'வாட்ஸ் ஆப்' வழக்கில் இன்று தீர்ப்பு

Updated : ஏப் 22, 2021 | Added : ஏப் 22, 2021
Share
Advertisement
புதுடில்லி : தொழில் போட்டியை தடுக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்தும் உத்தரவை எதிர்த்து, 'வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ்புக்' நிறுவனங்கள் தொடர்ந்துள்ள வழக்கில், டில்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது.சமூக வலைதளமான, 'வாட்ஸ் ஆப்' தன் தனிநபர் தகவல் பாதுகாப்பு தொடர்பான புதிய கொள்கையை வெளியிட்டுள்ளது. 'பயனாளிகளின் தகவல்கள், தாய் நிறுவனமான, 'பேஸ்புக்'

புதுடில்லி : தொழில் போட்டியை தடுக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்தும் உத்தரவை எதிர்த்து, 'வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ்புக்' நிறுவனங்கள் தொடர்ந்துள்ள வழக்கில், டில்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது.



latest tamil news



சமூக வலைதளமான, 'வாட்ஸ் ஆப்' தன் தனிநபர் தகவல் பாதுகாப்பு தொடர்பான புதிய கொள்கையை வெளியிட்டுள்ளது. 'பயனாளிகளின் தகவல்கள், தாய் நிறுவனமான, 'பேஸ்புக்' சமூக வலைதளத்துக்கு வழங்கப்படும்' என, அதில் கூறப்பட்டுள்ளது. இந்த புதிய கொள்கையை எதிர்த்து, பல வழக்குகள், உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன. இந்நிலையில், இந்த புதிய கொள்கை, தொழில் போட்டியை தடுப்பதாக உள்ளதா என்பது குறித்து விசாரிக்க, சி.சி.ஐ., எனப்படும் இந்திய தொழில் போட்டி கமிஷன், மார்ச், 24ல் உத்தரவிட்டது.


latest tamil news



இதை எதிர்த்து, வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள், டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைப்பதாக, இம்மாதம், 13ல், உயர் நீதிமன்றம் கூறியது. அதன்படி, இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X