பொது செய்தி

இந்தியா

உருமாறிய கொரோனாவை அழிக்கிறது 'கோவாக்சின்':ஐ.சி.எம்.ஆர்.,தகவல்

Updated : ஏப் 23, 2021 | Added : ஏப் 21, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி : 'பல்வேறு வகையான கொரோனா வைரசுகளை, 'கோவாக்சின்' தடுப்பு மருந்து எதிர்க்கிறது; இரட்டை உருமாறிய கொரோனா வைரசையும் அழிக்கிறது' என, ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.அதே நேரத்தில், கொரோனா சிகிச்சையில், கோவாக்சின்,78 சதவீதம் பலன் அளிப்பது, மூன்றாவது கட்ட பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, 'பாரத் பயோடெக்'
கொரோனா,அழிக்கிறது 'கோவாக்சின்,ஆறுதல்.ஐ.சி.எம்.ஆர்.,

புதுடில்லி : 'பல்வேறு வகையான கொரோனா வைரசுகளை, 'கோவாக்சின்' தடுப்பு மருந்து எதிர்க்கிறது; இரட்டை உருமாறிய கொரோனா வைரசையும் அழிக்கிறது' என, ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், கொரோனா சிகிச்சையில், கோவாக்சின்,78 சதவீதம் பலன் அளிப்பது, மூன்றாவது கட்ட பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, 'பாரத் பயோடெக்' நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டில், கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. நேற்று மட்டும், 2.95 லட்சம் பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து, தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. மக்களுக்கு, 'கோவிஷீல்டு, கோவாக்சின்' தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. கோவிஷீல்டு தடுப்பூசியை, மஹாராஷ்டிர மாநிலம், புனேவைச் சேர்ந்த, 'சீரம்' நிறுவனம், ஐரோப்பிய நாடான பிரிட்டனின், 'ஆக்ஸ்போர்டு' பல்கலையுடன் இணைந்து தயாரித்து வருகிறது.கோவிஷீல்ட், கோவேக்சின் தடுப்பூசிகள் இந்தியாவில் போடப்பட்டு வருகின்றன. இதில், கோவேக்சின் முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரானது. ஐ தரபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் இதை உருவாக்கியது. கோவேக்சின் செயல்திறன் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு நடத்தியது. பல்வேறு வகை கொரோனா வைரசையும் மற்றும் இரட்டை உருமாற்ற கொரோனா வைரசையும் கோவாக்சின் தடுப்பூசி அழிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. இங்கிலாந்து, பிரேசில் நாடுகளில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவையும் கோவேக்சின் அழிக்கும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. கோவேக்சின் தடுப்பூசி 3ம் கட்ட பரிசோதனையில் இருந்தபோதே அவசர பயன்பாட்டுக்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியது. இந்த முடிவுக்கு பல தரப்பிலும் கண்டனங்கள் கிளம்பின. கோவேக்சின் தடுப்பூசிக்கு இந்தியா மட்டுமல்லாமல் பல நாடுகள் அனுமதி வழங்கியுள்ளன. இன்னும் 60 நாடுகள் பரிசோதனை நடத்தி வருகின்றன. கோவேக்சின் தடுப்பூசி 81 சதவீதம் செயல்திறன் மிக்கது என்பது குறிப்பிடத்தக்கது.


அறிக்கை வெளியீடுகோவாக்சின் தடுப்பூசியை, தெலுங்கானா மாநிலம், ஐதராபாதை சேர்ந்த, 'பாரத் பயோடெக்' நிறுவனம், ஐ.சி.எம்.ஆர்., உடன் இணைந்து தயாரித்து வருகிறது. இந்நிலையில், கோவாக்சின் தடுப்பூசி பற்றி, ஐ.சி.எம்.ஆர்., நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'கோவாக்சின் தடுப்பு மருந்து, பிரிட்டன், பிரேசில் ஆகிய நாடுகளில், உருமாறிய கொரோனா வைரசை எதிர்க்கிறது. இரட்டை உருமாறிய கொரோனா வைரசையும், கோவாக்சின் அழிக்கிறது' எனக் கூறியுள்ளது.
இதற்கிடையே, கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனையின், இரண்டாவது இடைக்கால அறிக்கையை, பாரத் பயோடெக் நிறுவனம், நேற்று வெளியிட்டது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு, கோவாக்சின் தடுப்பூசி, 100 சதவீத பலனை அளிப்பது, மூன்றாம் கட்ட பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.


78 சதவீதம்கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்ட பின், இவர்கள், மருத்துவமனைகளில் சேர்க்கப்பட வேண்டிய அவசியம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.ஒட்டுமொத்தமாக, கொரோனாவுக்கு எதிரான சிகிச்சையில், கோவாக்சின் மருந்தின் பலன், 78 சதவீதமாக உள்ளது.வ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


'கோவிஷீல்டு' விலை நிர்ணயம்'கோவிஷீல்டு' தடுப்பூசியின் விலை குறித்து, சீரம் நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:அடுத்த இரு மாதங்களில், தடுப்பூசி உற்பத்தியில் பற்றாக்குறை இல்லாத சூழலை எட்டுவோம். வரும், 1-ம் தேதி முதல், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தலாம் என, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி, எங்களின், 50 சதவீத தடுப்பூசிகளை, மாநில அரசுகளுக்கும், தனியாருக்கும், மீதியுள்ள, 50 சதவீதத்தை, மத்திய அரசின் கொரோனா தடுப்பூசி திட்டத்துக்கும் வழங்குவோம். தனியாருக்கு ஒரு, 'டோஸ்' கோவிஷீல்ட் தடுப்பூசி விலை, 600 ரூபாயாகவும், மாநிலங்களுக்கு, ஒரு, 'டோஸ்' 400 ரூபாயாகவும் நிர்ணயித்து உள்ளோம். வெளிநாடுகளோடு ஒப்பிடும்போது, நம் நாட்டில் தடுப்பூசி விலை மிகவும் குறைவு. அமெரிக்காவில் தடுப்பூசியின் விலை, தனியாருக்கு, 1,500 ரூபாயாகவும், ரஷ்யா, சீனாவில், 750 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


மே 1 முதல் அனுமதிநாட்டின் தடுப்பூசி திட்டம் பற்றி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:அரசு தடுப்பூசி மையங்களில், முன்கள பணியாளர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும். இந்த மையங்களுக்கு தேவையான தடுப்பூசிகளை, மத்திய அரசு வழங்கும்.தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள், தாங்கள் தயாரிக்கும், 50 சதவீத மருந்துகளை, மாநில அரசுகளுக்கும், வெளிச்சந்தையிலும் நேரடியாக விற்பனை செய்து கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.
மாநில அரசுகள் மற்றும் வெளிச்சந்தையில் விற்கப்படும் தடுப்பு மருந்துக்கான விலையை, மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், முன்கூட்டியே நிர்ணயம் செய்ய வேண்டும். மீதமுள்ள, 50 சதவீத தடுப்பு மருந்துகளை, மத்திய அரசுக்கு, தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் வழங்க வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


வேறுபாடு ஏன்?கோவிஷீல்டு தடுப்பூசி, மத்திய அரசுக்கு, ஒரு, 'டோஸ்' 150 ரூபாய்க்கும், மாநில அரசுகளுக்கு, ஒரு, 'டோஸ்' 400 ரூபாய்க்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதற்காக இந்த வேறுபாடு? இது, கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வரும் மாநில அரசுகள் மீது, கூடுதல் சுமை ஏற்றக் கூடாது.ஜெய்ராம் ரமேஷ், மூத்த தலைவர், காங்கிரஸ்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
22-ஏப்-202110:13:49 IST Report Abuse
அசோக்ராஜ் சரி. நல்லது. கோவிஷீல்டு ரெண்டாம் டோஸு முடிச்சவங்களுக்கு ரெண்டு மாசம் கழிச்சு கோவாக்ஸின் போட்டு விடுங்க. கொரோனாவா நாமளான்னு பார்த்துடுவோம்.
Rate this:
பெரிய ராசு - தென்காசி ,இந்தியா
22-ஏப்-202118:09:02 IST Report Abuse
பெரிய ராசு கொஞ்சம் ரெண்டும் கலந்து குடிங்க பார்த்துருவோம்...
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
22-ஏப்-202107:05:51 IST Report Abuse
Darmavan நம் நாட்டு கண்டுபிடிப்பை,கோவாக்ஸினை ஊக்குவிக்கவேண்டும்
Rate this:
Cancel
Nithya - Chennai,இந்தியா
22-ஏப்-202106:50:52 IST Report Abuse
Nithya Appo covishiekd pottavabga nilaimai????Coaxing stock illainnu romba naala sollittanga Nathi mathi sonna public ethayum namba maattanga
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X