நாசிக்கில் ஆக்சிஜன் நிரப்பும்போது விபத்து: 24 நோயாளிகள் பலி

Updated : ஏப் 23, 2021 | Added : ஏப் 21, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
நாசிக் :மஹாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் தொட்டியை நிரப்பும்போது கசிவு ஏற்பட்டது. அதனால் ஆக்சிஜன் கிடைக்காமல் 'வென்டிலேட்டர்' உதவியுடன் சிகிச்சையில் இருந்த 24 கொரோனா நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா தேசியவாத காங். மற்றும் காங். கூட்டணி அரசு அமைந்துள்ளது. நாசிக்கில் உள்ள டாக்டர்
நாசிக், ஆக்சிஜன்,விபத்து: 24 நோயாளிகள் பலி

நாசிக் :மஹாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் தொட்டியை நிரப்பும்போது கசிவு ஏற்பட்டது. அதனால் ஆக்சிஜன் கிடைக்காமல் 'வென்டிலேட்டர்' உதவியுடன் சிகிச்சையில் இருந்த 24 கொரோனா நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா தேசியவாத காங். மற்றும் காங். கூட்டணி அரசு அமைந்துள்ளது. நாசிக்கில் உள்ள டாக்டர் ஜாகிர் ஹூசைன் மருத்துவனையில் 150க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 24 பேர் 'வென்டிலேட்டர்' கருவி உதவியுடன் சுவாசித்து வந்தனர்.

மற்றவர்களுக்கும் ஆக்சிஜன் தேவை உள்ளது.இந்த மருத்துவமனையில் சமீபத்தில் இரண்டு ஆக்சிஜன் தொட்டிகள் நிறுவப்பட்டன. அதில் இருந்து குழாய்கள் மூலம் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கப்படுகிறது. இந்த ஆக்சிஜன் தொட்டியை நிரப்புவதற்காக ஒரு டேங்கர் லாரி நேற்று காலை மருத்துவமனைக்கு வந்தது.டேங்கரில் இருந்து தொட்டிக்கு நிரப்பும்போது திடீரென கசிவு ஏற்பட்டது. அதையடுத்து மிகப் பெரும் விபத்து ஏற்படுவதை தடுக்க ஆக்சிஜன் தொட்டி மூடப்பட்டது.

அதனால் ஆக்சிஜன் கிடைக்காமல் வென்டிலேட்டரில் இருந்த 24 நோயாளிகள் உயிரிழந்தனர். அதில் 11 பேர் பெண்கள். இதையடுத்து வெளியில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர் வரவழைக்கப்பட்டு மற்ற நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டது.இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீஸ் தீயணைப்புத் துறையினர் மாவட்ட நிர்வாகம் உள்ளிட்டோர் விரைந்து வந்தனர். சில மணி நேரத்தில் கசிவு நிறுத்தப்பட்டு நிலைமை சீரானதாகவும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வினியோகம் துவங்கியதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவத்தைக் கேள்விப்பட்டதும் நோயாளிகளின் குடும்பத்தார் மருத்துவ மனையைச் சுற்றியுள்ளோர் மருத்துவமனையில் குவிந்தனர். இதனால் சிறிது நேரம் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.


மோடி இரங்கல்



'ஆக்சிஜன் தொட்டியில் ஏற்பட்ட கசிவு காரணமாக நாசிக்கில் நடந்த விபத்து கடும் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தோர் குடும்பத்துக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்' என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.பா.ஜ. மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா மஹாராஷ்டிரா கவர்னர் பகத் சிங் கோஷியாரி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்து முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளதாவது:கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் ஆக்சிஜன் கசிவால் 2௪ பேர் உயிரிழந்துள்ளது வேதனை அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ௫ லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். இந்தப் பிரச்னையை வைத்து அரசியல் செய்ய
வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
23-ஏப்-202120:10:15 IST Report Abuse
Krishnamurthy Venkatesan பொறுப்பற்ற செயல். தனக்கு வந்தால்தான் தெரியும் தலைவலியும் திருகுவலியும். இறந்தவர்கள், அவர்கள் குடும்பத்தினர் எவ்வாறு துடித்து இருப்பர். இறைவா, நீயாவது கடமையில் இருந்து தவறுபவர்களுக்கு கடுமையாக தண்டனை கொடு.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
22-ஏப்-202121:17:57 IST Report Abuse
sankaseshan புராணம் உனக்கு தெரியாததை நீசொல்லாததை சொல்லறேன் கேட்டுக்கோ பட்னவீஸ் தன் ஆட்களை கொட்டிகொண்டுபோய் ஆக்சிஜனை கசிவு செய்தார் , திருப்தியா ?
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
22-ஏப்-202114:47:15 IST Report Abuse
Thiagarajan Kodandaraman இதுவே பீ ஜே பீ ஆண்டிருந்தால் இந்த துயரத்தை வைத்து மத வெறி அரசியல் செய்திருப்பார்கள் இத்தாலிய அடிமை கூட்டம் ...ஒரு சதவிகிதம் கூட அரசாள லாயக்கற்றவர் இந்த முதல்வர் ..பதவி வெறி மட்டுமே உள்ளது இங்குள்ள சுடலை போல் ...மக்களின் பாடு அதோ கதி தான் இந்த கோமஆளிகளின் பதவி வெறியால்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X