மதுரை:''தொடர்ந்து அவதுாறு பரப்பும், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மீது அவதுாறு வழக்கு தொடரப்படும்,'' என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
மதுரையில் அவர் கூறியதாவது:அரக்கோணம் இரட்டை கொலை வழக்கை, சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும். பழிவாங்கும் நோக்குடன், திட்டமிட்டு நடத்தப்பட்ட ஜாதீய கொலை இது. மக்கள் பிரச்னையை, ராமதாஸ் திசை திருப்புகிறார்.தமிழகத்தில் நடக்கும் காதல் பிரச்னைகளுக்கு, கட்சிகள் எப்படி பொறுப்பேற்க முடியும்.
சரஸ்வதி படுகொலைக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் தொடர்பு இல்லை. எங்கள் மீது பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தொடர்ந்து அவதுாறு பரப்பி வருகிறார். அவர் மீது அவதுாறு வழக்கு தொடரப்படும்.நாடு முழுதும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதற்கு, மத்திய அரசின் தவறான முடிவு தான் காரணம்.
ஏற்றுமதியால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி, இதற்கு பொறுப்பேற்க வேண்டும். ஓட்டு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் பாதுகாப்பை, தேர்தல் கமிஷன் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE