பொது செய்தி

தமிழ்நாடு

முதியோருக்கான முதல் 'ஆன்லைன்' ரேடியோ: அசத்தும் மூத்த குடிமக்கள்

Updated : ஏப் 23, 2021 | Added : ஏப் 21, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
கோவை :'வயது என்பது வெறும் எண்ணிக்கை மட்டும் தான்; திறமைக்கு வயது தடை அல்ல' என்பதை, 'தபோவாணி' ஆன்லைன் ரேடியோ குழுவினர் நிரூபித்துள்ளனர்.கோவை, மாதம்பட்டியில், 'தபோவன்' எனும், ஓய்வு பெற்றவர்கள் வசிக்கும் குடியிருப்பு வளாகம் உள்ளது. இங்கு, 110 குடும்பங்கள் வசித்து வருகின்றன.இவர்கள் அனைவரும், உலகின் பல மூலைகளிலும், பல துறைகளிலும், பல்வேறு உயர்ந்த பதவிகளை வகித்து
முதியோர், 'ஆன்லைன்' ரேடியோ,அனுபவங்கள்,மூத்த குடிமக்கள்

கோவை :'வயது என்பது வெறும் எண்ணிக்கை மட்டும் தான்; திறமைக்கு வயது தடை அல்ல' என்பதை, 'தபோவாணி' ஆன்லைன் ரேடியோ குழுவினர் நிரூபித்துள்ளனர்.

கோவை, மாதம்பட்டியில், 'தபோவன்' எனும், ஓய்வு பெற்றவர்கள் வசிக்கும் குடியிருப்பு வளாகம் உள்ளது. இங்கு, 110 குடும்பங்கள் வசித்து வருகின்றன.இவர்கள் அனைவரும், உலகின் பல மூலைகளிலும், பல துறைகளிலும், பல்வேறு உயர்ந்த பதவிகளை வகித்து வந்துள்ளனர். தங்களின் ஓய்வு காலத்தில் இங்கு வசித்து வருகின்றனர். ஓய்வு பெற்றவர்கள் அமைதியாக வசிப்பதற்கு, கோவையில் ஏராளமான இடங்கள் உள்ளன. ஆனால், இந்த, 'தபோவன்' சற்று மாறுபட்டது.குடியிருப்பு வளாகத்துக்குள் நுழைந்தபோதே, இனிமையான இசை மனதை வருடியது. 10க்கும் மேற்பட்ட முதியவர்கள், ஒன்றாக கூடியிருந்து, ஒவ்வொருவரின் கையிலும், லேப்டாப், கிட்டார், வயலின், மொபைல் போன், ரெக்கார்டர் வைத்து, ஆனந்தமாக பாடல்கள் பாடிக் கொண்டிருந்தனர்.இது குறித்து கேட்டபோது, 'எங்களின் ஆன்லைன் ரேடியோவுக்கு, நிகழ்ச்சியை தயார் செய்து கொண்டிருக்கிறோம்' என, மகிழ்ச்சியுடன் கூறினர்.




வாழ்க்கை அனுபவம்



தபோவனில் வசித்துவரும் ஸ்ரீதர், 74, கூறியதாவது:நான், 'ஆல் இந்தியா ரேடியோ, துார்தர்ஷன்', கோவை வானொலி என, 50 ஆண்டுகள் பணியாற்றி உள்ளேன்.தற்போது, ஓய்வு பெற்று இங்கு வசித்து வருகிறேன். இங்குள்ளவர்களுக்கு, பல்வேறு துறைகளில் அனுபவங்களும், வாழ்க்கை அனுபவங்களும் உள்ளன.அவற்றைக் கொண்டு, இங்கு உள்ளவர்களின், திறமைகளை வெளிக்கொண்டு வர, அனைவரும் இணைந்து, 'தபோவாணி' என்ற ஆன்லைன் ரேடியோவை உருவாக்கியுள்ளோம்.

இங்கு உள்ளவர்களே, நிகழ்ச்சிகளை தொகுத்து, பாடல் பாடி, கதைகள் கூறி வருகின்றனர். இங்குள்ளவர்களின் வாழ்க்கை அனுபவங்களை பேட்டி எடுத்தும், பதிவிட்டு வருகிறோம். ரேடியோ நிகழ்ச்சிக்கான, எடிட்டிங், இசை, பதிவேற்றம் போன்ற அனைத்து பணிகளையும், அனைவரும் இணைந்து செய்து வருகிறோம்.இதனால், எங்கள் திறமை வெளிவருவதோடு, மனதில் மகிழ்ச்சியும், புத்துணர்வும் பலமடங்கு அதிகரித்துள்ளது. இந்த ரேடியோ, இந்தியாவில் முதியவர்களுக்கான, முதல் ஆன்லைன் ரேடியோ. இதற்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.



சிறந்த வாய்ப்பு



'தபோவன்' தலைவர் வரதராஜன் கூறுகையில், ''இங்கு, 110 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இருப்பினும், அனைவரும் ஒரே குடும்பமாக வாழ்ந்து வருகிறோம். இந்த ஆன்லைன் ரேடியோ, ஒவ்வொருவரின் தனித்திறமைகளை வெளிப்படுத்த சிறப்பான வாய்ப்பாக உள்ளது,'' என்றார்.


மகிழ்ச்சி



கிரிஜா என்பவர் கூறுகையில், ''திருமணத்திற்கு முன், ஆல் இந்தியா ரேடியோவில் நாடக கலைஞராக இருந்தேன். திருமணத்திற்குப் பின், 35 ஆண்டுகளாக சமையலறையே வாழ்க்கையாக வாழ்ந்து வந்தேன்.''தற்போது, 'தபோவாணி' ஆன்லைன் ரேடியோவால், மீண்டும் என் நாடக திறமையை வெளிப்படுத்தி வருகிறேன். மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது,'' என்றார்.


மீண்டும் ஆனந்தம்



நந்தகுமார் என்பவர் கூறுகையில், ''பன்னாட்டு நிறுவனத்தில், பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளேன். சிறுவயது முதலே, இசை, நாடக கச்சேரிக்கு அதிகமாக செல்வேன்.''இங்கு வந்ததும், அதை மட்டும் இழப்பதாக எண்ணிக் கொண்டிருந்தேன். தற்போது, 'ஆன்லைன் ரேடியோ' நிகழ்ச்சிகளால், இழந்தது மீண்டும் கிடைத்தது போல ஆனந்தமாக உள்ளது,'' என்றார்.


Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
22-ஏப்-202122:03:56 IST Report Abuse
S. Narayanan பாராட்டுகள்
Rate this:
Cancel
M Selvaraaj Prabu - Gaborone,போஸ்ட்வானா
22-ஏப்-202120:15:42 IST Report Abuse
M Selvaraaj Prabu //35 ஆண்டுகளாக சமையலறையே வாழ்க்கையாக வாழ்ந்து வந்தேன்// இவர் வாழ்க்கையில் அந்த 35 வருடம் வேறு எதுவுமே நடக்கலையா? பிள்ளை பெறலயா, அவங்களுக்கு கல்யாணம் பண்ணலயா? எந்த விசேஷமும் இவரின் உறவு முறையிலும் நடக்கலையா? என்னடா இது அதிசயமா இருக்கு
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
22-ஏப்-202116:31:18 IST Report Abuse
J.V. Iyer ஆஹா அருமை. நல்ல காரியம். முதியோர்கள் ஒன்று சேர்த்தால்..முடிவில்லா ஆனந்தம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X