சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.1.8 கோடி கள்ளநோட்டு: இருவர் கைது: கேரளா போலீஸ் கோவையில் நடவடிக்கை

Updated : ஏப் 22, 2021 | Added : ஏப் 22, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
போத்தனூர்:கோவையில் 1.8 கோடி ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுகளை கைப்பற்றிய கேரள போலீசார் அதை பதுக்கி வைத்திருந்த இருவரை கைது செய்தனர்.கேரளா கொச்சி அருகேயுள்ள உதயம் பேரூரில் கடந்த 28ல் 95 ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு கள்ளநோட்டு வைத்திருந்த பிரியன் லால் என்பவர் போலீசாரிடம் பிடிபட்டார். அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்.ஐ. சுனேக் தலைமையில்
கள்ள நோட்டு, கேரள போலீஸ், கோவை, கைது

போத்தனூர்:கோவையில் 1.8 கோடி ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுகளை கைப்பற்றிய கேரள போலீசார் அதை பதுக்கி வைத்திருந்த இருவரை கைது செய்தனர்.

கேரளா கொச்சி அருகேயுள்ள உதயம் பேரூரில் கடந்த 28ல் 95 ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு கள்ளநோட்டு வைத்திருந்த பிரியன் லால் என்பவர் போலீசாரிடம் பிடிபட்டார். அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்.ஐ. சுனேக் தலைமையில் ஐந்து போலீசார் நேற்று இரவு கரும்புக்கடை வள்ளல் நகருக்கு வந்தனர். அங்கு அஷ்ரப் அலி 29 என்பவரின் வீட்டிற்கு சென்றனர்.


latest tamil news


அங்கிருந்த அஷ்ரப் அலியிடமிருந்து நான்கு 2000 ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அஷ்ரப் அலியுடன் தெற்கு உக்கடம் அல்- அமீன் காலனியிலுள்ள பானி பூரி வியாபாரி சையது சுல்தான் 32, வீட்டுக்கு சென்றனர். அங்கு மறைத்து வைக்கப் பட்டிருந்த 1.8 கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் சிக்கின.தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார் கேரளா அழைத்துச் சென்றனர். கேரள போலீசாரின் அதிரடி ரெய்டும் கத்தை கத்தையாக கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதும் அப்பகுதியில் நேற்றிரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kannan - Madurai,இந்தியா
24-ஏப்-202116:51:32 IST Report Abuse
kannan தலைப்பை பார்த்தவுடனே என் மனதில் "இதில் அமைதி மார்க்கத்தின் தொடர்பு இருக்குமே ?" என்று தற்செயலாக தோன்றியது. உள்ளே படித்து பார்த்தவுடன் அது உறுதியானது. இது ஏன் நடக்கிறது ?
Rate this:
Cancel
22-ஏப்-202121:40:18 IST Report Abuse
kulandhai Kannan இதுபோல் திட்டமிட்டு, தேச விரோத செயல்களில் ஈடுபடுவோரின் குடும்பத்தினர் அனைவரின் குடியுரிமையை பறிக்குமாறு சட்டமியற்ற வேண்டும்.
Rate this:
Cancel
W W - TRZ,இந்தியா
22-ஏப்-202118:05:45 IST Report Abuse
W W VV VIP கள் பிடிபட்டார்கள் இவர்கள் 100 ல் இருவர் மட்டும் பிடியில், இனியும் இருப்பார்கள் பல பேர் நாட்டை குட்டிசுவரக்கும் இவர்களை ஜாமினில் கூட வீட கூடாது. கேரள போலீஸ்க்கு நன்றி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X