அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆட்சியாளர்களே அலட்சியம் காட்டாதீர்' : கமல்

Updated : ஏப் 23, 2021 | Added : ஏப் 21, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
சென்னை: 'தீர்வுகளைத் தர முடியாதவர்கள், அதிகாரத்தை மட்டும் கையில் வைத்திருப்பது கேலிக்குரியது. ஆளாளுக்கு அரசியல் செய்யும் நேரம் இதுவல்ல. ஆட்சியாளர்களே அலட்சியம் காட்டாதீர்' என, மக்கள் நீதி மய்யம் தலைவரான நடிகர் கமல் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை, கடும் தீவிரம் அடைந்து வருகிறது. மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆக்சிஜன்,
ஆட்சியாளர்கள், அலட்சியம், காட்டாதீர்' , கமல்

சென்னை: 'தீர்வுகளைத் தர முடியாதவர்கள், அதிகாரத்தை மட்டும் கையில் வைத்திருப்பது கேலிக்குரியது. ஆளாளுக்கு அரசியல் செய்யும் நேரம் இதுவல்ல. ஆட்சியாளர்களே அலட்சியம் காட்டாதீர்' என, மக்கள் நீதி மய்யம் தலைவரான நடிகர் கமல் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை, கடும் தீவிரம் அடைந்து வருகிறது. மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து; தடுப்பூசிகள் என, பல இல்லை. ஆபத்து என அழைத்தால், பிரதமர் அலுவலகத்தில் பிரதமரும் இல்லை என்பதே கசப்பான நிதர்சனம்.

கொரோனா தீவிரம் அடைகிறது. அமெரிக்காவை தாண்டி இந்தியா முதலிடம் பிடித்து விடும் என்கிறார்கள் நிபுணர்கள். மருத்துவமனைகளில் படுக்கை இல்லை. ஆக்ஸிஜன் இல்லை. மருந்து இல்லை. தடுப்பூசி இல்லை. தடுப்பூசி போட வருபவர்களிடம் மது, புகை பழக்கம் பற்றி, உடல்நிலை, உட்கொள்ளும் மருந்து பற்றி கேட்பது இல்லை. ரத்த அழுத்தம் கூட பார்ப்பதில்லை. முதல் டோஸ் முடிந்து இரண்டாவது டோஸ் போட சென்றால் ஸ்டாக் இல்லை என்கிறார்கள். உலகமே மருந்துக்கு திண்டாடும்போது தமிழகத்துக்கு கிடைத்த 54,28,950 தடுப்பூசிகளில் 12% வீணாகி இருக்கிறது. அனைத்துக்கும் கட்டுப்பாடு விதிக்கும் அரசு டாஸ்மாக் கடை என்றால் மட்டும் கரிசனம் காட்டுகிறது. தேர்தல் முடிவை எதிர்பார்த்து முடங்கி கிடக்கிறதா தமிழக அரசு? என் சகோதரருக்கே படுக்கை கிடைக்கவில்லை என்கிறார் மத்திய அமைச்சர். மாநில அரசுகள் கட்டுப்படுத்தாமல், எங்களிடம் மருந்து கேட்டால் எப்படி என்கிறார் இன்னொரு அமைச்சர். பிரதமரோ தேர்தல் பிரச்சார இடைவேளையில் 'ஊசி போடும் திருவிழா', 'ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ்' என ஃபேன்ஸி பெயர் சூட்டி கொண்டிருக்கிறார். ஆளாளுக்கு அரசியல் செய்யும் நேரம் இதுவல்ல. ஆட்சியாளர்களே, அலட்சியம் காட்டாதீர்!

பெரிய பெரிய தலைவர்கள் முதல், கடைக்கோடி மனிதர்கள் வரை, நாளுக்கு நாள் தொற்று காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. இரண்டாவது அலையில், குழந்தைகளும் பெருமளவில் பாதிக்கப்படுவது கொடுமையிலும் கொடுமை.

உலகமே மருந்துக்கு திண்டாட, ஏப்., 11 வரை தமிழகத்திற்கு, மத்திய அரசு வழங்கிய, 54 ஆயிரத்து, 28 ஆயிரத்து, 950 தடுப்பூசிகளில், 12.10 சதவீதம் வீணான தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.

தேர்தல் முடிவை எதிர்பார்த்து, தமிழக அரசு முடங்கிக் கிடக்கிறதோ எனும் சந்தேகம் மக்கள் மத்தியில் நிலவுகிறது. பிரசாரம் செய்து ஓய்ந்த இடைவேளையில், பிரதமரோ, 'ஊசி போடும் திருவிழா, ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ்' என வித விதமான பேன்சி பெயர்களைச் சூட்டிக் கொண்டிருக்கிறார்.

தீர்வுகளைத் தர முடியாதவர்கள், அதிகாரத்தை மட்டும் கையில் வைத்திருப்பது கேலிக்குரியது. ஆளாளுக்கு அரசியல் செய்யும் நேரம் இதுவல்ல; புரிந்துகொண்டு முன்னோக்கி செல்ல வேண்டும். அரசின் ஒவ்வொரு அலகும் கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதிலும், நோயாளிகளைக் குணப்படுத்துவதிலும் சிறு பிசகும் இல்லாமல் செயல்பட்டாக வேண்டும். ஆட்சியாளர்களே, அலட்சியம் காட்டாதீர்!இவ்வாறு, கமல் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
24-ஏப்-202118:48:11 IST Report Abuse
bal எந்த ஒரு ஆளுக்காவது இவன் உதவி செய்திருப்பானா...வெறும் சினிமா டயலாக்.
Rate this:
Cancel
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
23-ஏப்-202100:03:30 IST Report Abuse
Vittalanand அண்ணே அது சரிதான் . ஆனால் நாடு உள்ள நீலையில் குஜரத்தும்கூம் மும்பை க்கும் டெல்லிக்கும் இடையே மட்டும் புல்லட் ரயிலும் , 8 வழி சாலைகள்U அமைப்பதற்கு என்ன அவசரம் வந்து விட்டது? கிறமைப்புறத்திற்கும் நகரங்களுக்கும் ஓடிக்கொண்டிருந்த பாசஞ்சர் ராயிகளை நிறுத்திவிட்டு நகரங்களுக்கிடையே அதி வேக ரயிலில் விவசாயி விளை பொருட்களை கொண்டு செல்ல தனியார் வாகனங்களை நம்பியிருக்கிறார்களே! நாட்டு மக்களையும் சிந்திக்க வேண்டுமல்லவா? சீன அதிபருடன் பேச அகமதாபாத்த்தை மோடி அவர்கள் தே ர்ந்திடுத்ததாகவும், சீனாவுக்கு உடந்தையில்லாமல் போனதால். மகாபலி புறத்தில் பேச்சு நடந்தது. மோடி குஜராத் வியாபாரி. உயின்று குஜராத் எப்படி செழித்திரள்ளது. மதுரையில் எய்ம்ஸ் வரும் இதோ வறுது அப்படி இப்படி என்று பீலா விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
22-ஏப்-202123:41:56 IST Report Abuse
Mohan அப்பு, இந்தியா என்பது 10x10 கூத்தடிக்கும் இடம் இல்லை. அங்கேயே 4 பேரை காவு கொடுத்தே. நீ மறக்கலாம் நாங்க மறக்கமுடியுமா. உன்னைவிட அழகான காரணத்தால் விவேக் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காத ego man.you go man.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X