அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம் : ஒரு மாதத்திற்குள் எவ்வளவு பிரச்னை!

Added : ஏப் 22, 2021 | கருத்துகள் (46)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :ஆர்.ஆத்மநாதன், அமெரிக்காவிலிருந்து அனுப்பிய, 'இ -- மெயில்' கடிதம்: 'மழை விட்டாலும் துாவானம் விடவில்லை' என்பதைப் போல, தமிழக சட்டசபைத் தேர்தல் ஓட்டுப்பதிவு, 6ம் தேதியே முடிந்து விட்டாலும், இன்னும் தேர்தல் பரபரப்பு தொடரவே செய்கிறது. ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், பல்வேறு இடங்களில், பலத்த போலீஸ்

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
ஆர்.ஆத்மநாதன், அமெரிக்காவிலிருந்து அனுப்பிய, 'இ -- மெயில்' கடிதம்: 'மழை விட்டாலும் துாவானம் விடவில்லை' என்பதைப் போல, தமிழக சட்டசபைத் தேர்தல் ஓட்டுப்பதிவு, 6ம் தேதியே முடிந்து விட்டாலும், இன்னும் தேர்தல் பரபரப்பு தொடரவே செய்கிறது. ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், பல்வேறு இடங்களில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உள்ளன. ஓட்டுப்பதிவு இயந்திரங்களை மாற்றி விடக் கூடாது என, கட்சிக்காரர்கள், அந்த இடங்களில் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.latest tamil newsஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உள்ள கட்டடம் அருகில் உள்ள மரம், காற்றில் அசைந்தால் கூட, அதை சந்தேகக் கண்ணுடன் பார்த்து, களேபரத்தை கிளப்புவது, அன்றாட நிகழ்வாகி விட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கை, சட்டம் - ஒழுங்கு போன்றவற்றில் கடுமையான வேலைபளுவில் இருக்கும் போலீசாருக்கு, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையை பாதுகாப்பது, கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது. இந்த தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெறும்; யார் யாருக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என, சூதாட்டமும் களைகட்டுகிறது. ஓட்டு எண்ணும் மையங்களில் மூன்றடுக்குப் பாதுகாப்பு, 24 மணி நேரமும் தொடர்கிறது; அதற்கென ஒரு கணிசமான தொகை, மக்கள் வரிப்பணத்தில் இருந்து செலவாகிறது. லோக்சபா தேர்தல், நாடு முழுதும் நடைபெறும் நேரத்தில், ஓரிடத்தின் முடிவு முன்னதாக அறிவிக்கப்பட்டால், அது மற்ற இடங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால் தான், எல்லா இடங்களிலும் தேர்தல் முடிந்த பின், ஒரு நாளில் முடிவு அறிவிக்கப்படுகிறது.


latest tamil newsஆனால் தற்போது, ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் மட்டுமே நடந்து வருகிறது; அவையும், ஒன்றுக்கொன்று அவ்வளவு தொடர்பில்லாதவை. மேலும், இத்தேர்தல்களில் தேசிய கட்சிகளைக் காட்டிலும், பிராந்தியக் கட்சிகளே பிரதானக் கட்சிகள். இந்நிலையில், ஓட்டுஎண்ணிக்கைக்கு, ஒரு மாத இடைவெளியென்பது தேவையற்றது என்றே தோன்றுகிறது. இதே தேர்தல் ஆணையம், 1991 சட்டசபைத் தேர்தலின் போது முடிவுகளை அறிவிக்க, ஒன்பது நாட்கள் மட்டுமே எடுத்துக்கொண்டது. 1996ல், 11 நாட்களிலும்; 2001ல், நான்கு நாட்களிலும்; 2006ல், ஐந்துநாட்களிலும் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இந்த, 'டிஜிட்டல்' யுகத்தில், ஓட்டுப்பதிவுக்கும், எண்ணிக்கைக்கும் இவ்வளவு நாட்கள்இடைவெளியை ஏற்படுத்தியது, ஏற்கத்தக்கது அல்ல. ஒரு வாரத்திற்குள் ஓட்டு எண்ணிக்கை முடித்திருந்தால், மிகுதியான செலவையும், தேவையில்லாத பிரச்னைகளையும் தவிர்த்திருக்கலாம். இனி வரும் காலங்களிலாவது, ஒரு வாரத்திற்குள் தேர்தல் முடிவுகளை அறிவிக்க, ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement
வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
23-ஏப்-202100:06:55 IST Report Abuse
Pugazh V பேரில்லாத அட்ரஸே இல்லாமல் கொடிகட்றவருக்கு என்ன பிரச்னையோ பாவம்... ஏதேதோ உளறியிருக்கிறார். தீமகா யாரு? அவரோட / அவளோட கத முடிந்து போன. ஒன்றா? என்ன கதை அது? மிஷினை மாற்றுவார் களா என்று என்னிடம் கேட்டால் எப்படி? கோத்ரா வில் பலரை உயிரோடு எரித்த கும்பல் என்ன வேணும்னாலும் செய்யும்.
Rate this:
Cancel
r ganesan - kk nagar chennai,இந்தியா
22-ஏப்-202120:12:20 IST Report Abuse
r ganesan நானும் இந்த கருத்தை ஆமோதிக்கிறேன். மின்னணு இயந்திரம் வந்தும் அதன் உபயோகம் இல்லாமல் பொய் விட்டது. அனாவசியமான வீண் செலவு.
Rate this:
Cancel
Chandramouli - Mumbai,இந்தியா
22-ஏப்-202117:40:43 IST Report Abuse
Chandramouli தேர்தல் ஆணையம் 4 தேதிகள் கொடுத்தன தமிழக கட்சிகளுக்கு. எல்லோரும் விரும்பியது 6 ஏப்ரல் .. இதில் அரசை குறை சொல்ல முடியாது . ஏப்ரல் 29 தேதியும் தேர்தல் ஆணையம் கொடுத்ததை தமிழக கட்சிகள் ஒட்டுமொத்தமாக எதிர்த்தனர் . குறைகள் அரசியல் கட்சிகளிடம் தான் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X