளது. அது சேரி அஞ்செயனார் என்ன மொழி பேசினார் அதுவும் சொல்லட்டுமே. தெலுகு மொழி 800 அண்டங்களுக்குல் தன தோன்றியது. கன்னடம் அதற்கு முன்னாள் தோன்றிய மொழி. கன்னடத்தில் இருந்துதான் தெலுகு மொழி உருவாக்கப்பட்டது. இது உண்மை என்றல் ஆஞ்சேநேயரும் ஹம்பி தன பிறந்தார். இது கண்டிப்பாக கனடியார்கள் பதில் சொல்லுவார்கள் கூடிய விரைவில்.
Rate this:
N.K - Hamburg,ஜெர்மனி
23-ஏப்-202113:38:09 IST Report Abuse
N.K ஆஞ்சநேயர் பிறப்பிடம் அஞ்சனாத்ரி மலை என்று கூறியுள்ளனர். அவர் தெலுகு பேசினார், பிற்காலத்தில் கட்டப்பட்ட கோவிலில்தான் பிறந்தார் என்று கூறவில்லை. உங்கள் பகுத்தறிவு பிரமாதம். சிலுவையை நட்டு கொள்ளையடிப்பவரை கேட்க துப்பில்லை. தசமபாகம் என்று மக்கள் உழைப்பில் பத்து சதம் உரிந்து, பாவமன்னிப்பு என்கிற பெயரில் சில்மிஷம் செய்து, செத்தால் புதைக்க இடம் தரமாட்டோம் என்று அடாவடி செய்பவரை கேளுங்களேன்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X