பொது செய்தி

தமிழ்நாடு

'நீட்' பயிற்சியை மீண்டும் 25 ல் துவங்க உத்தரவு

Updated : ஏப் 22, 2021 | Added : ஏப் 22, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை : அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான, இலவச, 'நீட்' பயிற்சியை மீண்டும் துவங்குமாறு, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, மாநில அரசு ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களில், 7.5 சதவீதம் ஒதுக்கப்படுகிறது. அதனால், பல அரசு பள்ளி மாணவர்கள், எளிதாக மருத்துவ படிப்பில் சேரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இந்த

சென்னை : அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான, இலவச, 'நீட்' பயிற்சியை மீண்டும் துவங்குமாறு, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.



latest tamil news



'நீட்' தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, மாநில அரசு ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களில், 7.5 சதவீதம் ஒதுக்கப்படுகிறது. அதனால், பல அரசு பள்ளி மாணவர்கள், எளிதாக மருத்துவ படிப்பில் சேரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இந்த ஒதுக்கீட்டில் சேர உள்ள மாணவர் களுக்கு, இலவச நீட் பயிற்சி, அரசு சார்பில், ஆன்லைன் வழியாக வழங்கப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டில், 5,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் இந்த பயிற்சியை மேற்கொண்டு உள்ளனர்.


latest tamil news



பிளஸ் 2 தேர்வு மே, 5ல் நடக்க இருந்ததால், மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும் வகையில், நீட் தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி, இரண்டு வாரங்களுக்கு முன் நிறுத்தப்பட்டது.ஆனால், கொரோனா பிரச்னை காரணமாக, பொது தேர்வு தேதி திடீரென தள்ளி வைக்கப்பட்டு உள்ளதால், வரும், 25ம் தேதி முதல், மீண்டும் இலவச நீட் பயிற்சியை துவங்க, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான அறிவிப்புகள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வழியே, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Velusamy Ramesh - Thanjavur,இந்தியா
22-ஏப்-202114:52:31 IST Report Abuse
Velusamy Ramesh இது போக, பாடத்திட்டத்தில் ( விடுபட்ட தலைப்புகள்) , நீட் JEE exam சில்லபஸ் சேர்த்தால் ( +1 and +2 ) வில் , பல மாணவர்கள் பாஸ் செய்வார்கள்......
Rate this:
Cancel
22-ஏப்-202108:33:23 IST Report Abuse
ஆரூர் ரங் தளபதி ஆட்சிக்கு வந்தால் இந்தப் பயிற்சியை நிறுத்தி விடுவார் . தமிழனின் பாரம்பரிய பாட்டி வைத்தியம் போதுமானது என்பார். ஊருக்கு ஊர்😎😎 கலைஞர் பாட்டி தாத்தா மருத்துவமனை துவக்கி ஊறல் கஷாயம் இலவசமாக வழங்க வைப்பார்.
Rate this:
Cancel
amuthan - kanyakumari,இந்தியா
22-ஏப்-202108:08:13 IST Report Abuse
amuthan ஐயா ஏதாவது ஒரு முடிவா, நல்லதா சொல்லுங்க
Rate this:
suresh kumar - Salmiyah,குவைத்
22-ஏப்-202112:36:58 IST Report Abuse
suresh kumarஇதோ பிடித்துக் கொள்ளுங்கள் இனி முதல் பிறக்கும் குழந்தை, பிறந்தவுடன் டாக்டர் பட்டம் வழங்கப் படும். அனைவரும் அவரவர் பொறுப்பில் அந்த டாக்டர்களிடம் வைத்தியம் பார்த்துக் கொள்ளலாம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X