பொது செய்தி

இந்தியா

ஆக்சிஜன் வினியோகத்தில் புதுமையான முறைகளை கடைபிடிக்க வேண்டும்: பிரதமர் மோடி

Updated : ஏப் 22, 2021 | Added : ஏப் 22, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி: நாடு முழுவதும் ஆக்சிஜன் வினியோகம் மற்றும் கையிருப்பை அதிகரிப்பது குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: ஆக்சிஜன் கையிருப்பை அதிகரிப்பது தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமரிடம் அதிகாரிகள் விளக்கினர். அப்போது, மாநிலங்களுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் அளவு மற்றும்
ஆக்சிஜன், பிரதமர் மோடி, ஆலோசனை, அதிகாரிகள்

புதுடில்லி: நாடு முழுவதும் ஆக்சிஜன் வினியோகம் மற்றும் கையிருப்பை அதிகரிப்பது குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: ஆக்சிஜன் கையிருப்பை அதிகரிப்பது தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமரிடம் அதிகாரிகள் விளக்கினர். அப்போது, மாநிலங்களுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் அளவு மற்றும் ஆக்சிஜன் சப்ளை குறித்து மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து அதிகாரிகள் விளக்கினர். தற்போது, 20 மாநிலங்களுக்கு தினமும், 6,785 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் தேவைப்படுகிறது. அந்த மாநிலங்களுக்கு தினமும் 6,822 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம் செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


latest tamil news



கடந்த சில நாட்களாக, தனியார் மற்றும் அரசு சார்ந்த தொழிற்சாலைகள், ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் மூலம் தினமும் 3,300 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கையிருப்பு வைக்கப்படுகிறது. அத்தியாவசியமில்லாத தொழிற்சாலைகளுக்கு ஆக்சிஜன் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. பொதுத்துறை ஆக்சிஜன் மையங்களை செயல்பாடு தொடர்பாக மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதாக அதிகாரிகள் பிரதமரிடம் தெரிவித்தனர்.

அப்போது பிரதமர் மோடி, பல திசைகளில் தொடர்ச்சியாக செயல்பட வேண்டும். ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். விநியோகிக்கும் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும். சுகாதார அமைப்புகளுக்கு ஆக்சிஜன் விநியோகத்தில் புதுமையான முறைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவித்தார். மேலும் மாநிலங்களுக்கு ஆக்சிஜன் விநியோகத்தை சுமூகமாக நடக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


உள்துறை உத்தரவு


இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: மருத்துவமனைகளுக்கு தங்கு தடையில்லாமல் ஆக்சிஜன் கொண்டு வர வேண்டிய பொறுப்பு மாநில அரசுகளுக்கு இருக்கிறது. அதன் காரணமாக, ஆக்சிஜன் ஏற்றி செல்லும் வாகனங்களை அதிகாரிகள் யாரும் தடுத்து நிறுத்தக்கூடாது. மருத்துவ தேவைகளுக்காக வாகனம் செல்லும் போது, தடுத்து நிறுத்தி சோதனை என்ற பெயரில், மணிக்கணக்கில் நிறுத்தி வைக்காமல், வாகனம் சுலபமாக செல்ல வேண்டிய வழியை உருவாக்கி தர வேண்டும். எந்த அதிகாரியும் ஆக்சிஜன் ஏற்றி செல்லும் வாகனத்தை தடுத்து நிறுத்தக்கூடாது ஆக்சிஜன் ஏற்றி செல்லும் வாகனங்கள் விரைந்து செல்வதை அனைத்து மாநில தலைமை செயலர்கள் உறுதிபடுத்த வேண்டும். இந்த விவகாரத்தில், தலைமை செயலர்கள் தனி கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vinay - Toronto,கனடா
22-ஏப்-202121:56:57 IST Report Abuse
Vinay எப்படி வாய வெச்சி ஊதி விடுவிங்கலா , உன் சாயம் வெளுத்து ரொம்ப நாளாச்சு , அதான் மக்களே எல்லாத்தையும் பார்த்துக்கணும்ன்னு சொல்லிடியில்லை , அப்பறம் என்ன புதுமை வாழுது , புடுங்குறது பூராவுமே தேவை இல்லாத ஆணியா இருக்கு....
Rate this:
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
22-ஏப்-202121:12:15 IST Report Abuse
முக்கண் மைந்தன் நாஞ்ஜொல்லுவேன் ஆனாக்க Patent rights ச அம்பானிக்கி, அதானிக்கி குடுத்துறப்படாது
Rate this:
Cancel
kmathivanan - Trichy ,இந்தியா
22-ஏப்-202118:17:25 IST Report Abuse
kmathivanan Jihadis எப்படி சந்தோஷம் பேசுறாங்க , நாட்டில் பிரச்சனை Athai அணுக வேண்டிய பரிவுணவுடன் இல்லாமல் அதில் ஒரு குரூர சந்தோசம்
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
22-ஏப்-202121:14:15 IST Report Abuse
தல புராணம்யாராவது நல்லது சொன்னா, தங்கவேலு மனைவி பூரி சுட்ட காமெடியா, "அதான் எனக்கு தெரியுமே, அதான் எனக்கு தெரியுமே" ன்னு சொல்லும் காமெடி பீஸ் அரசாங்கம்..அதுக்கு முட்டு கொடுப்பது உனக்கு அல்ப சந்தோசத்த தருதுன்னா, நல்லா முட்டு கொடு.....
Rate this:
Vinay - Toronto,கனடா
22-ஏப்-202122:01:15 IST Report Abuse
Vinayசொதப்பர வரைக்கும் சொதப்புரது, அப்புறம் பாரத் மாதக்கி ஜெய் சொல்லிடுனு கிளம்பிட வேண்டியது. கேட்டா எல்லாரையும் தேச துரோகி, தீவிரவாதி சொல்ல வேண்டியது......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X