நாடு முழுவதும் ஒரே விலையில் தடுப்பூசி விற்க காங்., வலியுறுத்தல்

Updated : ஏப் 22, 2021 | Added : ஏப் 22, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா தடுப்பூசியின் விலை மாநில அரசுகளுக்கு 400 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதற்கு காங். கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.'நாடு முழுவதும் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டோர் அடுத்த மாதம் 1-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்' என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இனி தடுப்பூசி உற்பத்தியில் 50 சதவீதத்தை மாநில அரசுகளும் தனியார் நிறுவனங்களும்
CovidVaccine, SamePrice, Congress, AjayMaken, தடுப்பூசி, கொரோனா, ஒரே விலை, காங்கிரஸ், அஜய் மக்கான்

புதுடில்லி: கொரோனா தடுப்பூசியின் விலை மாநில அரசுகளுக்கு 400 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதற்கு காங். கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

'நாடு முழுவதும் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டோர் அடுத்த மாதம் 1-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்' என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இனி தடுப்பூசி உற்பத்தியில் 50 சதவீதத்தை மாநில அரசுகளும் தனியார் நிறுவனங்களும் நேரடியாக கொள்முதல் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 'ஒரு டோஸ் 'கோவிஷீல்டு' தடுப்பூசி மாநில அரசுகளுக்கு 400 ரூபாய்க்கும் தனியாருக்கு 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும்' என சீரம் இந்தியா நிறுவனம் நேற்று (ஏப்.,21) அறிவித்தது.


latest tamil news


இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தி தொடர்பாளர் அஜய் மக்கான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு ஒரு டோஸ் தடுப்பூசியை 150 ரூபாய்க்கு வாங்குகிறது. மாநில அரசுகளுக்கும் அதே விலை நிர்ணயிக்கப்பட வேண்டும். இல்லையெனில் மாநில அரசுகள் கடும் நிதி சுமையை சந்திக்க நேரிடும். பாரபட்சமான இந்த முடிவை மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
மொத்தம் நான்கு கோடி மக்கள் தொகை கொண்ட ராஜஸ்தானில் 50 சதவீத மக்களுக்கு தடுப்பூசி போட அம்மாநில அரசுக்கு 3200 கோடி ரூபாய் செலவாகும். மாநில அரசுகளுக்கு இந்த பணம் எப்படி கிடைக்கும்? எனவே மத்திய மாநில அரசுகளுக்கு தடுப்பூசிகள் ஒரே விலையில் விற்பனை செய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
22-ஏப்-202120:16:44 IST Report Abuse
bal இதே காங்கிரஸ் ஆட்சில இருந்தா கொள்ளை அடிச்சிருப்பாங்க. மகா மாநிலத்தில் பண்ற கூத்து தெரியலையா...ராஜஸ்தான் பஞ்சாப் மாநிலங்களில் கொடுக்கலாமே..வாய் மட்டும் கிழியுது?
Rate this:
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
22-ஏப்-202116:59:14 IST Report Abuse
முக்கண் மைந்தன் அதான் தானே நேத்திக்கி வான்டெடா உள்ர பூந்து 600 ரூவாய்க்கி விய்யின்னு பச்செ கொடி காட்டியாச்சே
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
22-ஏப்-202116:22:38 IST Report Abuse
J.V. Iyer தமிழ் நாட்டிற்கு தொழிற்ச்சாலை கொண்டு வரும் பிரதமரை Go back Modi என்றவர்களுக்கு தடுப்பூசி கிடையாது. பாகிஸ்தானில் சென்று ஏற்றிக்கொள்ளலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X