பொது செய்தி

இந்தியா

ஆக்சிஜன் டேங்கர் லாரிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு: அமைச்சர் உத்தரவு

Updated : ஏப் 22, 2021 | Added : ஏப் 22, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
சண்டிகர்: தங்களுக்கு வர வேண்டிய ஆக்சிஜன் டேங்கர் லாரி ஒன்றை டில்லி அரசு கொள்ளையடித்துவிட்டதாகவும், அதனால் ஆக்சிஜன் டேங்கர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளதாக அரியானா சுகாதார அமைச்சர் கூறினார்.கொரோனா இரண்டாம் அலையானது மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோரின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. குறிப்பாக நோயாளிகளுக்கு ஆக்சிஜன் உதவி தேவைப்படுகிறது. ஒரே

சண்டிகர்: தங்களுக்கு வர வேண்டிய ஆக்சிஜன் டேங்கர் லாரி ஒன்றை டில்லி அரசு கொள்ளையடித்துவிட்டதாகவும், அதனால் ஆக்சிஜன் டேங்கர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளதாக அரியானா சுகாதார அமைச்சர் கூறினார்.



latest tamil news



கொரோனா இரண்டாம் அலையானது மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோரின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. குறிப்பாக நோயாளிகளுக்கு ஆக்சிஜன் உதவி தேவைப்படுகிறது. ஒரே சமயத்தில் பல மாநிலங்களில் தேவை அதிகரித்திருப்பதால் விநியோகிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. டில்லி அரசு செவ்வாயன்று அவசரகால சூழலை எதிர்கொண்டுள்ளதாகவும், கொரொனா நோயாளிகளுக்கு சில மணிநேரங்களுக்கு மட்டுமே ஆக்சிஜன் வழங்க முடியும் என்றது. அதனைத் தொடர்ந்து டில்லி கங்கா ராம் மருத்துவ மனைக்கு 4500 கன மீட்டர் ஆக்சிஜன், லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனைக்கு 10 டன் ஆக்சிஜனும் கிடைத்தது.


latest tamil news



இந்நிலையில் தங்களுக்கு வர வேண்டிய ஆக்சிஜன் டேங்கர் லாரியை டில்லி அரசு கடத்தி விட்டதாக அரியானா சுகாதார அமைச்சர் அனில் விஜ் கூறினார். டில்லி வழியாக பரிதாபாத் சென்ற வாகனத்தை கொள்ளையடித்தனர் என குற்றம்சாட்டினார். இனிமேல், அனைத்து டேங்கர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மாநிலத்தின் சொந்த தேவையை பூர்த்தி செய்த பின்னர் டில்லிக்கு ஆக்சிஜன் டேங்கர்கள் அனுப்ப தயாராக இருக்கிறோம் என்றார். அமைச்சரின் குற்றச்சாட்டிற்கு டில்லியை ஆளும் ஆம் ஆத்மி இதுவரை பதிலளிக்கவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivaraman - chennai ,இந்தியா
22-ஏப்-202121:38:00 IST Report Abuse
Sivaraman தமிழ் நாட்டில் திரு யோகி மீது செருப்பு வீசினார்கள் . அவர் பிராணவாயு தயாரிப்பில் மிகவும் அதிக கவனம் செலுத்தி நம் நாட்டின் தேவையை பூர்த்தி செய்வார் . தமிழ்நாட்டிற்கும் கிடைக்கும் . செருப்பு வீசியவர் உயிரையும் காப்பாற்றுவார் . வள்ளுவர் வாக்குக்கு மதிப்பளிப்பார்
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
22-ஏப்-202112:42:10 IST Report Abuse
Ramesh Sargam தமிழ் நாட்டுக்கு மட்டும் கண்டைனர் லாரிகளுக்கு மேலும் பாதுகாப்பு தேவை. ஏனென்றால், எதிர்க்கட்சிகள் சில, வொவொரு கண்டைனர் லாரிகள் செல்லும்போதும், அதில் ஒருவேளை மின்னணு வாக்கு இயந்திரங்கள் இருக்குமோ என்கிற சந்தேகத்தில், அந்த லாரிகளின் பின் ஓடுகின்றனர்... பாவம்... அவர்கள் நிலையை பார்த்து கவலைப்படுவதா அல்லது சிரிப்பதா என்று தெரியவில்லை.
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
22-ஏப்-202112:34:45 IST Report Abuse
Thiagarajan Kodandaraman மனிசந மனிசன் சாப்பிடறாண்ட தம்பி பயல என்ற பாட்டு இப்போது நடக்கிறது போல் தெரிகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X