இந்திய எல்லைக்குள் பாக்., உளவு புறா?

Updated : ஏப் 22, 2021 | Added : ஏப் 22, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
அமிர்தசரஸ்: பாக்.,கில் இருந்து, ரகசிய குறியீட்டு காகிதத்துடன், இந்திய எல்லைக்குள் வந்த புறாவை, போலீசார் மடக்கிப் பிடித்தனர்.பஞ்சாபில், முதல்வர், அமரீந்தர் சிங் தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, பாக்., எல்லையை ஒட்டியுள்ள ரோரன்வாலா கிராமத்தில், நீரஜ் குமார் என்ற கான்ஸ்டபிள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, பாக்., பகுதியில் இருந்து பறந்து வந்த ஒரு

அமிர்தசரஸ்: பாக்.,கில் இருந்து, ரகசிய குறியீட்டு காகிதத்துடன், இந்திய எல்லைக்குள் வந்த புறாவை, போலீசார் மடக்கிப் பிடித்தனர்.



latest tamil news



பஞ்சாபில், முதல்வர், அமரீந்தர் சிங் தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, பாக்., எல்லையை ஒட்டியுள்ள ரோரன்வாலா கிராமத்தில், நீரஜ் குமார் என்ற கான்ஸ்டபிள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, பாக்., பகுதியில் இருந்து பறந்து வந்த ஒரு புறா, நீரஜ் குமார் தோளில் அமர்ந்தது. திடுக்கிட்ட அவர், புறாவை பிடித்து சோதித்தார்.

அப்போது, புறாவின் காலில் ஒரு துண்டு காகிதம் பசை போட்டு ஒட்டப்பட்டிருந்ததைக் கண்டார்.இது குறித்து, தகவல் அறிந்து வந்த உயரதிகாரி, காகிதத்தை எடுத்து பிரித்து பார்த்த போது, அதில் ரகசிய எண்கள் இருந்தது தெரிய வந்தன. இதையடுத்து, அது உளவு பார்க்க, பாக்., ராணுவத்தால் அனுப்பி வைக்கப்பட்ட புறாவா என, போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.


latest tamil news



அதனால், அனுமதியின்றி எல்லை தாண்டி வந்த புறா மீது, போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு, ஜம்மு - காஷ்மீரில், பாக்., எல்லையை ஒட்டிய கத்வா மாவட்டத்தில், இதே போல, ரகசிய குறியீட்டுடன் வந்த மர்ம புறா பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.


Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S Regurathi Pandian - Sivakasi,இந்தியா
22-ஏப்-202116:39:02 IST Report Abuse
S Regurathi Pandian கொரோனா அதிகமாகப் பரவுதே, தடுப்பூசி விலையை ஏத்துறாங்களே, என்னடா பாகிஸ்தான் தீவிரவாதத்தைப் பற்றிப் பேசலியேன்னு நினைச்சேன், இந்த வந்துடுச்சில
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
22-ஏப்-202115:46:08 IST Report Abuse
M  Ramachandran இருபத்தி மூணாம் புலிகேசி கதையில் வரும் புறாவை செய்தது போல் சமைத்து சாப்பிட வேண்டியது தானே?
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
22-ஏப்-202115:15:31 IST Report Abuse
r.sundaram இங்கிருக்கும் பாகிஸ்தான் உளவாளிகளுக்கு வந்த ரகசிய உத்தரவு இது என்று நினைக்க தோன்றுகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X