வெற்று பேச்சு தேவையில்லை; தீர்வு தான் வேண்டும் - ராகுல்

Updated : ஏப் 22, 2021 | Added : ஏப் 22, 2021 | கருத்துகள் (109)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா பிரச்னைக்கு தீர்வு தான் வேண்டும். வெற்று பேச்சுகள் தேவையில்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் தெரிவித்து உள்ளார்.இந்தியாவில், கொரோனாவின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. நேற்று மட்டும் 3.14 லட்சம் பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் நாட்டு மக்கள் இடையே உரையாற்றிய பிரதமர் மோடி, ''கொரோனாவை கட்டுப்படுத்துவதில், ஊரடங்கு
Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி

புதுடில்லி: கொரோனா பிரச்னைக்கு தீர்வு தான் வேண்டும். வெற்று பேச்சுகள் தேவையில்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் தெரிவித்து உள்ளார்.

இந்தியாவில், கொரோனாவின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. நேற்று மட்டும் 3.14 லட்சம் பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் நாட்டு மக்கள் இடையே உரையாற்றிய பிரதமர் மோடி, ''கொரோனாவை கட்டுப்படுத்துவதில், ஊரடங்கு கடைசி ஆயுதமாகவே இருக்க வேண்டும். மக்கள் கட்டுப்பாட்டுடன் நடந்துகொண்டால், ஊரடங்கு தேவையில்லை. நாட்டின் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போட, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 'மருத்துவமனைகளில், படுக்கைகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன; மருந்துகள், ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்படாது. பொருளாதாரம் பாதிக்காத வகையில், வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடரும்,'' என தெரிவித்தார்.


latest tamil news


இது தொடர்பாக, கொரோனா தொற்று காரணமாக, தனது வீட்டில் தனிமைபடுத்தி கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளதாவது: நான் வீட்டில் தனிமைபடுத்தி கொண்டு உள்ளேன். நாடு முழுவதும் இருந்து வரும் அதிர்ச்சிகரமான செய்திகளை பார்த்து வருகிறேன். கொரோனா வைரசால் மட்டுமல், மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளாலும் இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டிற்கு வெற்று பேச்சுகளும், பயனில்லாத விழாக்களும் தேவையில்லை. இந்தியாவிற்கு, தீர்வு தான் உடனடி தேவை. இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (109)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ethiyan Sam -  ( Posted via: Dinamalar Android App )
23-ஏப்-202108:28:41 IST Report Abuse
Ethiyan Sam super ragul ji
Rate this:
Cancel
Endless - Chennai,இந்தியா
23-ஏப்-202107:48:17 IST Report Abuse
Endless ஆஹா, லக்கானகுமரனுக்கு கோவம் வந்தா என்ன ஆகும் தெரியுமா? ஒழுஙக தீர்வ சொல்லுஙக.... ஆமாம்
Rate this:
Cancel
23-ஏப்-202105:56:06 IST Report Abuse
வேலு தம்பி பப்பு....நீயோ உன் கட்சியை சேர்ந்தவர்கள் யாரும் பிரதமராக இல்லையே என்று மிகவும் நிம்மதியாக இருக்கிறோம்...தயவு செய்து தினத்துக்கு பிதற்றாமல் நீயும் உன் கூட்டணி கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் நிலவரம் கலவரமாகாமல் பார்த்துக்கொள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X