பொது செய்தி

இந்தியா

தடுப்பூசி செலுத்தியவர்களில் கொரோனா பாதிப்பு மிகக்குறைவே !

Updated : ஏப் 22, 2021 | Added : ஏப் 22, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா தடுப்பூசி போட்டவர்களில் குறைந்த சதவீதம் பேருக்கே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக புள்ளி விவர அறிக்கை தெரிவிக்கிறது. கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்களில் 0.04 சதவீதம் பேருக்கும், கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டவர்களில் 0.03 சதவீதம் பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை
Covaxin, Covishield, TestedPositive, SecondDose, கொரோனா, தடுப்பூசி, கோவாக்சின், கோவிஷீல்டு, பாதிப்பு, டோஸ்

புதுடில்லி: கொரோனா தடுப்பூசி போட்டவர்களில் குறைந்த சதவீதம் பேருக்கே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக புள்ளி விவர அறிக்கை தெரிவிக்கிறது.
கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்களில் 0.04 சதவீதம் பேருக்கும், கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டவர்களில் 0.03 சதவீதம் பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ள விளக்கம்: இதுவரை இந்தியாவில் 13 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதில் 1.1 கோடி பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 93,56,436 பேருக்கு முதல் டோஸூம், 17,37,178 பேருக்கு 2வது டோஸூம் செலுத்தப்பட்டுள்ளது. கோவாக்சின் தடுப்பூசியில் முதல் டோஸ் போட்ட 93 லட்சம் பேரில், 4,208 (0.04 சதவீதம்) பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இரண்டாவது டோஸ் போட்டவர்களில் 695 (0.04 சதவீதம்) பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

2 டோஸ் போட்ட பின் 5,700 பேருக்கு கொரோனா! தடுப்பூசி போட்டாலும் மாஸ்க் அவசியம்


latest tamil news


கோவிஷீல்ட் தடுப்பூசி இதுவரை 11 கோடிக்கும் அதிகமானவர்களுக்குச் செலுத்தப்பட்டுள்ளது. முதல் டோஸ் 10,03,02,745 பேருக்கும், இரண்டாவது டோஸ் 1,57,32,754 பேருக்கும் போடப்பட்டுள்ளது. இதில் முதல் டோஸ் போட்டவர்களில் 17,145 (0.02 சதவீதம்) பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. இரண்டாவது டோஸ் போட்டவர்களில் 5,014 (0.03 சதவீதம்) பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.

அதாவது, கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்களில் 0.04 சதவீதம் பேருக்கு மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டவர்களில் 0.02 முதல் 0.03 சதவீதம் பேருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும், தடுப்பூசி செலுத்தியவர்கள் கொரோனா தொற்று ஏற்பட்டால் அவர்களுக்கு தீவிர பாதிப்பு எதுவும் இல்லை என மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-ஏப்-202104:40:26 IST Report Abuse
ஆப்பு தடுப்பூசிதான் போட்டுக்கிட்டோமே... கொரோனா நம்மளை என்ன பண்ணும்னு ஏகத்துக்கு ஆட்டம் போடக்கூடாது.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
22-ஏப்-202120:53:10 IST Report Abuse
Vena Suna நம்புவோர் கெடுவதில்லை....நம்பி போடுங்கள்....
Rate this:
Cancel
Madhan - Chennai,இந்தியா
22-ஏப்-202112:23:20 IST Report Abuse
Madhan so admittedly the vaccines are not protective...? .
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
22-ஏப்-202121:29:18 IST Report Abuse
தல புராணம்Statistically they are more protected than those without vaccination....
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
23-ஏப்-202101:13:45 IST Report Abuse
தமிழவேல் ஊசி க்குப் பின் வந்தால், ஆஸ்பத்திரிக்கு (ICU) செல்லும் அளவிற்கு தாக்கம் இருக்காது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X