விவேக் மரணத்திற்கும், தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை: மருத்துவமனை விளக்கம்

Updated : ஏப் 22, 2021 | Added : ஏப் 22, 2021 | கருத்துகள் (49) | |
Advertisement
சென்னை: 'அடிக்கடி உருமாற்றம் பெறும் கொரோனா தொற்றை, தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் மட்டுமே,கட்டுப்படுத்த முடியும்.நடிகர் விவேக் மரணத்திற்கும், தடுப்பூசிக்கும் எந்தத்தொடர்பும் இல்லை' என, டாக்டர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.நம் நாட்டில், கொரோனா தடுப்பு மருந்தாக, கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இருவகை தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இதுவரை, 12 கோடி பேருக்கு மேல்
ActorVivek, CovidVaccine, Hospital, Death, நடிகர் விவேக், மரணம், தடுப்பூசி, தொடர்பு இல்லை, மருத்துவமனை

சென்னை: 'அடிக்கடி உருமாற்றம் பெறும் கொரோனா தொற்றை, தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் மட்டுமே,கட்டுப்படுத்த முடியும்.நடிகர் விவேக் மரணத்திற்கும், தடுப்பூசிக்கும் எந்தத்தொடர்பும் இல்லை' என, டாக்டர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

நம் நாட்டில், கொரோனா தடுப்பு மருந்தாக, கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இருவகை தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இதுவரை, 12 கோடி பேருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளநிலையில், பெரிய அளவிலான பக்கவிளைவுகள் ஏற்படவில்லை. தொற்று ஏற்பட்டவர்களுக்கு, பாதிப்பு ஏற்பட்டாலும், நோயின் தீவிரம் தடுப்பூசியால் மட்டுப்படுத்தப்படுகிறது. இந்நிலையில், '18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அவ்வாறு, அனைவரும் தடுப்பூசி போடும் நிலையில், சமூக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்றை கட்டுப்படுத்தலாம். இதன் வாயிலாக, 2019க்கு முன் இருந்த இயல்பான வாழ்க்கைக்கு மீண்டும் திரும்பலாம்' என, மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தடுப்பூசி போட்டுக் கொண்டதாலேயே நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு வந்ததாகவும், அதன் காரணமாகவே அவர் உயிரிழந்ததாகவும், வதந்திகள் பகிரப்படுகின்றன. இதனால், மக்கள் மத்தியில் தேவையற்ற பீதி கிளப்பப்பட்டுள்ளது.இவ்வகை வதந்திகளில் துளியும் உண்மை இல்லை எனக் கூறியுள்ள டாக்டர்கள், தடுப்பூசி போட்டுக் கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், மறைந்த நடிகர் விவேக் சிகிச்சை பெற்ற, சிம்ஸ் மருத்துவமனையின், துணை தலைவர் டாக்டர் ராஜு சிவசாமி அளித்த பேட்டி:


latest tamil newsஉருமாறிய கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி பலன் தருமா?

கொரோனா வைரஸ் பொருத்தவரையில், ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவும்போது உருமாறுகிறது. அதன்படி, ஆறு மாதத்திற்கு ஒருமுறை, அவை, உருமாற்றம் அடையும் தன்மை கொண்டவை. இந்த வைரசை முற்றிலும் தடுக்க நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம், தடுப்பூசி மட்டுமே. நம் நாட்டில் பயன்பாட்டில் உள்ள, இரண்டு வகை தடுப்பூசிகளும், உருமாற்றமடைந்த தொற்றையும் கட்டுப்படுத்த கூடியவை. மேலும், நோயின் வீரியத்தை குறைத்து, உயிரிழப்பை தடுக்க தடுப்பூசிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.


நடிகர் விவேக் சிகிச்சை குறித்து?

நடிகர் விவேக், வீட்டில் இருந்தபோது, நெஞ்சு வலிப்பதாகக் கூறி, காரில் ஏறியுள்ளார். காரிலேயே மயக்கமடைந்துள்ளார். வீட்டிலிருந்து, மருத்துவமனைக்கு அழைத்து வர, 20 நிமிடங்கள் ஆகியிருக்கலாம். அவர், மருத்துவமனைக்கு வரும்போது, பல்ஸ் குறைந்து, மூச்சின்றி, முற்றிலும் சுயநினைவின்றி இருந்தார். அவருக்கு, உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன், சிகிச்சை அளித்தோம். அப்போது, இதய ரத்த நாளங்களில், 100 சதவீதம் அடைப்பு இருந்தது. உடனடியாக, ஆஞ்சியோ பிளாஸ்டி வாயிலாக, அடைப்பை அகற்றி, 'ஸ்டென்ட்' பொருத்தப்பட்டது. அவரை மீட்டு வர பல்வேறு மருத்துவ முறைகளை கையாண்டோம்.


ஒரே நாளில் மாரடைப்பு ஏற்படுமா?

மாரடைப்பு என்பது, ஓரிரு நாட்களில் வருவதில்லை. 20 அல்லது 30 ஆண்டுகளில், நம் வாழ்க்கை முறையை பொருத்தே மாரடைப்பு ஏற்படுகிறது. தற்போதெல்லாம், இளம் வயதினருக்கும் மாரடைப்பு ஏற்படுகிறது. நடிகர் விவேக் பொருத்தவரையில், மாரடைப்புக்கான சில பிரச்னைகள் அவ்வப்போது அவருக்கு தென்பட்டிருக்கலாம். அவை, வழக்கமான உடல் வலி என, அலட்சியம் காட்டியிருக்கலாம்.


மக்களுக்கான அறிவுரை என்ன?

பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற உயரிய சிந்தனையோடு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நடிகர் விவேக், தன் குழுவினருடன் தடுப்பூசி போட்டுக் கொண்டார். எனவே, தடுப்பூசி குறித்து வதந்திகள் பரப்பி, அவற்றை கொச்சைப் படுத்த வேண்டாம். விவேக் மரணத்திற்கும், தடுப்பூசிக்கும் எவ்விதசம்பந்தமும் இல்லை. எனவே, அனைவரும் தடுப்பூசி போடுவதன் வாயிலாக, சமூக நோய் எதிர்ப்பு சக்தியோடு, நம்மையும் பாதுகாத்துக் கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news


ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை ஒருங்கிணைப்பு அதிகாரியான டாக்டர் ரமேஷ் கூறுகையில், ‛கொரோனா வைரசுக்கு எதிராக, தடுப்பூசிகள் மட்டுமே செயல்படும். தொற்றை கட்டுப்படுத்த நம்மிடம், தடுப்பு ஆயுதமாக தடுப்பூசி மட்டுமே உள்ளது. அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதன் வாயிலாக, நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியும். தொற்றை முழுமையாக கட்டுப்படுத்த முடியும். ஓமந்துாரார் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு, தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில், யாருக்கும் எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. அனைவரும், இரண்டாவது, 'டோஸ்' போட்டுக் கொள்ள ஆர்வமுடன் வருகின்றனர். எனவே, எவ்வித தயக்கமும் இன்றி, பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.,' என்றார்.
-- நமது நிருபர் --

Advertisement
வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
money -  ( Posted via: Dinamalar Android App )
24-ஏப்-202110:15:54 IST Report Abuse
money திமுக மற்றும் அதன் மீடியாக்களை ஒழித்தால் தமிழ்நாடு உருப்படும்.
Rate this:
Cancel
23-ஏப்-202107:21:15 IST Report Abuse
கண்ணன்   s   சென்னை அலோபதியில் ஓரு தலைவலி மாத்திரைக்கே பக்க விளைவுகள் உண்டு என்று சொல்லும் போது தடூப்பூசிக்கு பக்க விளைவுகள் ஓன்றும் இல்லை சாதரண காய்ச்சல் தான் என்று சொல்லுவது நம்பும் படியாக இல்லை
Rate this:
Cancel
பச்சையப்பன் கோபால் புரம். எந்த ஒரு நோயை அனுப்பும் போதும் கூடவே மருந்தையும் சேர்த்தே ஆண்டவன் அனுப்புகிறான்.
Rate this:
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
23-ஏப்-202104:15:09 IST Report Abuse
மதுரை விருமாண்டிஇப்படி வேறயா ?? கையாலாகா கடவுளுக்கு மருந்து கண்டுபிடிச்சதுக்கு பரிசா?? பாஜாக்கா பத்ம விருது கொடுக்குற மாதிரி இருக்கே.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X