சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இன்றைய க்ரைம் ரவுண்ட்அப்

Updated : ஏப் 22, 2021 | Added : ஏப் 22, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
தமிழக நிகழ்வுகள்1. ஆர்.ஐ., வீட்டில் 51 பவுன் திருட்டுஅலங்காநல்லுார்:மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் அருகே மேலச்சின்னம்பட்டியை சேர்ந்தவர் கணேசன் 50. திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஆர்.ஐ.,யாக உள்ளார். அங்கேயே குடும்பத்துடன் வசிக்கும் கணேசன் நேற்று மாலை மேலச்சின்னம்பட்டிக்கு வந்தார்.வீட்டு கதவை திறந்து பார்த்தபோது பீரோவை உடைத்து 51 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் திருடப்பட்டது

தமிழக நிகழ்வுகள்
1. ஆர்.ஐ., வீட்டில் 51 பவுன் திருட்டு
அலங்காநல்லுார்:மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் அருகே மேலச்சின்னம்பட்டியை சேர்ந்தவர் கணேசன் 50. திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஆர்.ஐ.,யாக உள்ளார். அங்கேயே குடும்பத்துடன் வசிக்கும் கணேசன் நேற்று மாலை மேலச்சின்னம்பட்டிக்கு வந்தார்.வீட்டு கதவை திறந்து பார்த்தபோது பீரோவை உடைத்து 51 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் திருடப்பட்டது தெரிந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.latest tamil news2. ரூ.1.8 கோடி கள்ளநோட்டு: இருவர் கைது:கேரளா போலீஸ் கோவையில் அதிரடி
போத்தனூர்:கோவையில், 1.8 கோடி ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுகளை கைப்பற்றிய கேரள போலீசார், அதை பதுக்கி வைத்திருந்த இருவரை கைது செய்தனர்.

கேரளா, கொச்சி அருகேயுள்ள உதயம் பேரூரில், கடந்த, 28ல், 95 ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு கள்ளநோட்டு வைத்திருந்த பிரியன் லால் என்பவர் போலீசாரிடம் பிடிபட்டார். அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்.ஐ., சுனேக் தலைமையில், ஐந்து போலீசார், நேற்று இரவு கரும்புக்கடை, வள்ளல் நகருக்கு வந்தனர்.அங்கு அஷ்ரப் அலி, 29 என்பவரின் வீட்டிற்கு சென்றனர். அங்கிருந்த அஷ்ரப் அலியிடமிருந்து, நான்கு, 2,000 ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் செயயப்பட்டது.


latest tamil newsதொடர்ந்து அஷ்ரப் அலியுடன், தெற்கு உக்கடம், அல்- அமீன் காலனியிலுள்ள பானி பூரி வியாபாரி சையது சுல்தான், 32 வீட்டுக்கு சென்றனர். அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த, 1.8 கோடி ரூபாய் மதிப்பிலான, 2,000 ரூபாய் கள்ள நோட்டுகள் சிக்கின. தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார், கேரளா அழைத்துச் சென்றனர்.கேரள போலீசாரின் அதிரடி ரெய்டும், கத்தை கத்தையாக கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதும், அப்பகுதியில் நேற்றிரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

3. ஊரடங்கு மீறல்; 15 வழக்கு பதிவு
திருப்பூர் : ஊரடங்கு விதிகளை மீறிய, 15 பேர் வழக்கு பதிவு செய்யப்பட்டது.நேற்று முன்தினம் இரவு ஊரடங்கையொட்டி, இரவு, 10:00 மணிக்குள் சம்பந்தப்பட்ட ஊர்களுக்கு பஸ்கள் செல்லும்படி திருப்பூரில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன.

வேலைக்கு சென்று விட்டு, டூவீலர், கார்களில் வீடுக ளுக்கு திரும்பினர். கடைகள் அடைக்கப்பட்டன.எப்போதும் பரபரப்பாக இருக்கும் திருப்பூரின் பிரதான ரோடுகள் வெறிச்சோடி காணப்பட்டது. திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நகரில், திருப்பூர் மாநகராட்சி சந்திப்பு, புஷ்பா சந்திப்பு, குமார் நகர், எஸ்.ஏ.பி., தியேட்டர் சிக்னல், அனுப்பர்பாளையம், அம்மாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.வெளியே சுற்றிய வாகனங்களை நிறுத்தி எச்சரிக்கை செய்து அனுப்பினர். ஊரடங்கு மீறலில் ஈடுபட்டதாக, 15 வழக்குகளை போலீசார்பதிவு செய்தனர்.

4. வழக்கறிஞர் எனக்கூறி ரூ.43 லட்சம் மோசடி
திண்டுக்கல் : வழக்கில் இருந்து விடுவிப்பதாக கூறி தந்தை, மகனிடம் ரூ.43 லட்சம் மோசடி செய்த போலி வழக்கறிஞர் கார்த்தி 33, ஆசிட் குடித்து விட்டதாக கூறி திண்டுக்கல் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

திண்டுக்கல் ஆர்.எம்.காலனி ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் உமையன். இவரது மகன் சிவநாத், 2015ல் குற்றவழக்கில் கைதானார். இந்நிலையில் திண்டுக்கல் முருகபவனம் கார்த்தி, உமையனை சந்தித்து வழக்கறிஞர் எனக்கூறினார். அத்துடன் 'உங்கள் மகனுடன், என் தம்பி சிவா மீதும் வழக்கு பதிவாகியுள்ளது. இருவரையும் விடுவிக்கிறேன்' எனக்கூறி பணம் கேட்டார். 2015 முதல் 2017 வரை 15 தவணைகளில் ரூ.43.8 லட்சத்தை உமையனிடம் இருந்து பெற்றார். 2021 ஜன., கார்த்தி நீதிமன்ற உத்தரவு நகலை உமையன், சிவநாத்திடம் வழங்கினார்.


latest tamil newsஅது போலி என்பதும், கார்த்தி வழக்கறிஞர் இல்லை என்பதும் தெரியவந்தது.இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற உத்தரவுப்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கார்த்தி மீது வழக்குப்பதிந்து விசாரித்தனர். அப்போது அரசு வேலை வாங்கி தருவதாக கூறி கார்த்தி பலரிடம் மோசடி செய்த வழக்கும் நிலுவையில் இருப்பது தெரிந்தது.இந்நிலையில் கைதுக்கு பயந்த கார்த்தி, ஆசிட் குடித்ததாக கூறி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இன்னும் ஓரிரு நாளில் அவர் கைது செய்யப்படுவார் என போலீசார் கூறினர்.

5. சிகிச்சையில் பெண் பலி போலி டாக்டர் கைது
உடுமலை: தவறான சிகிச்சைஅளித்து, பெண் உயிர்இழக்க காரணமாக இருந்த போலி டாக்டரை, போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே பூளவாடி கிராமத்தைச் சேர்ந்தவர், சரஸ்வதி, 60; இரு நாட்களுக்கு முன், உடல்நிலை பாதிப்பால், அதே ஊரில், கிளினிக் நடத்தி வரும், முருகன் தவமணி, 55, என்பவரிடம், சிகிச்சைக் காக சென்றுள்ளார். அவருக்கு, 'குளுக்கோஸ்' ஏற்றப்பட்டுள்ளது. அன்று இரவு, அவரது உடல்நிலை மோசமடைந்ததால், திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். சளி மற்றும் மூச்சுத் திணறல் அதிகளவு இருக்கும் போது, குளுக்கோஸ் ஏற்றப்பட்டதால், அவரது உடல்நிலை மோசமடைந்ததாக, டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். சிறிது நேரத்தில், அவர் உயிரிழந்தார். இதனால், முருகன் தவமணி மீது சரஸ்வதியின் உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு, குடிமங்கலம் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு, புகார் அளித்தனர்.

வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரபாண்டியன் மற்றும் போலீசார், பூளவாடிக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில், முருகன் தவமணி, டாக்டருக்கு படிக்காமல், தனியார் மருத்துவமனையில், உதவியாளராக பணியாற்றிய அனுபவத்தை வைத்து, கிளினிக் நடத்தி வந்தது தெரிந்தது. முருகன் தவமணியை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.


latest tamil newsஇந்தியாவில் நிகழ்வுகள்:
சிறை கைதிகள் தப்பினர்
பிகானீர் : ராஜஸ்தானின் பிகானீர் மாவட்டம் நோகா கிளை சிறையில் இருந்து, சலீம், அனில், மன்தீப் சிங் உட்பட, விசாரணை கைதிகள் ஐந்து பேர், சுவரில் துளையிட்டு நேற்று காலை தப்பினர். இதையடுத்து, பணியில் கவனம் செலுத்தாத சிறை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, சிறைத்துறை இயக்குனர் ஜெனரல் ராஜிவ் தசோட் கூறினார்.


latest tamil newsஉலக நிகழ்வுகள் :-
அமெரிக்காவில் இனவெறி : சீக்கியர்கள் அச்சம்
இன்டியானாபோலிஸ்:அமெரிக்காவில், தங்கள் மீது தொடர்ந்து நடைபெறும் தாக்குதல் குறித்து, சீக்கியர்கள் அச்சமும், கவலையும் தெரிவித்து உள்ளனர்.
அமெரிக்காவின், இன்டியானாபோலிஸ் நகரில், 'பெட்எக்ஸ்' கூரியர் நிறுவனத்தின் மையம் உள்ளது. இங்கு, சீக்கியர்கள் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர். சில தினங்களுக்கு முன் இந்த மையத்தில் நுழைந்த, 'மாஜி' ஊழியர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில், நான்கு சீக்கியர்கள் உட்பட, எட்டு பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தால், பெட்எக்ஸ் மையத்திற்கு மீண்டும் பணிக்கு வர, சீக்கியர்கள் தயங்குகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
22-ஏப்-202109:24:23 IST Report Abuse
DARMHAR பட்டப்படிப்பு பெறாமல் வைத்தியம் செய்யும் போலி அரசு டாக்டர்களை கைது செய்து குறைந்த பட்சம் பத்து ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க அரசு சட்டம் இயற்ற வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X