பொது செய்தி

இந்தியா

ஜப்பான் பிரதமர் சுகாவின் இந்திய வருகை ரத்து

Updated : ஏப் 22, 2021 | Added : ஏப் 22, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில், கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகாவின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. யோஷிஹைட் சுகா, இம்மாத இறுதியில், இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார்.இந்நிலையில், இந்தியாவில், கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருவதால், யோஷிஹைட் சுகாவின் வருகை ரத்து

புதுடில்லி: இந்தியாவில், கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகாவின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. யோஷிஹைட் சுகா, இம்மாத இறுதியில், இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார்.



latest tamil news



இந்நிலையில், இந்தியாவில், கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருவதால், யோஷிஹைட் சுகாவின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது. பிரிட்டன் பிரதமர், போரிஸ் ஜான்சன், அடுத்த வாரம், இந்தியா வர இருந்தார். அவரும், நாட்டில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருவதால், பயணத்தை ரத்து செய்துள்ளார்.


latest tamil news



ஏற்கனவே கடந்த ஜன., 26ல், குடியரசு தினத்தன்று சிறப்பு விருந்தினராக, போரிஸ் ஜான்சன் பங்கேற்க இருந்தார். அப்போது, பிரிட்டனில் வீரியமிக்க கொரோனா பரவல் அதிகம் இருந்ததால், அவர் இந்திய பயணத்தை ரத்து செய்தார். இந்த வகையில், அவரது இந்தியப் பயணம், இரு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, மே, 8ல் போர்ச்சுகல் நாட்டில், இந்திய - ஐரோப்பிய கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்க இருந்தார். கொரோனா பரவல் காரணமாக, போர்ச்சுகல் பயணத்தை, மோடி ரத்து செய்துள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - nellai,பஹ்ரைன்
22-ஏப்-202116:41:41 IST Report Abuse
Raj சங்கிகளின் மோடி ஆட்சி இருக்கும் வரை இந்தியாக்கு விமோசனம் இல்லை
Rate this:
Cancel
Viswam - Mumbai,இந்தியா
22-ஏப்-202110:57:55 IST Report Abuse
Viswam வந்தே பாரத் விமான சர்வீசும் ஏர் பப்ள் ஒப்பந்தங்களையும் கொஞ்சகாலத்திற்கு நிறுத்தினால் நன்மை பயக்கலாம். வெளிநாட்டுலேந்து வர்றவங்க கொண்டுவர்ற வைரஸும் நம்ம ஊரு வைரஸும் இப்ப இருக்கற மியூட்டேஷன் போறாதுன்னு இன்னும்வேற ஒண்ணா கூடிசேர்ந்து புது தினுசா கிச்சடி மியூட்டேஷன் செஞ்சு நம்மளை போட்டு பார்ப்பதை தவிர்க்கலாம்.
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
22-ஏப்-202115:26:46 IST Report Abuse
தமிழவேல் PCR டெஸ்ட், 72 மணிநேரத்துக்கு முன்னால செய்திருக்கிறவங்களை மட்டுமே இந்தியாவில் நுழைய அனுமதிக்கப் படுகின்றது. ஆனால், உதாரணமாக டெல்லி வந்து இறங்கியவுடன், அங்கும் ஜெனிக் டெஸ்ட் செய்யப்படுகின்றது. அதற்கு 800 ரூ. ஆனால், அவர்கள் யாரிடமும் id அல்லது ph நம்பர் கூட வாங்காமலேயே ok செய்து அனுப்பி வைக்கப் படுகின்றனர். அதாவது, உண்மையிலேயே டெஸ்ட் செய்வதும் இல்லை, ரிசல்ட்டும் அனுப்பப்படுவதும்இல்லை. இது சென்ற ஞாயிறு 18 ல் ஐரோப்பாவிலிருந்து வந்த ஏர் இந்திய விமான பயணிகளுக்கு நடந்தது. 800 x 400 = 3 20 000 ரூ....
Rate this:
Cancel
வெற்றிக்கொடி கட்டு - நாத்திக, தேசவிரோத கட்சிகளை ஆதரிக்காதீர்,இந்தியா
22-ஏப்-202107:16:50 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு அவர் சப்பான் துணை முதல்வரை சந்திப்பதாக திட்டமிட்டார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X