பொது செய்தி

இந்தியா

தினமும் 6,600 டன் ஆக்சிஜன் சப்ளை: மத்திய அரசு

Updated : ஏப் 22, 2021 | Added : ஏப் 22, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி: 'நாடு முழுதும் நாளொன்றுக்கு, 7,500 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில், 6,600 டன் மாநிலங்களுக்கு மருத்துவ பணிகளுக்காக வினியோகிக்கப்படுகிறது' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை தீவிமடைந்துள்ள நிலையில், ஆக்சிஜனுக்கு தடுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து, மத்திய சுகாதாரத் துறை செயலர், ராஜேஷ் பூஷண் கூறியதாவது: கொரோனா
Oxygen, Supply, Govt, States, Produced, ஆக்சிஜன், தயாரிப்பு, சப்ளை, மத்திய அரசு

புதுடில்லி: 'நாடு முழுதும் நாளொன்றுக்கு, 7,500 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில், 6,600 டன் மாநிலங்களுக்கு மருத்துவ பணிகளுக்காக வினியோகிக்கப்படுகிறது' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை தீவிமடைந்துள்ள நிலையில், ஆக்சிஜனுக்கு தடுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து, மத்திய சுகாதாரத் துறை செயலர், ராஜேஷ் பூஷண் கூறியதாவது: கொரோனா நோயாளிகளுக்கு, ஆக்சிஜன் என்பது, உயிர் காக்கும் மருந்தாகும். வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. தற்போது, நாடு முழுதும், 7,500 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில், 6,600 டன், மருத்துவ பணிகளுக்காக, மாநிலங்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.


latest tamil news


குறிப்பிட்ட, தவிர்க்க முடியாத சில தொழில்களைத் தவிர மற்றவற்றுக்கான ஆக்சிஜன் சப்ளை நிறுத்தப்பட்டு, மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.மாநிலங்களுக்கான சப்ளையின் அளவை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, வெளிநாடுகளில் இருந்து, 50 ஆயிரம் டன் ஆக்சிஜன் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் சப்ளை குறித்து, 24 மணி நேரமும் இயங்கும் கண்காணிப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது. சப்ளை தாமதமானால், அந்த கண்காணிப்பு அறைக்கு மாநிலங்கள் தெரிவிக்கலாம்.

இதுபோன்ற மிகப் பெரிய சவாலை சந்திக்கும்போது, அதுவும் இதுபோன்ற வைரஸ் பரவல் தீவிரமாக இருக்கும்போது, பல தரப்பட்ட நிர்வாகங்கள் இருக்கும்போது, பீதி அடைவதற்கும், குழப்பம் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால், மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டால், அவற்றை தவிர்க்க முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivaraman - chennai ,இந்தியா
22-ஏப்-202121:01:33 IST Report Abuse
Sivaraman உத்தரபிரதேச முதல்வர் மிகப்பெரிய அளவில் ஆக்சிஜென் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது தமிழ் நெஞ்சங்களுக்கு இன்னும் தெரியவில்லை . மற்ற மாநிலங்களுக்கு தெரிந்து பாராட்டு குவிந்து கொண்டு இருக்கிறது .
Rate this:
Cancel
JAYACHANDRAN RAMAKRISHNAN - Coimbatore,இந்தியா
22-ஏப்-202113:56:45 IST Report Abuse
JAYACHANDRAN RAMAKRISHNAN எவ்வளவு ஆக்சிஜன் 6600 டன்க்கு பதிலாக 66000 டன் ஆக்சிஜன் கொடுத்தாலும் அம்ஆத்மி, காங்கிரஸ், சிவசேனா, திரினாமுல் , திமுக, நம்ம ஊர் கமல் ஹாசன் போன்றவர்களுக்கு பத்தவே பத்தாது ஏனெனில் அவர்களுக்கு ஆக்சிஜன் என்றால் என்ன அதன் முக்கியத்துவம் என்ன என்பது மோடி கூறிய பின்னர் தான் இவர்களுக்கு தெரியும். மத்திய அரசோடு இணைந்து செயலாற்றும் அனைத்து அரசுகளும் கேரள உட்பட, கோரோணா ஒழிப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர். மற்றவர்கள் மோடியை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே மக்களை மன உளச்சலுக்கு உள்ளாக்கி கொண்டு உள்ளனர். மக்களுக்கு தற்போது ஆக்சிஜன் விட மிக முக்கிய தேவை மன தைரியம். தங்கள் வாழ்வாதரம் பாதிக்கபடாது என்ற நம்பிக்கையை அவர்கள் மனதில் முதலில் பதிய வைக்க வேண்டும். அப்போது தான் மக்களும் கோரோணா ஒழிப்பில் பூரண ஒத்துழைப்பு தருவர். மோடியை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அப்பாவி மக்களின் மனதில் நம்பிக்கையை ஊட்டுவதற்கு பதிலாக மக்களை மேலும் மேலும் பயமுறுத்தி கொண்டு உள்ளன எதிர்கட்சியினர். கண்டிப்பாக இதற்கு அவர்கள் ஒரு பெரிய இழப்பை சந்தித்தே தீருவர். கெடுவான் கேடு நினைப்பான்.
Rate this:
Bala - chennai,இந்தியா
22-ஏப்-202119:22:35 IST Report Abuse
Balaமிகச்சரியான பதிவு திரு ஜேஆர்...
Rate this:
Cancel
N.K - Hamburg,ஜெர்மனி
22-ஏப்-202113:36:48 IST Report Abuse
N.K தட்டுப்பாடு ஆகிசிஜனுக்கு இல்லை சிலிண்டர்களை. எந்த அளவுக்கு மருத்துவமனைகள் காலி சிலிண்டர்களை சுழற்சி முறையில் நிரப்புகிறார்கள் என்பது தான் பிரச்னை. காலி சிலிண்டர்கள் எல்லாம் பயன்பாட்டில் இருக்கும் பொழுது ஆக்சிஜென் உற்பத்தி போதுமானதாக இருந்தாலும் விநியோகிப்பதில் சிக்கல் ஏற்படும். தமிழகத்தில் பல மருத்துவமனைகளில் அணைத்து சிலிண்டர்களையும் ஒரு இடத்தில் வைத்து குழாய்கள்மூலம் நோயாளிகளின் படுக்கைக்கு விநியோகிக்கப்படுகிறது. இவ்வாறான சூழ்நிலையில் பிரச்னை இல்லை. சில மருத்துவமனைகளில் குழாய் முறை இல்லாமல் நேரடியாக ஒவ்வொரு நோயாளியின் படுக்கைக்கும் அருகில் ஒரு சிலிண்டர் வைத்து பயன்படுத்தும் இடங்களில் சிக்கல் ஏற்படுகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X