கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி, ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை இல்லை: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

Updated : ஏப் 22, 2021 | Added : ஏப் 22, 2021 | கருத்துகள் (42)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில், தேவையான அளவு ஆக்சிஜன், தடுப்பூசி, ரெம்டெசிவிர் மருந்துகள் ஆகியவை உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்து உள்ளது. ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை, தமிழக அரசின் ஒப்புதல் இன்றி, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்பியதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து
ஆக்சிஜன், தமிழகம், சென்னை உயர்நீதிமன்றம், சென்னை ஐகோர்ட், உயர்நீதிமன்றம், ஐகோர்ட்,

சென்னை: தமிழகத்தில், தேவையான அளவு ஆக்சிஜன், தடுப்பூசி, ரெம்டெசிவிர் மருந்துகள் ஆகியவை உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை, தமிழக அரசின் ஒப்புதல் இன்றி, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்பியதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டது. ரெம்டெசிவர் மருந்து கள்ளச்சந்தையில் விற்கப்படுவது எழுந்த புகார் தொடர்பாகவும் விசாரணைக்கு வந்தது.


latest tamil news



அப்போது, நீதிமன்றம், தமிழகத்தில் போதுமான அளவு ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளதா என கேள்வி எழுப்பியது. மேலும் சிகிச்சைக்கு தேவையான ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளதா என தமிழக அரசிடம் கேட்டு சொல்லும்படி தலைமை வழக்கறிஞரை கேட்டு கொண்டுள்ளது.

இன்று(ஏப்., 22) பிற்பகல் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியதாவது: தமிழகத்தில், ஆக்சிஜன், தடுப்பூசி, ரெம்டெசிவிர் தடுப்பு மருந்துகளுக்கு எந்த பற்றாக்குறையும் இல்லை. தெலுங்கானா, ஆந்திராவிற்கு ஆக்சிஜனை அனுப்பி வைத்ததால், தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை. தற்போது, 1,167 டன் ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளது. அரசு மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு பற்றாக்குறை இல்லை. தனியார் மருத்துவமனைகளில் 3 ஆயிரம் வெண்டிலேட்டர்கள் கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில், தடுப்பூசி செலுத்துவதற்கான கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனமத்திய அரசுக்கு அறிவுரை வழங்கினர்.

Advertisement




வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
23-ஏப்-202107:53:30 IST Report Abuse
 Muruga Vel மாதம் மும்மாரி பொழிகிறதான்னு கேக்கறது தான் பாக்கி .... தேங்கி கிடக்கும் வழக்குககளை முடித்து வைக்க ஏதாவது செய்யலாமே ..
Rate this:
Cancel
Sivaraman - chennai ,இந்தியா
23-ஏப்-202107:14:21 IST Report Abuse
Sivaraman மூன்றாவது அலையும் உலகத்தை ஆட்டி வருகிறது . விழிப்புணர்வு மிக மிக அவசியம்
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
23-ஏப்-202100:37:32 IST Report Abuse
Rajagopal மற்ற மாநிலங்களில் ஆக்சிஜன் தேவைப்படுமே? அதை நினைத்தீர்களா? நம் ஊரில் தண்ணீர் பஞ்சம் வந்தால் மற்ற மாநிலங்களிலிருந்து கேட்டு பெறுகிறோமே? அது போல மற்றவர்களை நினைக்க உங்களுக்கு வராதா, சுயநல திராவிட அரசியல்வாதிகளே?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X