உயிர் முக்கியமா... தேர்தல் முடிவு முக்கியமா...

Updated : ஏப் 22, 2021 | Added : ஏப் 22, 2021 | கருத்துகள் (61)
Share
Advertisement
ஓட்டு எண்ணிக்கையை தாமதப்படுத்த சில முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஏற்கனவே ஓட்டுப்பதிவு மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன; அதனால் இயந்திரங்கள் அதிகரித்துள்ளன. கொரோனா கெடுபிடிகளை காரணம் காட்டி, முடிவு அறிவிப்பதை இழுத்தடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.- தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜா'உயிர் முக்கியமா... தேர்தல் முடிவு முக்கியமா... 'மேல் மாடி காலி போல...' என, சரியாக
உயிர் முக்கியமா... தேர்தல் முடிவு முக்கியமா...

ஓட்டு எண்ணிக்கையை தாமதப்படுத்த சில முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஏற்கனவே ஓட்டுப்பதிவு மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன; அதனால் இயந்திரங்கள் அதிகரித்துள்ளன. கொரோனா கெடுபிடிகளை காரணம் காட்டி, முடிவு அறிவிப்பதை இழுத்தடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
- தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜா


'உயிர் முக்கியமா... தேர்தல் முடிவு முக்கியமா... 'மேல் மாடி காலி போல...' என, சரியாக சிந்திக்காதவர்களைப் பற்றி சின்ன பசங்க கிண்டலடிப்பாங்க... அது தான் நினைவுக்கு வருது...' என, சொல்லத் தோன்றும் வகையில், தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜா அறிக்கை.கொரோனா வெறியாட்டம் தீவிரமாகி கொண்டிருக்கிறது. மருத்துவர்கள் அரும்பாடு படுகின்றனர்; செவிலியர்கள் தியாகம் செய்கின்றனர். மக்களுக்கு தற்போதைய தேவை பொறுமை; தேவையில்லாதது கோபம். பொறுமை காக்கும்; சினம் அழிக்கும்.
- பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி


'பொறுமை கடலினும் பெரியது; இப்போதைய தேவை, பெருங்கடல் அளவு...' என, சொல்லத் தோன்றும் வகையில், பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை.பொள்ளாச்சியில் நடைபெற்று வரும், படம் ஒன்றின், 'ரீமேக்' படப்பிடிப்பில் பங்கேற்றேன். மறைந்த நடிகர் விவேக் படத்துக்கு படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பு மரியாதை செய்தோம். சமூக மாற்றத்துக்காகவும், சுற்றுச்சூழலை காக்கவும் குரல் கொடுத்த விவேக் வழி நடப்போம்.
- தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின்


latest tamil news
'பார்ப்போம், எவ்வளவு துாரம் செய்றீங்கன்னு...' என, சொல்லத் துாண்டும் வகையில், தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை.தமிழகத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சி இல்லாத சூழலில், இடைக்கால அரசின் தலைமைச் செயலர், கொரோனா அவசர நிலையை எதிர்கொள்வதற்கான, உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மருந்துகளை போதுமான அளவில் கையிருப்பு செய்ய வேண்டும்.
- விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்


'இடைக்கால அரசு இது என, உங்களுக்கு யார் சொன்னது? இந்த அரசின் பதவிக்காலம், மே 16 வரை உள்ளது...' என, நினைவுகூரத் துாண்டும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை.கோவாவில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு, 20 ஆயிரம் லிட்டர் திரவ ஆக்சிஜனை வழங்கிய, கேரள சுகாதார துறைக்கு நன்றி. கொரோனாவுக்கு எதிரான எங்கள் போராட்டத்தில், நீங்கள் அளித்த ஆதரவுக்கு, கோவா மக்கள் நன்றியுள்ளவர்களாக உள்ளனர்.
- கோவா சுகாதார அமைச்சர் விஸ்வஜித் ராணா


'இங்கே தமிழகத்தில், கம்யூ.,க்கள், காங்கிரசார், 'தடுப்பூசியை பிற நாடுகளுக்கு பிரதமர் ஏற்றுமதி செய்து விட்டார்; இங்கே, தட்டுப்பாடு வந்து விட்டது' என, குய்யோ முறையோ எனக் கூப்பாடு போடுகின்றனர்...' என, சொல்லத் தோன்றும் வகையில், கோவா சுகாதார அமைச்சர் விஸ்வஜித் ராணா அறிக்கை.கொரோனா தடுப்பூசிகளை வெளிச்சந்தையில் விற்க அனுமதிக்க வேண்டும். அதை வசதியானவர்கள் வாங்கிக் கொள்வர். அதன் மூலம், நலிந்த பிரிவினருக்கு தடுப்பூசி கிடைக்கச் செய்வதில், மாநில அரசுகள் கவனம் செலுத்த முடியும்.
- ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்


'நீங்கள் கேட்ட உடன், பிரதமரும் அனுமதி அளித்து விட்டாரே...' என, சொல்லத் தோன்றும் வகையில், ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிக்கை.


Advertisement


வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திராவிஷ கிருமி - ராமசாமிநாயக்கன்பாளையம் ,இந்தியா
22-ஏப்-202122:10:07 IST Report Abuse
திராவிஷ கிருமி அதாரு ராஜா... திகார் புகழ்... ராசா தான் தெரியும்...
Rate this:
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன்எச் ராசாவை தெரியுமோல்லியோ?...
Rate this:
Cancel
திராவிஷ கிருமி - ராமசாமிநாயக்கன்பாளையம் ,இந்தியா
22-ஏப்-202122:05:59 IST Report Abuse
திராவிஷ கிருமி தெரிந்தே... வேண்டுமென்றே விஷமத்தனமாகப் பேசுகிறான் குருமாப்பயல்...
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
26-ஏப்-202107:04:42 IST Report Abuse
madhavan rajanஇந்த லட்சணத்தில் இவர்கள் தமிழகத்தில் விடியல் தருவதாக வேறு விளம்பரம். .......... பசங்க....
Rate this:
Cancel
sivajothi.s - trichy,இந்தியா
22-ஏப்-202120:58:22 IST Report Abuse
sivajothi.s தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது கொரனவை பரப்பிவிட்டு இப்பொழுது உத்தம வேஷம் போடும் குள்ளநரிக்கூட்டம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X