ஆக்சிஜன் உற்பத்திக்கு ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கலாம்: மத்திய அரசு

Updated : ஏப் 22, 2021 | Added : ஏப் 22, 2021 | கருத்துகள் (77)
Share
Advertisement
புதுடில்லி: நாடு முழுவதும் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளதால், ஆக்சிஜன் உற்பத்தி செய்ய மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழக்கும் சோகமும் நடந்து வருகிறது.
Sterlite, Oxygen, CentreGovt, ஸ்டெர்லைட், ஆக்சிஜன், மத்திய அரசு, அனுமதி

புதுடில்லி: நாடு முழுவதும் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளதால், ஆக்சிஜன் உற்பத்தி செய்ய மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழக்கும் சோகமும் நடந்து வருகிறது. இதனையடுத்து ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. ரயில்கள் மூலமும் ஆக்சிஜன் நிரப்பப்பட்ட லாரிகளில் தேவையுள்ள பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. இருப்பினும், மருத்துவமனைகளில் திரவ ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவுவதாகவும் தகவல்கள் வெளியாகிவருகின்றன.


தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தைத்தொடர்ந்து, 2018 ம் ஆண்டில் ஆலையை தமிழக அரசு மூடியது. கொரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், நாடு முழுவதும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மூடப்பட்டிருக்கும் தங்களது ஆலையில் 2 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் உள்ளன; இங்கு, தினமும் ஆயிரம் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும். எனவே, ஆலையை திறந்து பராமரிக்கவும் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்கவும் அனுமதி வழங்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வேதாந்தா நிறுவனம் மனு தாக்கல் செய்தது. இந்நிலையில், ஸ்டர்லைட்டை ஆலையை திறந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதிக்கலாம் என, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வக்கீல் துஷார் மேத்தா தெரிவித்தார். அதைக் கேட்ட தலைமை நீதிபதி ரமணா, கொரோனா நோய்க்கு ஆக்சிஜன் முக்கிய மருந்து.. எனவே கோர்ட் தாமாக இந்த வழக்கை விசாரிக்கும் என்றார். ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தயாராக இருக்கிறோம்; ஆலையை திறக்க அனுமதி தாருங்கள் என, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கும் ஸ்டெர்லைட் ஆலை தலைமைச் செயல் அதிகாரி பங்கஜ் குமார் கடிதம் அனுப்பியுள்ளார்.

latest tamil news



இந்தநிலையில், கடந்த 2018-ம் ஆண்டு, மே மாதம் மக்களின் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டுக்குப் பிறகு தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட நிலையில், ஆக்ஸிஜன் தயாரித்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு இலவசமாக வழங்க அனுமதி தருமாறு ஸ்டெர்லைட் ஆலை உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனுவைத் தாக்கல் செய்தது. வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், ‛நாள் ஒன்றுக்கு 1,050 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் திறனுடைய உற்பத்திக்கூடத்தில் தற்போதைய நிலையில், நாள் ஒன்றுக்கு 500 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து அனுப்ப தயாராக இருக்கிறோம்' எனக் குறிப்பிட்டிருந்தது.


latest tamil news


இந்த வழக்கு இன்று (ஏப்.,22) விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துசார் மேத்தா ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கலாம் என வாதிட்டார். அவரது பதில் மனுவில், ‛ஆக்சிஜன் மட்டும் உற்பத்தி செய்ய தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கலாம். நாட்டில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளதால், ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி தரலாம்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (77)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kadavul - Chennai,இந்தியா
23-ஏப்-202110:53:42 IST Report Abuse
kadavul கடவுள் இருக்கிறாரா இல்லையா அப்படிங்கிற சந்தேகம் வருகிறது
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
23-ஏப்-202109:56:32 IST Report Abuse
vbs manian ரங்கநாதன் சார் அருமை.
Rate this:
Cancel
பச்சையப்பன் கோபால் புரம். சந்தடி சாக்கில் ஆக்குஜிசன் என்ற பெயரில் உள்ளே நுழையப் பார்க்கிறான் இந்த ஸ்டீரிட்லைட் கம்பேனி. மரத் தமிழன் என்ன இளிச்சவாயனா? . லெமூரியா காலத்திலிருந்தே மரத்தமிழனுக்கு ஆக்குஜிசன் சப்ளை செய்வது மரம் செடி கொடிகள் மட்டுமே!! இரும்புக் குழாயிலிருந்து ஆக்குஜிசன் குடுக்கவே முடியாது. யாருகிட்ட???.மே2 வரை பொறுக்காமல் அதற்க்குள் என்ன அவசரம்.??.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X