பொது செய்தி

தமிழ்நாடு

இன்னொரு முழு ஊரடங்கு வேண்டாம்: விதிமுறை பின்பற்றி அனைவரும் ஒத்துழைக்க வேண்டுகோள்

Updated : ஏப் 22, 2021 | Added : ஏப் 22, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
கோவை : கடந்தாண்டு அனுபவித்த முழு ஊரடங்கை, இப்போது நினைத்தாலும் நெஞ்சம் படபடக்கிறது. 'இன்னொரு முழு ஊரடங்கை நினைத்துப்பார்க்கவே முடியவில்லை; வந்தால் மீள்வது சிரமம்' என்று பதறும் தொழில், வர்த்தக துறையினர், விதிமுறைகளை பின்பற்றி அனைவரும் ஒத்துழைத்தால், முழு ஊரடங்கை தவிர்க்கலாம் என்கின்றனர்.கொரோனாவின் தாக்குதலில் இருந்து மீண்டு, 'அப்பாடா...' என்று ஆசுவாசப்பட்டு
ஊரடங்கு, கோவை, தொழில்துறை, வர்த்தக துறை, கொரோனா, கொரோனாவைரஸ், கோவிட்19,

கோவை : கடந்தாண்டு அனுபவித்த முழு ஊரடங்கை, இப்போது நினைத்தாலும் நெஞ்சம் படபடக்கிறது. 'இன்னொரு முழு ஊரடங்கை நினைத்துப்பார்க்கவே முடியவில்லை; வந்தால் மீள்வது சிரமம்' என்று பதறும் தொழில், வர்த்தக துறையினர், விதிமுறைகளை பின்பற்றி அனைவரும் ஒத்துழைத்தால், முழு ஊரடங்கை தவிர்க்கலாம் என்கின்றனர்.

கொரோனாவின் தாக்குதலில் இருந்து மீண்டு, 'அப்பாடா...' என்று ஆசுவாசப்பட்டு நிமிரும் முன், இதோ இரண்டாவது அலை, ஆக்ரோஷமாக எழுந்துள்ளது. நோய் பரவலை கட்டுப்படுத்த, தற்போது துவங்கியுள்ள கட்டுப்பாடுகள் ஆரம்பம் தான்.பாதிப்புகள் குறையாவிட்டால், கட்டுப்பாடுகள் இன்னும் அதிகரிக்கும். மீண்டும் ஒரு முழுமையான ஊரடங்கு, 15 நாட்களுக்கு வருமானால், கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.15 நாள் ஊரடங்கு தொடர்ந்தால், வாழ்வாதாரமே பாதிக்கப்படும். பொருளாதாரம் மோசமடையும். தொழில் நகரமான கோவையின் இயக்கம் ஸ்தம்பிக்கும்.

இதை தவிர்க்க வேண்டிய கடமை, நம் ஒவ்வொருவரின் கைகளிலும் உள்ளது.நிலைமையை உணர்ந்து, ஒவ்வொருவரும் விதிமுறைகளை கடுமையாக பின்பற்றி, ஒத்துழைக்குமாறு கேட்கின்றனர், கோவை தொழில், வர்த்தக துறையினர்.


'75 சதவீத பாதிப்பு வரும்'


ஜவுளித்தொழிலை பொருத்தவரை, தொடர் செயல் திட்டங்களை கொண்டவை. இரவு பகல் எல்லா நேரங்களிலும் இயங்குவதால், இதன் உற்பத்தி சீராக இருக்கும். இரவு மற்றும் ஞாயிறு நிறுத்தப்படுவதால், ஜவுளித் தொழில் சுமார், 75 சதவீதம் வரை பாதிக்க வாய்ப்பு உள்ளது.
-அஸ்வின் சந்திரன்
தலைவர், தென்னிந்திய மில்கள் சங்கம் (சைமா)


'ரூ.500 கோடிக்கு பாதிப்பு'


இன்ஜினியரிங் தொழில் நிறுவனங்களுக்கு, மூலப்பொருட்கள் வருகை இரவில் மட்டுமே இருக்கும். எனவே, ஊரடங்கு இன்ஜினியரிங் தொழில்களுக்கு, பாதிப்பாக அமையும். உற்பத்தியில் 10 சதவீதம் வரை, இந்த கட்டுப்பாடுகளால் பாதிக்க வாய்ப்பு உள்ளது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, வணிகம் ரூ.500 கோடி வரை பாதிக்கப்படலாம்.
-கார்த்திக்
தலைவர், தென்னிந்திய இன்ஜினியரிங் உற்பத்தியாளர் சங்கம்(சீமா)


'20 - 30 சதவீதம் பாதிக்கப்படும்'


ஞாயிறன்று மட்டுமே, கோவையில் வணிகம் அதிக அளவில் இருக்கும். அன்றைய தினம்தான் பொதுமக்கள், ஜவுளி, ஜுவல்லரி, மளிகை உள்ளிட்ட பொருட்களை வாங்க வருவர். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஞாயிறு ஊரடங்கு உத்தரவால், ஒட்டுமொத்த வணிகத்தில், 20 முதல் 30 சதவீதம் பாதிப்பு ஏற்படும்.
-பாலசுப்பிரமணியம்,
தலைவர், இந்திய தொழில் வர்த்தக சபை.


latest tamil news'கட்டுப்பாடுகளை மதிக்கணும்'


நோய் தொற்றைத் தவிர்க்க விதிக்கப்படும் கட்டுப்பாடுகளால், விற்பனை குறையும்.பொருளாதாரம் பாதிப்படையும். நோய்த் தொற்று பாதிப்பு குறையும் வரை, கட்டுப்பாடுகளை பொதுமக்கள் மதித்து நடந்து கொள்ள வேண்டும். தற்போதுள்ள சூழ்நிலையில் காலை 9:00 முதல் இரவு 8:00 மணி வரை மட்டும், வணிக நிறுவனங்களை அனுமதிப்பது நல்லது.
-ரவிச்சந்திரன்
நிர்வாக இயக்குனர், பாரத் எலக்டிரானிக்ஸ்


'மீள்வது மிகவும் சிரமம்'


தொழில் செய்வோர், தொழிலாளர்கள், போக்குவரத்து, விநியோகம், விற்பனை வரை பெரும் பாதிப்பை ஊரடங்கு ஏற்படுத்தும். வெளிமாநிலங்களில் இருந்து ஜவுளி விற்பனைக்கு வருவதும், இங்கிருந்து பிற மாநிலங்களுக்கு பொருட்கள் செல்வதும் தடைபடுகிறது. மீள்வதற்கு நீண்ட நாட்கள் ஆகிவிடும். கட்டுப்பாடுகளை விதிக்கலாம்; முழு ஊரடங்கு வேண்டாம்.
-பாலச்சந்திரன்
மகாவீர் டெக்ஸ்டைல்ஸ்


'வேண்டாம் முழு ஊரடங்கு'


முழு ஊரடங்கு, நாட்டின் உற்பத்தி, பொருளாதாரத்தை பாதிக்கும். வெளிமாநில தொழிலாளர்கள் வெளியேறி விடுவர். இரவு ஊரடங்கால் நோய்த்தொற்று கட்டுப்படுத்தப்படுவதில்லை. மாறாக, இரவில் இயங்கும் தொழில் நிறுவனங்களும், தொழிலாளர்களும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். முழு ஊரடங்கு அமல்படுத்துவதை, மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
- செல்வராஜ்
பொது செயலாளர், தென்னிந்திய மில்கள் சங்கம்


'அனைவரும் ஒத்துழைக்கணும்'


கொரோனா கட்டுப்பாட்டுக்கு பயந்து, வெளிமாநில தொழிலாளர்கள் மீண்டும் சொந்த ஊருக்கு செல்ல முற்படுகின்றனர். தற்போதுதான் அழைத்து வரப்பட்ட இவர்கள், மீண்டும் சொந்த ஊருக்கு கிளம்பினால், கோவையிலுள்ள தொழில் நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்படும். எனவே, முழு ஊரடங்கை தவிர்க்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
- விஸ்வநாதன்
நிர்வாக பங்குதாரர், அம்மாருண் பவுண்டரி


ரியல் எஸ்டேட் துறையினர் கவலை


ரியல் எஸ்டேட் துறை, இப்போதுதான் மெள்ள மீண்டு வருகிறது. மீண்டும் முழு ஊரடங்கு வருமானால், வெளிமாநில கட்டுமான தொழிலாளர்கள் வெளியேறி விடுவார்கள் என்ற அச்சம், ரியல் எஸ்டேட் துறையினரை உறங்க விடாமல் செய்கிறது.

ராஜீவ், ஸ்ரீவத்ஸா நிறுவனம்: சென்ற ஆண்டு வெளிமாநில தொழிலாளர்கள் சென்றதால், கட்டுமானத்துறையில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. மீண்டும் தற்போது தொற்று பரவுவதால், தொழிலாளர்கள் மீண்டும் புறப்பட தயாராகி வருகின்றனர். இது கட்டுமான தொழிலை பாதிக்கும் என்பதால், முழு ஊரடங்கு வராமலிருக்க, விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்.

ராஜேஷ், ஸ்ரீவாரி நிறுவனம்:இப்போதுதான் மீண்டும் கட்டுமான தொழில், நல்ல நிலைக்கு திரும்பியுள்ளது. தொழிலில் முன்னேற்றம் ஏற்பட்டு வரும் இந்த சூழ்நிலையில், மீண்டும் ஒரு ஊரடங்கு வருமானால், அது கட்டுமானத் துறையில் பெரும் பாதிப்பை உருவாக்கும். எதிர்காலம் கவலை அளிக்கிறது.

பன்னீர் செல்வம், தலைவர், கோவை கட்டுனர் சங்கம்: நோய்த்தொற்று பரவல் காரணமாக, வெளிமாநில தொழிலாளர்களிடம், அச்சம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பான சூழ்நிலையில் இருந்தாலும், மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு விட்டால் என்ன செய்வதென்ற பதைபதைப்பு அவர்களிடம் உள்ளது. ஆகவே, மீண்டும் முழு ஊரடங்கு வந்து விடக்கூடாது.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
22-ஏப்-202120:43:12 IST Report Abuse
bal என்னா அரசியல் வாதிகள் தொழில் அதிபர்களிடம் அதிக ரொக்கம் வாங்கிவிட்டார்கள் தேர்தல் செலவுக்கு...இப்போ ஊரடங்கு பண்ணினால் மாபியா சும்மா இருக்காது..
Rate this:
Cancel
22-ஏப்-202119:38:11 IST Report Abuse
ஆப்பு விதிமுறைகளை பின்பற்றினா வீட்டில்தான் விழுந்து கிடக்கணும். எல்லோரும் மாஸ்க் போட்டுக்கிட்டு வெளியே வந்தால் சமூக இடைவெளி சாத்தியமில்லை. மொத்தத்தில் ஆள்பவர்களின் கையாலாகாத்தனத்திற்கு மக்கள் ஒத்துழைக்கலேனு சொல்லப் போறாங்க.
Rate this:
Cancel
M.Selvam - Chennai/India,இந்தியா
22-ஏப்-202113:15:59 IST Report Abuse
M.Selvam அரசை நடத்தும் தலைவர்களே முந்தாநாள் வரை ஆயிரக்கணக்கில் கூட்டம் சேர்த்து பரப்புரை பண்ணிய கூத்தை நாம் பார்த்தோம் ..அது தவிர மதம் சாமியார்கள் என்று ஐம்பது லட்சம் பேரு ஒரே இடத்தில குளித்த அவலத்தையும் பார்த்தோம் ..இப்போது நிலைமை இப்பிடி ஆனதற்கு தார்மீக பொறுப்பு நமது ஆளும் தலைவர்களையே சேரும்..அதற்க்கு பின்னர்தான் மக்கள் மற்றும் அவர்களின் அலட்சியம் ..மாஸ்க் அணியாமல் ,இடைவெளி விடாமல் சுத்தம் செய்யாமல் திரிவது..என்ன சமூகம் இது? மக்கள் ,தலைவர்கள் எல்லோருமே பொறுப்பில்லாமல் ...?இப்போது கூப்பாடு போடும் அதிகாரிகள் கடந்த ரெண்டு மாசமா காணாம போனவர்கள்தான் ..இப்போது வாக்ஸின் விஷயத்திலும் முதலில் இலவசம் என்று பீகார் தேர்தல் சமயத்தில் சொன்னவர்கள் இப்போது கம்பெனிகள் இஷ்டத்துக்கு விலை ஏற்ற அனுமதிக்கிறார்கள் ..என்னே நேர்மை ..புல்லரிக்குது
Rate this:
Narayanan.S - Chennai,இந்தியா
22-ஏப்-202117:40:18 IST Report Abuse
Narayanan.Sதலைவர்கள் கூப்பிட்டால் உடனே சென்றுவிடவேண்டியதுதானா தனிப்பட்ட அறிவு இல்லையா. அனைத்துக்கும் அரசே காரணமா. சுயஒழுக்கம் தேவை....
Rate this:
தமிழ்வேள் - THIRUVALLUR,இந்தியா
22-ஏப்-202119:34:11 IST Report Abuse
தமிழ்வேள்சாமியார்கள் உங்களை வற்புறுத்தி குளிக்க கூப்பிட்டார்களா ? நீங்களாக போனால் சாமியார் எப்படி பொறுப்பு ? பாதிரி குல்லாக்களால் கொரோனா பரவவில்லையா ? சாமியார்கள் என்ன கொரோனாவை உருவாக்குகின்றனரா இல்லை உற்பத்தி செய்கிறார்களா ? திராவிட இயக்க புத்தி இம்மி பிசகாமல் உள்ளது உங்களுக்கு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X